Tagged: தேவ செய்தி

திருச்சிலுவையின் மகிமை விழா

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்த சிலுவையானது சாதாரண பொருளாக அல்ல. மாறாக, தியாகத்தின் சின்னமாக, நினைவாகக் கருதப்படுகிறது. இயேசுவின் பாடுகள், அவருடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு தான் கிறிஸ்தவத்தின் விசுவாசத்தை உலகிற்கு கொண்டு வந்தது. எனவே தான் தூய பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (1: 17, 18) ”திருமுழுக்கு கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப்போய்விடும். சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” என்று கூறுகிறார். நான்காம் நூற்றாண்டின் முதல் பகுதியில் திருச்சிலுவையின் பக்தி முயற்சியை நாம் காண முடிகிறது. அலெக்சாண்டிரியன் குறிப்பேடு வழங்கும் சான்றுப்படி கான்ஸ்டன்டைன் தாயான ஹெலன் (இலேனம்மாள்) அரசி தான், ஆண்டவரின் திருச்சிலுவையை செப்டம்பர் 14, 320 அன்று கண்டுபிடித்தார். அதன்பின் 13 செப்டம்பா்...

‘அக்கைம்பெண்ணைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ‘அழாதீர்’ என்றார்” (லூக்கா 7:17)

உலகத்தில் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் கணக்கிலடங்கா. பசியும் பட்டினியும், வறுமையும் ஏழ்மையும், நோயும் நோக்காடும், வீடின்மையும் கல்வியறிவின்மையும் என்று மனிதரை வாட்டி வதைக்கின்ற இழிநிலைகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரெங்கும் பரவியிருப்பது கவலையானதே. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போது நம்மை அடுத்திருக்கின்ற மனிதரின் வேதனைகளை நாம் கண்டுகொள்ளாமல் போகின்ற ஆபத்து உள்ளது. உதவி கேட்டுப் பலர் வரும்போது நம் அருகிலிருப்பவருக்கு உதவி தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடும். இயேசுவிடம் உதவி கேட்டு எத்தனையோ மனிதர் வந்தனர். கும்பல் கும்பலாக அவரைத் தேடிச் சென்றனர். தம்மை நெருக்கிய கூட்டத்தின் நடுவிலும் இயேசு ஓர் எளிய கைம்பெண்ணின் வேதனையைக் கவனிக்கத் தவறவில்லை. அப்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டிருந்தார். கணவனும் இல்லை, மக்களும் இல்லை என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பெண்ணைக் கண்டு இயேசு இரக்கம் கொள்கிறார். அவருடைய மகனுக்கு உயிர் அளிக்கிறார். இச்செயல் வழியாக இயேசுவின் வல்லமை விளங்கியது ஒருபுறமிருக்க, அவருடைய இரக்க...

திருவிருந்தில் பிளவுகள் !

திருவிருந்தின்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னும் பவுலடியாரின் அறிவுரை அன்றைய கொரிந்து நகரக் கிறித்தவர்களுக்கு எவ்வளவு பொருந்தியதோ, அதே அளவு இன்றைக்கும் பொருத்தமானதாக, பொருளுள்ளதாக இருக்கிறது என்பது ஒரு வேதனையான உண்மை. அன்றைய நாள்களில் ஒற்றுமையின் விருந்தான திருவிருந்தில் பிளவுபட்ட மனதினராய், தகுதியற்ற உள்ளத்தினராய் கலந்துகொண்டனர். இன்றும்கூட சாதி உணர்வு, பகை உணர்வு, ஏற்றத்தாழ்வுகள் அத்தனை இருந்தும், எந்தவித உறுத்தல் உணர்வும் இன்றி ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் திருவிருந்தில் பங்குபெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். கடவுளின் திருச்சபையை இழிவுபடுத்தி, இல்லாதோரை இழிவுபடுத்தும் செயலில் இன்றும் நாம் ஈடுபட்டுவருகிறோம். இதை நாம் உணர்கிறோமா? பவுலின் கடினமான சாட்டையடிச் சொற்கள் நம்மைச் சுடட்டும். நற்கருணை அருள்சாதனத்தில் நமக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். திருவிருந்தின் முரண்பாடுகளைக் களைய வேண்டும். மன்றாடுவோம்: வானக உணவாக உம்மையே எங்களுக்குத் தந்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது ஒற்றுமையின் விருந்தில் பிளவுபட்ட உள்ளத்தினராய், சாதி, சமத்துவமற்ற உணர்வுகளோடு...

காணாமல் போன நாம் !

இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது. இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிறதெய்வங்களை நாடிச் செல்லும் இனமாக இருக்கிறோம்....

உள்ளத்தின் நிறைவு !

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப் பொன்மொழி. அகத்தின் அழகு நம் வாய் பேசும் சொற்களில் இருக்கிறது என்கிறது விவிலியம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனி கொடுக்கும். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்கிறார் ஆண்டவர். நமது வாயிலிருந்து வரும் சொற்கள்தான் நமது உள்ளத்தின் நிறைவை, அல்லது குறைவைச் சுட்டிக்காட்டுகின்றன. நமது சொற்கள் குறைவுள்ளவையாக, கண்ணியம் குறைந்தவையாக, இழிவானவையாக, புண்படுத்துவனவாக இருக்கின்றனவா? அப்படியென்றால், அது நம் உள்ளத்தின் குறைவைத்தான் காட்டுகிறது. எனவே, நமது சொற்களின்மீது ஒரு கண் வைப்போமா? நல்ல சொற்களைப் பேசி நமது உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்துவோம். நமது உள்ளத்தையும் நல்ல எண்ணங்களால் நிரப்பி, நிறைவு செய்வோம். மன்றாடுவோம்: உள்ளத்தின் ஆழத்தைக் காண்கிறவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும் என்று மொழிந்தீரே. எங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். அந்த உள்ளத்திலிருந்து நாங்கள் பிறரைப் பாராட்டுகின்ற, ஊக்குவிக்கின்ற, வளர்த்துவிடுகின்ற...