தேவையானது ஒன்றே !
(லூக்கா 10:40) உபசரிப்பது என்பது நல்ல பண்பாடு மட்டுமல்ல, ஒரு விவிலிய மதிப்பீடும்கூட. வழிப்போக்கர்களை வரவேற்றுப் பணிவிடை செய்ததால், தங்களை அறியாமலே வானதூதருக்குப் பணிவிடை செய்தவரும் உண்டு எனப் பவுலடியார் கூறியுள்ளார். ஏழைகளை, ஒடுக்கப்பட்டோரை, சமூகத்தில் யாருக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுவதில்லையோ, அவர்களை வரவேற்று, உபசரிப்பது இறைவனுக்கே செய்யும் பணிவிடை. எனவேதான், சின்னஞ் சிறு என் சகோதர சகோதரிகளுக்குச் செய்யும்போதெல்லாம், எனக்கே செய்தீர்கள் என இயேசு மொழிந்தார். முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் மூவர் வந்தபோது, ஆபிரகாம் அவர்களை வரவேற்று, மிகுந்த ஈடுபாட்டுடன் உபசரித்தார். அதனால், இறையாசியை நிறைவாகப் பெற்றுக்கொண்டார். மார்த்தாவும், மரியாவும் ஆண்டவர் இயேசுவைத் தங்கள் இல்லத்தில் வரவேற்று, உணவு வழங்கி, அவரோடு உறவாடினர். பணிவிடையோடு, பாதம் அமர்ந்து உரையாடியது இயேசுவைக் கவர்ந்தது. நாமும் உதவிகளோடு, நட்புறவும் வழங்கினால், அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். மன்றாடுவோம்: எங்கள் இல்லங்களில் மறைவான விருந்தாளியாம் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் மத்தியில் வாழும் எளியோரைக் கண்ணோக்கி,...