தாழ்ந்தோர் உயர்வர். உயர்ந்தோர் தாழ்வர். எசேக்கியேல் 21 : 26
இந்த உலகத்தில் நமக்கு நிலையான வாழ்வு கிடையாது. யாருக்கு எந்த நேரத்தில் என்ன சம்பவிக்கும் என்றும் தெரியாது. நாம் ஒவ்வொருநாளும் கடந்து செல்வது ஆண்டவரின் கிருபையால் மாத்திரமே. கடவுளுக்கு பயந்து அவரையே நம்பி வாழ்வோர் செழிப்பார்கள். அவரை அசட்டையும், அலட்சியமும் செய்கிறவர்கள் ஆண்டவரின் கோபத்துக்கு ஆளாவார்கள். உண்மையாகவே இது ஒரு சோதனை; அவர்கள் மனம்மாற மறுத்தால், இவை அனைத்தும் அவர்களுக்கு நிகழும் இஸ்ரயேல் ஜனங்கள் மனம் திரும்பாத நேரத்தில் ஆண்டவரின் கோபம் அவர்கள் மேல் விழுந்ததால் தானே அவர்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போனார்கள். எத்தனையோ இறைவாக்கினரை அனுப்பியும் அவர்கள் ஆண்டவரின் வாக்கை புறக்கணித்ததால் ஆண்டவரும் அவர்களை புறக்கணித்து பகைவர்களிடம் ஒப்புக்கொடுத்தார். கிருபையின் நாட்களில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிற நம்மேல் ஆண்டவரின் கோபம் வராதபடிக்கு நாம் நம்மை தாழ்த்தி அவரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டால் நம்மை உயர்த்துவார். அவருக்கு அஞ்சி நடப்போருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவார். சிறியோருக்கும், பெரியோருக்கும் ஆசி வழங்குவார். உங்களையும்,உங்கள் பிள்ளைகளையும் வளரச் செய்வார். விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது. மண்ணகத்தையோ நமக்கு அளித்திருக்கிறார். இறந்தோர் ஆண்டவரை...