Tagged: தேவ செய்தி

அதிகாரமும், அடிமைத்தனமும்

பொறுப்புணர்வு என்பது நமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் உன்னதமான பண்பு. இன்றைய உலகில் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியவர்கள், பொறுப்பற்று இருப்பதால் தான், பல பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கிறது. அதிகாரத்திற்கு ஆசைப்படுகிற எல்லாரும், அதிகாரம் கிடைத்தபிறகு, அதனை பொறுப்பற்ற நிலையில் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு சார்பான காரியங்களைச் செய்து, எப்படி இலாபம் ஈட்டலாம் என்றுதான் நினைக்கின்றனர். இதிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு, இன்றைய வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. செல்வந்தர் ஒருவரின் வீட்டுப்பொறுப்பாளரைப் பற்றிய உவமை நமக்குத் தரப்படுகிறது. தன்னுடைய உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் அவர் நல்லவரா? நேர்மையானவரா? பொறுப்புள்ளவரா? எனப்பார்த்துதான், தேர்ந்தெடுத்திருப்பார். வீட்டுப்பொறுப்பாளராக தேர்ந்தெடுககப்பட்டவர், அதற்கான தொடக்கத்தில் தகுதியைப்பெற்றிருக்கிறதனால், தலைவர் அவரை, பொறுப்பாளராக நியமித்திருக்கிறார். ஆனால், தொடக்கத்தில் இருந்த அந்த நல்ல பண்புகள் அதிகாரம் வந்தவுடன் மாறிவிடுகிறது. பணத்தின் மீது மோகம் ஏற்படுகிறது. விளைவு, அவரிடத்தில் குடிகொண்டிருந்த நல்ல பண்புகள் வெளியேறிவிடுகிறது. அவர் பொறுப்பற்ற மனிதராக மாறிவிடுகிறார்....

திருவிவிலியத்தை தியானி… மாறுவாய் நீ ஞானி…

லூக்கா 8:4-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “கடவுள் யாரென்று அறிந்துக்கொள்ள திருவிவிலியத்தை படித்தேன். அது நான் யாரென்று காட்டியது” என்று பெரியவர்கள் மிகவும் அருமையாகச் சொல்வார்கள். திருவிவிலியத்தை வாசித்து தியானிக்க தியானிக்க நாம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம், புதுப்பிக்கப்படுகிறோம். திருவிவிலியம் நம்மை ஞானியாக மாற்றும் ஏணி என எழிலுற, அழகுற அருமையான கருத்துக்களை சுமந்து வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் ஞானியாக மாற மறந்துவிடாமல் இரண்டு செயல்பாடுகளை செய்ய வேண்டும். 1. தொடு திருவிவிலியத்தை தினமும் எனது கரங்களால் தொட வேண்டும். இதன் அர்த்தம் என்ன? தினமும் திருவிவிலியத்தோடு என் தொடர்பு இருக்க வேண்டும். வாசித்து நான் கடவுளோடு பேச வேண்டும். நம் நன்றியை வெளிப்படுத்த...

உடன் பணியாளர்களாக…

இன்றைய நற்செய்தியிலே, இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு உடனுழைத்தவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு தரப்பட்டிருக்கிறது. இயேசுவின் திருத்தூதர்கள் மற்றும் பெண் சீடர்களைப்பற்றியும், அவர்கள் யார்? என்பது பற்றியும், நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசு தனிமனிதராக பணி செய்யவில்லை. அவருடைய பணிவாழ்வில் பலருக்கும் பங்கு இருந்ததை இது நமக்கு தெளிவாக்குகிறது. இந்த உலகத்தில் பொதுநலத்தோடு மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையான மக்களுக்கு, களத்தில் இறங்கி உதவி செய்ய முடியாது. இதற்கு அவர்களது பணி, குடும்பம், சூழ்நிலை தடையாக இருக்கலாம். ஆனால், தங்களால் இயன்றதை பொருளாகவோ, பணமாகவோ கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். அதில் அவர்களுக்கு நிறைவு இருப்பதாக உணர்கிறார்கள். இரண்டாவது வகையான மக்களும் நேரடியாக முழுநேரத்தையும், முழுமூச்சியோடு இறங்க வாய்ப்பில்லாதவர்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களது உடனிருப்பு மூலமாக, சிறு,சிறு உதவிகள் மூலமாக எப்போதும் பொதுநலனோடு உழைத்துக்கொண்டிருக்கிறவர்கள். மூன்றாவது வகையான மக்கள், முழுக்க முழுக்க மக்களுக்காக, பொதுநலனோடு உழைக்கிறவர்கள். அவர்கள் அதற்காக எந்த தியாகத்தையும்...

வியாகுல அன்னையின் திருவிழா

துளைத்த வாள்கள் மிரண்டு போனது… யோவான் 19:25-27 இறையேசுவில் இனியவா்களே! வியாகுல மாதா திருவிழா திருப்பலியில் நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் பங்கெடுக்க வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம், வியாகுலத் தாயிடமும் மன்றாடுகிறேன். பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த ஏழு வணிகர்களுக்கு அன்னை மரியாள் தனித்தனியே காட்சி தந்து செனாரியோ என்ற மலைக்கு வரும்படி அழைத்தார். அங்கே ஒன்று கூடிய எழுவரும் ஜெபிப்பதையும், வியாகுலங்களின் பக்தியைப் பரப்புவதையும், மக்களைப் பாவம், தீமையிலிருந்து விடுவிப்பதையும் தங்களது முதற்கடமையாகக் கொண்டிருந்தனர் . அவர்களது வாழ்வு ஊழியக்காரியாகிய மரியன்னைக்கு ஊழியம் புரிவதாக இருந்ததால் அன்னை தாமே வெளிப்படுத்திய “மரியின் ஊழியர் ” என்ற பெயரையே அவர்கள் முழுவிருப்பத்துடன் தமதாக்கிக் கொண்டனர். இவ்வாறு துவங்கிய வியாகுல அன்னையின் பக்தி கி.பி.1814 இல் திருத்தந்தை 7ஆம் பத்திநாதர்,...

திருச்சிலுவை மகிமைப் பெருவிழா

உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள்...