கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களை காப்பார்
இயேசுகிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப் பட்டவர்களாயுமிருக்கிற ஒவ்வொருவரின் பாதங்களையும் ஆண்டவர் காத்துக்கொள்வார். யார் அந்த பரிசுத்தவான் கள் என்றால் அவருக்கு கீழ்படிந்து பயந்து,அவரின் சித்தத்தை செயல்படுத்தும் ஒவ்வொருவரும் பரிசுத்தவான்களே ஆவார்கள். அவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு அவரின் இரத்தத்தால் தூய்மையாக்கப்பட்டு அவருடைய நற்செய்தியை அறிவிப்பாளர்களாகவும் அவரின் நல்வாழ்வைப் பலப்படுத்தும் நலம்தரும் செய்தியை உரைத்து, அவர் தரும் விடுதலையை எல்லாம் மக்களும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் பறைசாற்றி நம் கடவுள் ஒருவரே அரசாளுகின்றார் என்று எடுத்துரைத்து வருபவர்களின் பாதங்களை ஆண்டவர் அழகாக ஒரு தீங்கும் அவர்களை தொடாதபடிக்கு அவர்களுடைய பாதங்களை காப்பார். ஏசாயா 52:7 :நாகூம் 1:15 மற்றும் உரோமையர் 10:15 ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். அப்பேற்பட்ட பரிசுத்தவான்கள் உலகத்தை நியாந்தீர்ப்பார்களென்று நாம் அறிந்து கொள்ளவேண்டும். நமக்கு ஒரு வழக்கு ஏதாவது உண்டானால் நாம் அவர்களிடம் சென்று நமது வழக்கை தீர்த்துக்கொள்ளலாம் என்று 1 கொரிந்தியர் 6:1,2,3 ஆகிய வசனங்கள் கூருகிறது. அவர்கள் தேவதூதர்களையும் நியாந்தீர்ப்பார்கள் . ஆண்டவர் இந்த உரிமையை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்ட...