Tagged: தேவ செய்தி

தனித்து வேண்டியபோது !

தான் யார் என்பது பற்றி இயேசு ஒரு சுய ஆய்வு மற்றும் பொது ஆய்வு நடத்தி அறிந்துகொண்டார் என்பது ஆழ்ந்து சிந்தித்தால் வியப்பு தருகின்ற ஒரு செய்தி. ஒவ்வொரு மனிதரும் அவ்வப்போது செய்துகொள்ளவேண்டிய ஒரு பணி தன் பணியும் வாழ்வும் பற்றிய ஆய்வு. இதில் தன்னாய்வும் இருக்க வேண்டும், பிறருடைய கருத்துக் கணிப்புகளும் இடம் பெறவேண்டும். இதன்படியே, இயேசுவும் தன்னாய்வு ஒன்றை மேற்கொண்டார். அதற்கு உதவியாகத் தம் சீடர்களிடம் மக்களின் கருத்தை அறிந்துகொள்கிறார். ஆனால், இந்தத் தன்னாய்வுக்கு முன் அவர் என்ன செய்தார் என்பதையே இன்றைய சிந்தனைக்காக நாம் எடுத்துக்கொள்ளலாம். அவர் தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் என்று பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர். ஆம், தனித்திருந்தார், வேண்டுதல் செய்துகொண்டிருந்தார். தனிமையும், இறைவேண்டுதலும்தான் தன்னாய்வு செய்வதற்குரிய அருமையான சூழல்கள். இயேசு நமக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார். நாமும் அவரைப் போல அவ்வப்போது தனித்திருக்கவும், இறைவேண்டலில் ஈடுபடவும் அத்தகைய வேளைகளில் நம் வாழ்வு மற்றும் பணிகள் பற்றிய...

”இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” (லூக்கா 9:9)

இயேசு கலிலேயாவில் ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவித்தபோது புதுமைகள் பல நிகழ்த்தினார். அவரைப் பற்றி எல்லாரும் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இயேசு யார் என்னும் கேள்விக்குப் பலரும் பல பதில்களைத் தந்தனர். ஏரோதுவின் ஆணைப்படி கொல்லப்பட்ட திருமுழுக்கு யோவான் மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றுகூட மக்கள் இயேவைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததுண்டு. ஆனால் ஏரோது அப்படி நினைக்கவில்லை. அவன்தான் யோவானின் தலையைக் கொய்துவர ஆணையிட்டவனாயிற்றே. யோவான் இறந்தொழிந்தார் என்பது ஏரோதுவுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பேசிக்கொண்டது வேறு ஒருவரைப் பற்றித்தான் என்பது ஏரோதுவுக்குப் புரிந்தது. என்றாலும் அந்த மர்ம மனிதர் யார் என்பதை ஏரோது தெரிந்திருக்கவில்லை. இயேசு யார் என நமக்குத் தெரியுமா? பலரும் இயேசு யார் என்பதைத் தெரிந்ததுபோல நினைத்துக்கொள்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் எத்தனையோ மக்கள் இயேசுவை யார் என அடையாளம் தெரியாமலே வாழ்கின்றார்கள். இவர்களுள் கிறிஸ்தவரும் உண்டு, பிறரும் உண்டு. ”புதியது என்று...

”பயணத்திற்கு…எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்” (லூக்கா 9:3)

