Tagged: தேவ செய்தி

பயப்பட வேண்டாம்

பயம் என்பது இந்த மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்று. நாம் பலவற்றிற்கு பயப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தின் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-36) சிந்தனையாக இந்த பயத்தை எடுத்துக்கொள்வோம். இதனை நாம் இரண்டு விதங்களில் சிந்திக்கலாம். எவற்றிற்கு பயப்பட வேண்டும்? எவற்றிற்கு பயப்படக்கூடாது? வாழ்வின் சவால்களுக்கு, வாழ்க்கையில் சந்திக்கும் சங்கடங்களுக்கு, வாழ்வின் தொல்லைகளுக்கு நாம் பயப்படக்கூடாது. பயப்படத் தேவையில்லை. மாறாக, நேர்மையற்ற செயல்பாடுகளில் நாம் ஈடுபடும்போது, பொய்மைக்கு துணைபோகிற போது, நாம் பயப்பட வேண்டும். நமது வாழ்க்கை இதற்கு முற்றிலும் முரணானதாக இருக்கிறது என்றால், அது மிகையாகாது. காரணம், நாம் சவால்களை, சங்கடங்களைக் கண்டு பயப்படுகிறோம். நேர்மையற்ற காரியங்களுக்கு துணைபோவதற்கு நாம் பயப்படுவது கிடையாது. இன்றைய நற்செய்தியிலும் இதே தவறுதான் நடக்கிறது. சீடர்கள் இயேசுவோடு இருந்திருக்கிறார்கள். பல பேய்களை இயேசு ஓட்டுவதை, கண்கூடாக கண்டிருக்கிறார்கள். புதுமைகளை அவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பயப்படுகிறார்கள். இயேசுவைக் கண்டே பயப்படுகிறார்கள்....

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்!

பாலை நிலத்தில் திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் என்று ஆலோசனை கூறிய சீடருக்கு இயேசு தந்த இந்தப் பதில் மொழி அவர்களுக்கு நிச்சயம் வியப்பைத் தந்தது. எனவேதான், எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை என்று பதில் கொடுத்தனர். நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் இயேசுவின் கட்டளை சீடருக்கும், நமக்கும் இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது; பரிவின் வெளிப்பாடாக பகிர்வு அமைய வேண்டும். இயேசு திரளாகக் கூடியிருந்த மக்கள்மீது பரிவு கொண்டார். நோயுற்றோரைக் குணமாக்கினார், ஆறுதல் நிறைந்த வார்த்தைகளைப் போதித்தார். அத்துடன் அவரது பரிவு நிறைவுபெற்றுவிடவில்லை. அவர்களின் வயிற்றுப் பசியையும் போக்கவேண்டும் என்று விரும்பினார். இந்த மனநிலையைத் தம் சீடருக்கும் கற்றுக்கொடுக்கிறார். உங்கள் பரிவு சொற்களில் மட்டுமல்ல, செயலிலும் இருக்கட்டும். குறிப்பாக, உணவு, உடை, உறைவிடம் இன்றித் தவிப்போருக்கு உதவுங்கள். அதுவும் உங்கள் பணியே என்று அறிவுறுத்துகிறார். உங்களிடம் என்ன இல்லை என்று...

