Tagged: தேவ செய்தி

இயேசு மூட்டிய தீ

இயேசு இந்த உலகத்திற்கு வந்து, அவரது பணிவாழ்வை ஆரம்பித்தபோது, இலக்கில்லாமல் ஆரம்பிக்கவில்லை. தன்னுடைய பணிவாழ்வில், தனக்கென்று ஓர் இலக்கை வைத்திருந்தார். அந்த இலக்கை நிறைவேற்றுவதை, தனது வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தார். அதைப்பற்றித்தான், இன்றைய நற்செய்தி வாயிலாக இயேசு பேசுகிறார். மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அதுதான் தனது விருப்பம் என்று சொல்கிறார். அது என்ன தீ? நேர்மையாளர்கள் இன்னும் நேர்மையோடு வாழவும், அமைதியை ஏற்படுத்த விரும்புவோர் அவர்களோடு கடவுள் இருக்கிறார் என்பதை உணரவும், நல்லவர்கள் இன்னும் அதிக நன்மை செய்வதற்கான எரிபொருளாக இயேசு வந்திருக்கிறார். மனிதர்களுக்குள்ளாக நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணமிருந்தாலும், செய்வதா? வேண்டாமா? என்கிற விவாததத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமாய், அவருடைய வாதம் அமைந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதுதான் இன்னும் பல நல்லவர்களை உருவாக்குவதற்கு துணையாக இருந்தது. இயேசு என்கிற ஒரு மனிதன், இந்த உலகத்தையே தன் வசப்படுத்த முடிந்தது என்றால், தனியொரு ஆளாக அல்ல. அவர்...

சின்னச் சிட்டுக்களை இயேசுவிடம் சேர்ப்போம்

மத்தேயு 19:13-15 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற பழமொழி நமக்கு நன்றாகத் தெரியும். இப்போது விளைந்துக்கொண்டிருக்கிற பயிர்களை அதவாது சிறுவர்களை பார்க்கின்ற போது துயரமாக இருக்கின்றது. பயிர்களிலே நச்சு மருந்து கலந்திருக்கிறது. சிறுவயதிலே அவர்களுடைய சிந்தனை, சொல், செயல் இவைகளிலே நஞ்சு இருக்கிறது. சிறியவா்கள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சின்னச் சிட்டுக்களின் வருங்காலம் வறுமையாய் மாறிக்கொண்டிருக்கிறது. சின்ன சிட்டுக்களின் வாழ்வில் வறுமையயை போக்கி எப்படி வளமையை, சிறப்பை சேர்க்க வேண்டும் என்பதற்கு இன்றைய நற்செய்தி நலம் தரும் நல்வாக்காக வருகிறது. அவர்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வளர்க்க வேண்டியது நம் பொறுப்பு. எப்படி எல்லாம் அவர்கள் நஞ்சு படாமல் பஞ்சு போல மென்மையாகவும், பரிசுத்தமாகவும் வாழ நாம்...

குருத்துவத்தின் மேன்மை

குருத்துவத்தின் மாண்பு இந்த நற்செய்தி வெளிப்படுகிறது. குருத்துவம் என்பது தேர்ந்து கொள்வது அல்ல. அது கொடுக்கப்படக்கூடிய கொடை. கடவுளின் அருள் இல்லாமல் யாரும் குருத்துவத்தைப் பெற்று, வாழ்ந்துவிட முடியாது. அது ஒரு பெறுதற்கரிய பேறு. இந்த மகிமையை இயேசு நமக்கு தருகிறார். திருமணத்தின் மகிமையை, ஆண், பெண் திருமண உறவு, எந்த அளவுக்கு புனிதமானது என்பதை வலியுறுத்தும் இயேசு, அதோடு கூட, குருத்துவத்தின் புனிதத்தன்மையையும் சொல்வது அற்புதமானது. குருத்துவம் என்பது கடவுளுக்கான முழுமையான அர்ப்பணம். கடவுள் பணிக்காக, கடவுளின் மக்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, அதற்காக தன் முழு ஆற்றலையும் கொடுப்பது. அந்த குருத்துவப் பணியில் கடவுளின் அளவுகடந்த, அன்பும், அருளும் நிறைவாகக் கிடைக்கிறது. குருத்துவம் என்பது எளிதான பணி அல்ல. அதனை கடவுள் அருளின்றி யாரும் வாழ்ந்துவிடவும் முடியாது. அதன் மகிமை போற்றப்பட வேண்டும். அந்த பணியை ஏற்றிருக்கிறவர்களுக்கு, நமது முழு ஒத்துழைப்பையும், அதன் மாண்பு காப்பாற்றப்படுவதற்கு உதவியையும் செய்ய...

