Tagged: தேவ செய்தி

இறைவார்த்தை நம்மை ஆட்கொள்ளட்டும்

எசேக்கியேல் 2: 8 – 3: 4 இன்றைய வாசகத்தில், ஆண்டவர்,எசேக்கியேலைப் பார்த்து கூறுகிறார்: ”உன் வாயைத் திறந்து நான் தருவதைத் தின்றுவிடு…….. நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்ன கொடுத்தார்”. வார்த்தைகளைத் தின்பது, வார்த்தைகள் அடங்கியுள்ள சுருளேட்டைத் தின்பது என்கிற செய்தி, நமக்கு புதுமையாக இருந்தாலும், விவிலியத்தில் இது புதிதாக கொடுக்கப்படுகிற சிந்தனை அல்ல. ஏற்கெனவே ஒரு சில பகுதிகளில், இது போன்ற சிந்தனைகள் தரப்பட்டிருக்கின்றன. எரேமியா 15: 16, ”நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன. என் உள்ளத்திற்கு உவகை அளித்தன”. யோவான் 6: 53 – 58 பகுதியும், இயேசு எப்படி வாழ்வு தரும் உணவாக இருக்கிறார் என்றும், அவருடைய சதையாக நமக்குத் தரப்படுகிற இறைவார்த்தையை உண்பவர்கள் வாழ்வு பெறுவார் என்று நமக்கு அழைப்புவிடுக்கிறார். திருவெளிப்பாடு 10: 8 – 9, ”விண்ணகத்திலிருந்து நான்...

நல்ல குடிமக்களா? நாட்டை மதியுங்கள்…

மத்தேயு 17:22-27 இயேசுவும் சீடர்களும் எங்கெல்லாம் சென்றாலும் அவர்களை மறைநூல் அறிஞர்களும், சதுசேயர்களும், பரிசேயர்களும் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இயேசுவை எந்த ஒரு பெரிய கண்ணியிலும் சிக்க வைக்க முடியாதவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்கிறார், ஓய்வு நாளை மதிப்பதில்லை போன்ற சில காரணங்களை வைத்துக் கண்டு அவரை தீர்த்துக் கட்டவும் அவர்களால் முடியவில்லை. ஆகவே புதிய ஒரு முயற்சியை கையிலெடுத்தனர். அதுதான் வரி செலுத்தவில்லை என்பது. அந்நாட்களில் உரோமை எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும் ஏராளமான வரிகளை மக்கள் செலுத்தவேண்டியிருந்தது. அதில் முக்கியமான இரண்டு வரிகள், ஒன்று நிலவரி, இன்னொன்று சொத்து வரி. சொத்து வரி என்பது விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை அரசுக்கு வரியாகச் செலுத்துவது. விளைவது பழவகைகள் என்றால் அவற்றில் ஐந்தில் ஒரு பங்கை வரியாகச் செலுத்தவேண்டும். இவை தவிர ஒவ்வொரு முறை நகருக்குள் நுழைவதற்கும், வியாபாரத்திற்கும், அதற்கும் இதற்கும் என...

திருத்தலங்களின் மகிமையும் மாண்பும்

இன்றைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ ஊர்களில் ஒருவிதமான “திருத்தல” நோய் பரவி வருகிறது. எப்படியாவது நமது ஆலயத்தை திருத்தலமாக மாற்றிவிட வேண்டும் என்கிற, வியாபார ரீதியாக போக்கு, மக்கள் மனதில் பரவி வருவது வேதனைக்குரியது, ஆனால் உண்மையானது. இதனை நாம் மறுக்க முடியாது. எதையாவது வித்தியாசமான ஒன்றைச் செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்து, ஏதோ சாதனையைச் செய்துவிட்டோம், கூட்டத்தைக் கூட்டிவிட்டோம் என்கிற பாணியில் செயல்படுவது, கடவுளின் பணியாளர்கள் மத்தியிலும் அதிகமாகி வருகிறது. இவையனைத்துமே, கடவுளை வைத்து, வியாபாரம் செய்யக்கூடிய போக்கையே காட்டுகிறது. ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. எங்கே பணம் இருக்கிறதோ, அங்கே பிரச்சனைகளும் அதிகமாக இருக்கிறது. இந்த உண்மையே, நாம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. திருத்தலம் என்பது இறையனுபவத்தை நமக்குப் பெற்றுத்தரக்கூடிய கடவுளின் அனுபவத்தைப் பெற்றிருக்கிற ஓர் உன்னதமான இடம். அது கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்க வேண்டும். வரக்கூடிய மக்களின் ஆன்மீக தேவைகளை...

அமைதி காப்போம்

இயேசுவின் உருமாற்ற நிகழ்வின் போது, இயேசுவுக்கு நெருங்கிய சீடர்கள் மூன்றுபேர் அவரோடு இருக்கிறார்கள். மோசே, எலியாவோடு, இயேசு நெருங்கியிருப்பதையும், மாட்சிமையோடு நிறைந்திருப்பதையும் பார்த்து, அவர்கள் அதிர்ச்சி கொள்கிறார்கள். அவர்களுக்குள் நிச்சயம் பல கேள்விகள் எழும்பியிருக்கும். இயேசு உண்மையில் யார்? தாங்கள் பார்ப்பது உண்மைதானா? அல்லது கனவா? ஏதோ காட்சி கண்டது போல இருக்கிறதே? இயேசுவோடு தோன்றிய மற்ற இரண்டு மனிதர்கள் யார்? இவைகள் தான், அவர்களது உள்ளத்திற்குள்ளாக எழுந்திருக்கலாம் என்று நாம் ஊகம் செய்யக்கூடிய கேள்விகள். நிகழ்வின் கடைசியில் சொல்லப்படுகிற “அமைதி காத்தார்கள்“ என்கிற வார்த்தைகள் நமது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. எதற்காக அமைதி காத்தார்கள்? ஏன் மற்ற சீடர்களிடம் அவர்கள் சொல்லவில்லை? இந்த அமைதி எது வரை இருந்தது? சீடர்கள் நிச்சயம் பயத்தில் உறைந்திருப்பார்கள். இயேசுவை வெறும் போதகராக, மக்கள் விரும்பும் நல்ல மனிதராகப் பார்த்தவர்களுக்கு குழப்பம் தான் அதிகரித்திருக்குமே ஒழிய, தெளிவு கிடைத்திருக்காது. ஆனாலும், சீடர்கள் அமைதி காக்கிறார்கள்....

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...