பயப்படாதே,[அஞ்சாதே]நான் உங்களுடன் இருக்கிறேன்.எசாயா 43:5.
அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். வேதத்தில் 365 நாட்களுக்கும் 365 பயப்படாதே என்ற வார்த்தை இருக்கிறது. இது எதை குறிக்கிறது என்றால் நாம் ஒவ்வொருநாளும் பயப்படாமல் இருக்கும்படி நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. நாமும் இந்த வார்த்தையை பயன்படுத்தி ஜெபம் செய்து தைரியம் உள்ளவர்களாக மாறுவோம் நானும் எதற்க்கெடுத்தாலும் பயந்த சுபாவத்துடன் இருந்தேன். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை தினமும் வாசித்து தியானிக்கும் பொழுது என் பயம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன், கலங்காதே, நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன். என் நீதியின் வலது கரத்தால் உன்னை தாங்குவேன். எசாயா 41:10 ல் வாசிக்கலாம். நம்மை உண்டாக்கியவரும், நம் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கியவரும் நமக்கு உதவி செய்பவரும் அவரே. நான் தேர்ந்துக்கொண்ட எசுரூன் பயப்படாதே நீ அவமானதுக்குள்ளாக மாட்டாய்: வெட்கி நாணாதே. இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய் உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன்...