இறைவன் காட்டும் அன்பு

எசேக்கியேல் 12: 1 – 12 இறைவன் காட்டும் அன்பு எசேக்கியேல் இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்படுகிறது. அவரை ஓர் அடையாளமாக மக்கள் மத்தியில் இருக்கச் சொல்கிறார். என்ன அடையாளம்? நாடு கடத்தப்படுவோரின் நிலையை அவர்கள் முன் செய்து காட்டச் சொல்கிறார். எதற்காக? இறைவாக்கினர் வழியாக அவர்களிம் சொன்ன வார்த்தைகள் எடுபடவில்லை. அவர்கள் செவிகொடுத்து கேட்கவில்லை. ஒருவேளை, நடக்கப்போகிற காட்சி அவர்கள் கண்முன் பார்த்தாலாவது, அவர்கள் மனம் மாறி, தன்னிடம் வந்து விட மாட்டார்களா? என்கிற ஏக்கம் தான், கடவுளின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. தீயவர்கள் அழிந்துபோக வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் விரும்பியது கிடையாது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் ஆசை. அதற்காக, தவறு செய்கிறவர்களை கடவுள் பொறுத்துக் கொள்கிறவர் கிடையாது. அவர்கள் தங்கள் தவறான வழிகளிலிருந்து திருந்தி வருவதற்கு, மீண்டும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருகிறார். ஒருமுறை அல்ல, பலமுறை முயற்சி...

திருத்தொண்டர் லாரன்ஸ் திருவிழா

உங்கள் தொண்டு தொடரட்டும் யோவான் 12:24-26 தொண்டு செய்வது மிகவும் நல்லது. அதில்தான் மனதிற்கான மகிழ்ச்சியின் மருந்து ஊறுகிறது. தொண்டு செய்வர்கள் பிறரின் நன்மதிப்பை பெறுவதோடு கடவுளின் சிறப்பு ஆசீரைப் பெறுவர். தொண்டு செய்யும் போது நமக்காக ஜெபிக்க பலர் உருவாகிறார்கள். நம்மை பலர் வாழ்த்துகிறார்கள். பாராட்டுகிறார்கள். இந்த ஜெபங்கள், பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் அனைத்தும் நம் வாழ்நாட்களை அதிகரிக்கின்றன. ”என் இருப்பு தொண்டு செய்வதற்காகவே” என்ற விருதுவாக்குடன் வாழ்ந்து சிறப்பான தொண்டுகள் பல செய்து கடவுளின் ஆசீரைப் பெற்று நம் மத்தியிலிருந்து மறைாயமல் இருப்பவர் தான் திருத்தொண்டர் லாரன்ஸ். இன்றைய நாள் வழிபாடு அவரைப் போல மாறி மற்றவரின் மனதில் நீங்கா இடம் பிடிக்க நம்மை அழைக்கின்றது. திருச்சபையின் சொத்துகள், உடைமைகள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று அரசன் வலேயரின் சொன்னதால், திருச்சபையின் உடமைகளுக்குப் பொறுப்பாய் இருந்த திருத்தொண்டர் லாரன்ஸ் வித்தியாசமான ஒரு காரியத்தைச் செய்தார். அது வேறொன்றுமில்லை, திருச்சபையின்...