Tagged: தேவ செய்தி

தெளிவான இலக்கு

இயேசு தனது சீடர்களை கடவுளின் பணிக்காக அனுப்பும்போது, பிற இனத்தவரின் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். இயேசு கடவுளின் மகன். இந்த உலகத்தையே படைத்து பராமரிக்கிறவர். இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அவரின் பிள்ளைகள். அப்படியிருக்க, இயேசு இப்படிப்பட்ட ஒரு குறுகிய எண்ணத்தை பறைசாற்றும் அறிவுரையைக்கூற வேண்டுமா? இயேசு குறுகிய மனம் கொண்டவரா? இயேசு சிதறிப்போன மக்களுக்காக மட்டும்தான் வந்தாரா? புறவினத்து மக்கள் கடவுளின் பிள்ளைகள் இல்லையா? என்ற கேள்விகள் நம் மனதில் நிச்சயமாக எழும். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்: ”ஆழக்கால் வைத்தாலும், அகலக்கால் வைக்காதே”. இயேசுவின் இலக்கு இந்த உலகமெங்கிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென்பது. அந்த திட்டத்தை செயல்படுத்த பல முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொள்கிறார். அதனுடைய ஒரு செயல்முறை திட்ட அடிப்படையில்தான், தனது எல்லையை சிறிது, சிறிதாக, படிப்படியாக விரிவுபடுத்துகிறார். யூத மனநிலையில் இருக்கிற தன்னுடைய சீடர்களையும் மெதுவாக பக்குவப்படுத்தும் பணியை இயேசு செய்தாக வேண்டும். ஒரேநாளில்...

எதிர்பார்ப்புகள்

சோதோம், கொமோரா ஆகிய இரண்டு நகர்களும் அழிக்கப்படுவதை தொடக்கநூல் 19: 23 – 29 ல் பார்க்கிறோம். இந்த இரண்டு நகர்களும் அழிக்கப்பட்டதற்கு காரணம் விருந்தோம்பல் பற்றிய சட்டத்தை மீறியதுதான். விருந்தோம்பல் என்பது இஸ்ரயேல் மக்களுக்கு முக்கியமானது. வருகிறவர்களை அழைத்து நல்லமுறையில் உபசரிக்க வேண்டும். ஆனால், வரவேற்கவேண்டியவர்களே, அவர்களை தங்களின் ஆசைக்கு இணங்கச்செய்ய முயற்சி செய்தபோது, அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அந்த வேளையில் ஆபிரகாம் அவர்களுக்காக மன்றாடுகிறார் (தொடக்கநூல் 18: 16). ஆனாலும், மனம்மாறவேண்டியவர்கள் வாய்ப்பினைப் பயன்படுத்தவில்லை. அந்த இரண்டு நகர்களில் உள்ளவர்களும் கடவுளின் செய்தி அவர்களுக்கு தரப்பட்ட போது அதை பொருட்படுத்தவில்லை. வாழ்வு தரும் வார்த்தைக்கு செவிமடுக்கவில்லை. ஒருவேளை கடவுளின் மகன் சென்றிருந்தால், அவர்கள் ஒருவேளை மனம் மாறியிருக்கலாம். ஆனால், இங்கே கடவுளின் மகனான இயேசுவே நற்செய்தி அறிவிக்கிறார். கடவுளின் மகனே மக்களைத்தேடி வந்திருக்கிறார். அவர்களோடு உணவருந்துகிறார். தங்குகிறார். புதுமைகளும் அற்புதங்களும் செய்கிறார். அப்படியிருந்தும் மக்கள் கடவுளின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்,...

