சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்.லூக்கா 18:1
தாம் தேர்ந்துக்கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா?விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று இயேசு கிறிஸ்து லூக்கா 18:7,8 ஆகிய வசனங்களில் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். நாம் மனந்தளராமல் எப்பொழுதும் அவரிடம் மன்றாட வேண்டும். அப்படி செய்தால் நாம் விரும்பிய காரியத்தை நமக்கு தந்து நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார். ஒரு நகரில் ஒருவர் குடியிருந்தார்.அவர் கடவுளுக்கு பயப்படமாட்டார். மக்களையும் மதிக்க மாட்டார். அவர் இருந்த தெருவில் ஒரு விதவைப்பெண் வாழ்ந்து வந்தார். அந்த விதைவைப் பெண் ஒருநாள் அந்த மனிதரிடம் சென்று அவளுக்கு எதிராக செயல்படும் எதிரியை தண்டித்து தனக்கு நீதி செய்யுமாறு கேட்டாள். அந்த மனிதரோ காதில் வாங்கவே இல்லை.ஆனாலும் இந்தப்பெண் மனம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து அந்த மனிதனிடம் சென்று தனக்கு நீதி வழங்க்கும்படிக்கு தன் எதிரியை தண்டிக்கும்படி ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆனாலும் அந்த மனிதரும் நெடுங்காலமாய் எதுவும் செய்யாமல் கண்டுக்கொள்ளாமல்...