Tagged: தேவ செய்தி

ஆண்டவரின் அன்பிலே நிலைத்திருப்போம்.[யோவான் 15:9]

அன்பானவர்களே!ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நமக்கு ஆண்டவர் நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புக்கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை என்று சொல்கிறார். நாம் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடந்தோமானால் அவரின் அன்பிலே நிலைத்திருப்போம். ஏனெனில் உண்மையான திராட்சைக்கொடி அவரே. நாம் யாவரும் அதன் கிளைகள் ஆவோம். நாம் அவரோடு இணைந்து செயல்பட்டால் நாமும் மிகுந்த கனிகளை கொடுப்பவர்களாய் மாறுவோம். நாம் அவர் கட்டளை இடுவதையெல்லாம் செய்தால் நம்முடைய நண்பராய் இருப்பார். நண்பர்களுக்குள் எந்த ஒளிவும், மறைவும் இருக்காதே. அவர்கள் தங்கள் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்வார்கள். ஆண்டவரும் அதேபோல் நம்முடைய நண்பராய் இருந்து அவருடைய எல்லா விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொள்வார். அப்பொழுது நாமும் மிகுந்த கனியை கொடுக்கும்படி வாழலாம். நாம் ஆண்டவருக்குள்ளும்,அவருடைய வார்த்தைகள் நம்முடைய இருதயத்துக்குள்ளும் நிலைத்திருந்தால் நாம் விரும்பி கேட்கும் அத்தனை காரியங்களையும் நமக்கு கட்டளையிடுவார். நாம் கேட்காதவற்றையும் கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். தேவைகள் யாவையும் சந்திப்பார். உயிரையே கொடுத்த ஆண்டவர் மற்றவற்றையும் கொடுக்காமல்...

ஆண்டவர் தமக்குரியோர்மேல் இறுதிவரை அன்பு செலுத்தினார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இதோ, நமக்காக நம்மை நேசிக்க நம்மேல் அன்புக்காட்ட, நம்மை மீட்டிட அதுமட்டும் அல்லாது தமது உயிரையே கொடுக்க விண்ணிலிருந்து மண்ணுலகம் வந்து தமது உயிரைக் கொடுத்து தமக்குரியோர்மேல் இறுதிவரை அன்பு செலுத்திய அவரின் அன்பின் மகத்துவம் எத்துனை இன்பமானது என்று ஒவ்வொருவரும் அறிந்து ருசித்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறேன். இந்த நாளிலும் நம்மோடு அன்புக்காட்ட யாரும் இல்லையே என்று மனம் சோர்ந்துபோய் உள்ளீர்களா? கவலைப்படாதிருங்கள். நமக்காக ஏங்கி நாம் நன்றாக இருக்கும்படி தமது கண்ணை நம்மேல் வைத்து நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒருவர் உண்டு என்பதை மறக்கவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் நம்மேல் அன்பு காட்டுவார்கள்.திடீரென்று என்ன காரணம் என்றே தெரியாமல் வெறுப்பார்கள். மனிதர்களின் அன்பு அடிக்கடி மாறிவிடும். நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்கள்: அவர்களின் உயிர் நிலையற்றது. ஒரு பொருட்டாக கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என்ன? ஏசாயா 2:22. என் வாழ்நாளை சில விரற்கடை அளவாக்கினீர் என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை. உண்மையில் மானிடர்...

தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். நம்முடைய ஆண்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பெற்றோர் செய்த தச்சு தொழிலை நேசித்து தமது பெற்றோருக்கு கீழ்படிந்து அந்த தொழிலை செய்து வாழ்ந்து வந்ததாக நாம் வேதத்தில் வாசிக்கிறோம். வானத்தையும் பூமியையும் உருவாக்கிய தேவன் நான் எப்படி ஒரு தச்சு தொழிலை செய்வேன் என்று சொல்லவில்லை. அதற்கு மாறாக அந்த தொழிலை தமது பெற்றோருடன் செய்தார். இந்த நாளிலும் நாமும் நமக்கு ஆண்டவர் அவரவருக்கென்று ஒரு தொழிலையோ அல்லது வேறு ஏதாயினும் ஒரு பணியையோ கொடுத்து இருக்கலாம். நாமும் ஆண்டவரின் பிள்ளைகளாய் அவரின் மாதிரியை கடைப்பிடித்து நமக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுவோம். நாம் அவ்வாறு நமக்கு கொடுத்த வேலையில் ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருப்போமானால் நாம் நீசருக்கு முன்பாக நிற்காமல் இராஜாக்களுக்கு முன்பாக நிற்கிறவர்களாய் இருப்போம். ஏனெனில் கொஞ்சத்தில் உண்மையுள்ளவனை அநேகத்தின் மத்தியில் நம்மை கொண்டுவந்து...

கர்த்தர் தம்முடைய வார்த்தையினாலே தம்மை வெளிப்படுத்துவார்

கடவுளுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமது ஒவ்வொரு தேவைகளுக்கும் ஆண்டவரிடம் கேட்போமானால் அவர் நிச்சயம் நம்மை கைவிடாமல் தமது வார்த்தையை அனுப்பி நமது தேவைகளை சந்திப்பார். நம்மை பேர்சொல்லி அழைத்த தேவன் நம்மை முற்றும் முடிய காக்க வல்லவராய் இருந்து ஒரு தீங்கும் நம்மை தொடாமல் காப்பார். நாம் தனிமையில் தவிக்கும் பொழுது அவரின் வார்த்தைகள் நம்மை ஆற்றி, தேற்றும். நம் அருகில் நம்மோடு கூடவே இருந்து நம் கண்ணீரை துடைத்து அவருடைய அளவற்ற அன்பினால் அனைத்துக்கொள்வார். அவருடைய அன்பு என்ற தென்றல் காற்று நம்முடைய இதயத்தில் வீசும் பொழுது நமது துக்கம் யாவும் சந்தோஷமாக மாறும். கவலை, கண்ணீர் யாவும் மறைந்து விடும். நாம் 1 சாமுவேல் 3ம் அதிகாரத்தில் வாசிக்கும்பொழுது சாமுவேல் சிறு குழந்தையாய் இருந்தபொழுதே கர்த்தர் அவரை ஒருநாள் பெயர் சொல்லி கூப்பிடுகிறார். ஆண்டவர் தன்னை கூப்பிடுவதை அறியாத நிலையில் அவர் ஏலியினிடத்தில் போய் இதோ இருக்கிறேன். என்னை கூப்பிட்டீரே என்று கேட்கிறார். அதற்கு ஏலி...

நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் இருப்போம்

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நம்முடைய ஆண்டவரின் திருவுள சித்தத்தை நிறைவேற்றுவதில் சோர்ந்து போகாமல் இருந்து அவரிடம் கற்றுக்கொண்ட போதனையின்படியே வாழ்ந்து நற்செய்திகளை பின்பற்றி வாழ்வோம். நாம் எப்பொழுதும் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் இருக்க கற்றுக்கொள்வோம். உரோமையர் 16:19. இந்த உலகத்தின் போக்கின்படி இல்லாமல் நம் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைந்து எது நல்லது,எது உகந்தது,எது நிறைவானது என்பதை தெளிவாக கண்டு அதன்படியே வாழுவோம். நம்முடைய அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுவோம். தீமை நம்மை வெல்ல இடம் கொடுக்காமல் நன்மையால் தீமையை வெல்லுவோம். நாம் கடவுளிடம் அன்புகூர்ந்து அவரது திட்டத்தின்படி செய்தால் அழைக்கப்பட்ட நம்மை தூய ஆவியானவர் எல்லாவற்றிலும் நம்மை நன்மையாகவே வழிநடத்துவார். ஆனால் நாம் சமயத்தில் நன்மை செய்ய விரும்பினாலும் நம்மால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. ஏனெனில் நமது பிறவிக்குணம் அவ்வாறு செய்ய வைக்கிறது. ஆகையால்தான் நாம் ஆண்டவரின் இரத்தத்தால் கழுவப்பெற்று...