குழந்தை வளர்ப்பு !
இல்லத்தில் குழந்தைகள் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும் என்னும் பாடத்தை இன்றைய நற்செய்தி வாசகம் (+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 36-40) நமக்குக் கற்றுத் தருகிறது. நாசரேத்துக்குத் திரும்பிச் சென்ற குழந்தை ”வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து, கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது” என்று இன்றைய வாசகம் நிறைவுபெறுகிறது. குழந்தை வளர்ப்பின் மூன்று அம்சங்களை இந்த வாக்கியம் எடுத்துரைக்கிறது: 1. வலிமை: குழந்தைகள் உடலிலும், உள்ளத்திலும், ஆன்மாவிலும் வளர்ந்து, வலிமை பெற வேண்டும். பொதுவாக, பெற்றோர்கள் குழந்தையின் உடல் வலிமைக்குத் தரும் முதன்மை உள்ள மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், வலிமைக்கும் தருவதில்லை. அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். 2. ஞானம்: குழந்தை வளர்பின் இரண்டாம் அம்சமாக ஞானம் இடம் பெறுகிறது. இறையச்சமே ஞானத்தின் தொடக்கம் என்று இறைமொழி உரைக்கிறது. எனவே, குழந்தைகளை இறைப்பற்றில் பெற்றோர் வளர்க்க வேண்டும். 3. குழந்தைகள் கடவுளுக்கும், பெற்றோருக்கும், சமூகத்துக்கும் உகந்தவர்களாக வளர வேண்டும். ஏதாவது...