பயணம் போவது சில வேளைகளில் மகிழ்ச்சியான ஓர் அனுபவமாக இருக்கும்; வேறு சில வேளைகளில் அது துயரமானதாகவும் இருக்கலாம். எத்தகைய பயணமாக இருந்தாலும் தாங்க முடியாத அளவுக்கு சுமைகளைக் கட்டிச் சென்றால் அந்தப் பயணம் இனிமையாக இராது. சுமையைக் கவனிப்பதிலேயே சக்தியெல்லாம் வீணாகிப் போனால் பயணத்தின் நோக்கம் நிறைவேறியது எனக் கூற முடியுமா? வாழ்க்கை முழுவதுமே ஒரு பயணம் எனலாம். இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லாத போதும் பெரிய சுமைகளை நாம் நம்மோடு கொண்டுபோவதாக இருந்தால் அச்சுமைகள் நம்மை அழுத்திவிடக் கூடும். எனவே, ”கைத்தடி, பை, உணவு, பணம்” போன்ற பொருள்களைப் பயணத்திற்கென எடுத்துச் செல்ல வேண்டாம் (காண்க: லூக்கா 9:3) என்று இயேசு பன்னிருவருக்குக் கூறிய சொற்கள் நமக்கும் பொருந்தும். நம் உடைமைகளே நம் வாழ்க்கையை நிறைத்துவிட்டால் கடவுளுக்கு அங்கே இடமில்லாமல் போகும். அதே நேரத்தில் நம் வாழ்க்கை முற்றிலும் வெறுமையாக மாறிவிட்டால் நாம் கடவுளைப் பழிக்கத் தொடங்கிவிடுவோம்....

வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள் !

இன்றைய நற்செய்தி வாசகம் ஒரு வித்தியாசமான காட்சியையும், செய்தியையும் நமக்குத் தருகின்றது. இயேசுவின தாயும், சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால், மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. எனவே, உம் தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள் என்று இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டது என்று வாசிக்கிறோம். இந்தக் காட்சியை இரண்டு கோணங்களில் அணுகலாம். இயேசுவின் கோணம் மற்றும் அன்னை மரியா மற்றும் சகோதரர்களின் கோணம். இயேசுவின் கோணத்திலிருந்து பார்த்தால், சொந்தத் தாயும், உறவினர்களும் வந்திருந்தும்கூட அவர்களைக் காண இயலாதபடி பெருந்திரளான மக்களுக்கு அவர் போதித்துக்கொண்டிருந்தார். தன் சொந்த குடும்பத்தினரைவிட தந்தை இறைவன் தந்த பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை அறியலாம். அன்னை மரியாவின் கோணத்திலிருந்து பார்த்தால், பரபரப்பான இறைப் பணியில் ஈடுபட்டிருந்த தம் மகனைப் பற்றி அந்தத் தாய் பெருமிதம் அடைந்திருப்பார். அத்தோடு, அவரது பணிக்கு இடையூறு செய்யாமல், ஆவலுடன் வெளியே காத்துக்கொண்டிருக்கவும் முன் வந்தார். இது...

“கற்றுக்கொள்ளுங்கள்”!

இயேசு ஒரு நல்லாசிரியர். அவர் விண்ணரசின் பாடங்கள் பலவற்றையும் தம் சீடர்களுக்குக் கற்றுத் தந்தார். அவரிடமிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள அழைப்பும் விடுத்தார். இளைப்பாறுதலைப் பற்றிப் பேசும்போது, “என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்” (மத் 11: 29) என்று சொன்னவர், இன்றைய வாசகத்தில் “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்” என்கிறார். காரணம், இந்த செய்தி அவர்களுக்குப் புதியதல்ல. இறைவாக்கினர் ஓசேயா நூலில் அவர்கள் கற்றறிந்த செய்திதான். ஓசேயா வழியாக இறைவன் “உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன். எரிபலிகளைவிட கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்” (ஓசே 6:6) என்று மொழிந்திருந்தார். ஆனால், பரிசேயர் இந்த உண்மையை உள்வாங்கவில்லை. எனவேதான், “உங்கள் மறைநூல் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள், மீண்டும் கற்றுக்கொள்ளுங்கள்” எனச் சொல்லாமல் சொல்கிறார் இயேசு. நமக்கு இதில் ஒரு பாடம் இருக்கிறது. நாமும் திருநூல், மறைக்கல்வி நூல்களைக் கற்றிருக்கிறோம். ஆனால், அவற்றின் அடிநாதமான மானிட நேயத்தை,...