வேறுபாடுகள் நம்மை வளப்படுத்தட்டும்

ஒரு மிகச்சிறந்த தலைவர் என்பவர் மக்களை வழிநடத்துவதற்கு முன்னால், தனக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னோடு கூட வைத்திருக்க வேண்டும். போதனைகள் தலைவரோடு முடிந்து விடக்கூடாது. தொடரப்பட வேண்டும். இயேசு தனக்குப்பிறகும் தனது பணி தொடர வேண்டும் என நினைக்கிறார். அது வெறும் பெயரை நிலைநாட்டுவதற்கானது அல்ல. மாறாக, மக்கள் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. மீட்புப்பணி தொடர்ந்தாற்றப்பட வேண்டும் என விரும்புகிறார். எனவே தனக்கான சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறார். இயேசு தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தது சாதாரணமானவர்களையும், வேறுபட்ட எண்ணம் உள்ளவர்களையும் என்கிற உண்மை பலரையும் வியக்க வைக்கலாம். இந்த சாதாரணமானவர்களால் கருத்து வேறுபாடு உள்ளவர்களால் என்ன செய்து விட முடியும், என்ற எண்ணமும் உள்ளத்தில் எழும். இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவருமே, வித்தியாசமான குணம்கொண்டவர்கள். ஒருவரின் இயல்பு மற்றவரின் இயல்புக்கு எதிரான பண்பு கொண்டதாக இருந்தது. உதாரணமாக, மத்தேயு வரிதண்டுபவர். நாட்டை உரோமையர்களுக்கு விற்றுவிட்டு, சுயநலத்திற்காக அவர்களோடு உறவாடுகிறவர்கள் என்று யூத சமுதாயத்தினால் முத்திரைக்குத்தப்பட்டவர். அதேபோல்,...

கடவுளின் அழைப்பு

அழைப்பின் மகிமை இன்றைய வாசகத்தில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38)வெளிப்படுத்தப்படுகிறது. மக்கள் ஆயரில்லா ஆடுகள் போல இருப்பதைப்பார்த்து, அவர்கள் மீது அவர் பரிவு கொள்கிறார். அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு என்று அவர் சொல்கிறார். ஆகையால், தேவையான வேலையாட்களை தமது அறுவடைக்கு அனுப்பும்படி, அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள், என்று இயேசு சொல்கிறார். இங்கு அழைப்பு எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறது? என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது. அழைப்பு கடவுளிடமிருந்து வருகிறது. அழைப்பு என்பது மனிதர்கள் தேர்வு செய்வது அல்ல. மாறாக, கடவுள் கொடுக்கிற கொடை. அவரது தாராள உள்ளத்தில் பொழியப்படக்கூடியது. ஆக, கடவுளே நம்மை அவரது பணிக்காக தேர்வு செய்கிறார் என்றால், அது எவ்வளவுக்கு மகிமைமிக்க பணி. ஒரு சாதாரண நிறுவனத்தில் நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும் நாம், வெற்றி பெற்றால், தேர்ந்தெடுக்கப்பட்டால், எவ்வளவுக்கு மகிழ்ச்சியடைகிறோம். சாதாரண மனிதரின் தேர்வுக்கு நாம் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்றால், கடவுள் நம்மை தேர்ந்தெடுத்தால், எந்த அளவுக்கு...

துணிவும் நம்பிக்கையும்!

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண்ணை இயேசு நலப்படுத்தும் நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். இயேசு ஏன் அந்தப் பெண்ணிடம் “மகளே, துணிவோடிரு. உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று””“ என்றார்? காரணம், அந்தப் பெண் இயேசுவின் முன்னால் வர அஞ்சி, “அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்“. இயேசுவின் முன்னே வர நம்பிக்கையும், துணிவும் இல்லாத காரணத்தை இயேசு உணர்ந்து அவரை ஊக்குவிக்கும் வண்ணம் “துணிவோடிரு“ என்கிறார். அந்தப் பெண் தம்மைத் “தகுதியற்றவர்“ எனக் கருதியிருக்கலாம். ஆனால், இயேசு அவரது தயக்கத்தைப் போக்குகிறார். நாமும்கூட சில வேளைகளில் நம்பிக்கைக் குறைவினாலும், தயக்கத்தினாலும், பாவ உணர்வினாலும் இயேசுவின் முன் செல்லத் தயங்குகிறோம். நம் போன்றவர்களுக்குத்தான் எபிரேயர் திருமடல் பின்வரும் அறிவுரையை வழங்குகிறது: “நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர். மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும், பாவம் செய்யாதவர்....