செல்வத்தினால் வரும் கேடு

இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஓர் ஊரில் சண்டையோ, வாக்குவாதமோ வந்தால், அவர்கள் உடனே, ஊரிலிருக்கக்கூடிய பெரிய மனிதர்களிடம் முறையிடுவார்கள். அதுபோல, பொதுவாக பாலஸ்தீனத்திலே போதகர்களுக்கென்று, மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஏதாவது பிரச்சனை என்றால், போதகர்களிடம் சென்று, பிரச்சனையைத் தெரிவித்து, தங்களுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வார்கள். அதுபோன்று தான், இயேசுவிடமும் ஒரு மனிதர் வருகிறார். இயேசு அந்த மனிதனின் தேவையில்லாத பிரச்சனையைத் தீர்ப்பது தனது பணி அல்ல என்பதைத் தெரிவித்தாலும், அதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அங்கிருக்கிறவர்களுக்கு செல்வத்தினால் விளைகின்ற, கடுமையான விளைவுகளை எடுத்துரைக்கின்றார். செல்வம், அந்த செல்வந்தனை இந்த உலகத்தோடு கட்டிப்போட்டு விடுகிறது. இந்த உலகத்தைத் தாண்டி அவன் சிந்திக்கவும் இல்லை. அப்படி ஓர் உலகம் இருப்பது, அவனது எண்ணத்திற்கு வரவும் இல்லை. அவனுடைய சிந்தனை, எண்ணம் முழுவதும் இந்த உலகம் சார்ந்ததாக இருக்கிறது. அதைத்தாண்டி, அவனால் சிந்திக்க முடியாததற்கு காரணம், அவன் சேர்த்து வைத்திருந்த செல்வம். கடல் தண்ணீரை...

பலவீனங்களை வெற்றி கொள்வோம்

ஏரோது ஒரு பலவீனமான மனிதன் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்க முடிகிறது. சாதாரணமாக தான் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக, உயிராக மதிக்கப்படும் சட்டத்தையே காவு கொடுத்தவர் இந்த ஏரோது. தான் செய்வது மிகப்பெரிய தவறு என்பது, ஏரோது அறியாதது அல்ல. ஆனால், ஏரோதியாவுடனான நெருக்கம், மயக்கம், பயம் அனைத்தும், இந்த தவறை அவர் துணிவோடு செய்வதற்கு உதவி செய்தது. தான் செய்யப்போவது தவறு என்று தெரிந்தும், எதைச்செய்தால் அது சரியாக இருக்கும் என்பதை அறிந்தும், தவறுக்கு துணைபோனால், அதுதான் பலவீனம். ஏரோது இந்த பலவீனத்திற்குச் சொந்தக்காரர். ஏரோதியாவுடனான இந்த தவறான உறவு எந்தவிதத்திலும் ஏதோதுவிற்கு நன்மையைத்தரவில்லை. தனது முதல் மனைவியை விலக்கியதால், முதல் மனைவியின் தந்தையான, நாப்தானியர்களின் அரசனான அரேற்றஸ், போரிலே ஏரோதுவைத் தோற்கடித்து தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டான். உரோமையர்களின் உதவி இருந்ததால், தனது பதவியை, போரில் தோற்றாலும் தக்கவைத்துக்கொண்டான். கலிகுல்லா உரோமை அரசராகப் பதவியேற்றபோது, ஏரோதியாவின் நச்சரிப்பால்,...

அன்பு என்றும் வாழும் !

இன்று புனித மார்த்தாவின் திருநாள். லாசர், மரியா இவர்களின் சகோதரியான மார்த்தா இயேசுமீது சிறப்பான அன்பு கொண்டிருந்தார். இயேசுவும் அவர்களைத் தம் நண்பர்கள் என்று அழைத்தார். என்ன ஒரு சிறப்பு! இயேசுவை நண்பராகக் கொண்டிருப்பது. அவரை இல்லத்துக்கு அழைத்து, விருந்திட்டு உபசரிப்பது. அந்தப் பேறு மார்த்தாவுக்குப் பலமுறை கிடைத்தது. லாசர் இறந்தபின்னும்கூட மார்த்தா இயேசுவின் வல்லமைமீது கொண்டிருந்த நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று ஆணித்தரமாகக் கூறிய மார்த்தா, அடுத்த வார்த்தைகளில் தன் நம்பிக்கையின் முழுமையையும் வெளிப்படுத்துகிறார். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என எனக்குத் தெரியும். ஆம், மார்த்தாவின் நம்பிக்கை அவரது அன்பின் அடிநாதமாக இருந்தது. எனவே, இயேசு அங்கே ஒரு புதுமையை நிகழ்த்துகிறார். லாசரை உயிரோடு எழுப்புகிறார். அன்பு இறவாது. அன்பு என்றும் வாழும். அன்பு நம்பிக்கை கொள்ளும். இவை அனைத்துக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த...