ஆண்டவரின் சொற்படியே வலைகளைப் போடுவோம்.லூக்கா 5:5
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தமக்கென 12 சீடர்களை தெரிந்துக்கொண்டு தம்முடைய வல்லமையை அவர்களுக்கும் அளித்து நீங்கள் எங்கும் சென்று என் நற்செய்தியை அறிவியுங்கள் என சொல்கிறார். ஒருநாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். திரளான மக்கள் அவரின் இறைவார்த்தையை கேட்பதற்கு நெருக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக்கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டு இருந்தனர். அப்படகுகளுள் ஓன்று சீமொனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்கு கற்பித்தார். அவர் பேசி முடிந்தபின்பு சீமோனை நோக்கி ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளை போடுங்கள்என்றார். ஆழத்திற்கு தள்ளிக்கொண்டுபோய் என்பதற்கு எதிர் காலத்தில் நாம் செய்ய வேண்டிய அருள்பணியைக் குறிக்கும். சீமோன் மறுமொழியாக ஐயா,இரவு முழுதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களை பிடித்தார்கள் வலைகள் கிழியத் தொடங்கவே...