ஆண்டவரை நம்பினோர் நிச்சயம் அவராலே ஆசீர்வதிக்கப்படுவர்.
கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஆண்டவரையே முழுதும் பற்றிக்கொண்டு அவரையே நம்பி இருப்போமானால் நிச்சயம் நம்மை ஒருபோதும் கைவிடவேமாட்டார். யார் மூலமோ எதைக்கொண்டோ செயல்பட வல்லவராய் இருக்கிறார்.சுமார் கி.மு.1020 லிருந்து 1025 வரை உள்ள காலங்களில் ரூத் என்னும் சரித்திரத்தின் மூலம் நமக்கு வேதத்தில் ஒரு சம்பவம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அக்கால கட்டத்தில் எலிமெலேக்கு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் தனது மனைவி நகோமியோடும் தன் இரண்டு பிள்ளைகள் மக்லோன், கிலியோன் ஆகியரோடும் எருசலேமில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும்பொழுது ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் எருசலேமை விட்டு மோவாப் தேசத்துக்கு பிரயாணப்பட்டு போனார்கள். அந்த ஊரில் எவ்வளவோ ஜனங்கள் இருக்கும் பொழுது அவர்கள் மாத்திரம் அந்த ஊரை விட்டு வேறே ஊருக்கு போனார்கள். அங்கு போனால் அவர்கள் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் அங்கு போன சில வருஷங்களில் நகோமியின் கணவர் இறந்து விட்டார். அவளுடைய இரண்டு குமாரர் மாத்திரம் இருந்தார்கள்....