Tagged: தேவ செய்தி

பவுலடியாரின் நற்செய்திப் பணி

திருத்தூதர்பணி 22: 30, 23: 6 – 11 பவுலடியாரின் நற்செய்திப் பணி சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளும் திறனை பவுல் இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்துகிறார். ஏதேன்ஸ் நகரத்து மக்கள் பெயர் தெரியாத கடவுளை வணங்குவதை, அவர்களது அறிவு மொழியில் பாராட்டி, இறுதியாக அவர்கள் வணங்குகிற கடவுளைப் பற்றித்தான் அறிவித்துக்கொண்டிருப்பதாக, அறிவாற்றல் கொண்டு விளக்குகிறார். இந்த பகுதியிலும் தன்னுடைய அறிவாற்றலை அவர் வெளிப்படுத்துகிறார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு, ஆயிரத்தவர் தலைவர் ஆணைபிறப்பிக்கிறார். பவுல் சிறையிலிருந்து அழைத்துவரப்படுகிறார். பவுல் அங்கே கொண்டுவரப்பட்டபோது, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் ஏராளமாக திரண்டிருப்பதைப் பார்க்கிறார். உயிர்ப்பு உண்டென அறிவித்ததால், தான் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். சிறையில் இருப்பது என்பது, பவுலடியாருக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த நிலையிலும் அவர் துணிவோடு பேசுகிறார். உயிர்ப்பு பற்றிய பவுலடியாரின் பேச்சு அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காரணம் இதுதான்? பரிசேயர்கள் உயிர்ப்பை நம்புகிறவர்கள். சதுசேயர்கள்...

கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்

திருப்பாடல் 68: 9 – 10, 19 – 20 ”கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்” அனைத்து உலகின் அரசர்களே! ஆண்டவரைப் போற்றுங்கள், புகழுங்கள் என்கிற வார்த்தைகளை நாம் அடிக்கடி திருப்பாடலில் பார்க்கிறோம். ஆண்டவரைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்கிற சிந்தனைகள் எதற்காக மீண்டும், மீண்டும் தரப்படுகிறது? இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள் மற்றவர்களைப் புகழ்கிறார்கள். உதாரணமாக, அரசியல் தலைவர்கள் பதவிக்காக, அதிகாரத்திற்காக மற்றவர்களை முகஸ்துதி செய்கிறார்கள். தங்களது மானத்தை விற்றாலும் பரவாயில்லை, பதவியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். எதிர்பார்ப்புக்களோடு புகழக்கூடியவர்கள் அதிகம். சாதாரண பதவிகளுக்கும், பட்டங்களுக்கும் மனிதர்களைப் புகழக்கூடிய பலபேர் கடவுளைப் புகழ்வதற்கு நேரமில்லை. இந்த மனநிலையிலிருந்து விடுவிக்கப்பெற்று, கடவுளைப் புகழ வேண்டும் என்பதே ஆசிரியரின் அறைகூலாக இருக்கிறது. கடவுளைப் போற்றுவதும் புகழ்வதும் நமக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தருகிறது. அது எதையோ ஒன்றை எதிர்பார்ப்பது கிடையாது. கடவுள் நமக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிற ஓர்...

இறைவன் வழங்கும் கொடைகள்

திருத்தூதர் பணி 1: 15 – 17, 20 – 26 இறைவன் வழங்கும் கொடைகள் இறைவன் நமக்கு பல அருள்வரங்களை வழங்குகிறார். ஆனால், அந்த அருள் நம்மிடம் தங்கியிருப்பதற்கு ஏற்ற வாழ்க்கையை நாம் வாழாவிட்டால், நிச்சயம் அது நம்மிடமிருந்து எடுக்கப்படும். அதுதான் யூதாசின் வாழ்க்கையில் நடந்திருப்பதாக, முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. யூதாஸ் அடிப்படையிலே எப்படிப்பட்டவன் என்பதை ஒருவர் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், அவனுக்கு கடவுளின் நிறைவான அருள் வழங்கப்பட்டது. இறைவனுடைய மகன், தனக்கு பின்னால் தொடரப்பட இருக்கிற புனிதமான பணிக்கான கருவியாக அவரைத் தேர்ந்தெடுக்கிறார். பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழ வேண்டிய யூதாஸ், அதனை உதாசீனப்படுத்திவிடுகிறான். அந்த இழப்பு மற்றவர்களால் அவனுக்கு நேர்ந்ததல்ல. அவனுடைய நிலைக்கு அவன் வேறு யாரையும் குற்றம் சுமத்த முடியாது. அந்த இழப்பு மற்றொருவருக்கு ஆதாயமாக முடிகிறது. மத்தியா என்கிறவர் யூதாசின் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இறைவனுடைய அருளும், கொடைகளும் நமக்கு வழங்கப்படுகிறபோது, அதனை பெறுவதற்கு...

நிறைவை அடையும் வாழ்வு

திருத்தூதர் பணி 1: 1 – 11 நிறைவை அடையும் வாழ்வு எந்த ஒரு புத்தகமோ, வரலாறோ, கடிதமோ எழுதினாலும், அதன் நோக்கம் தெளிவாக குறிப்பிடப்படும். திருத்தூதர் பணி நூலானது, தொடக்க கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவும் வரலாற்றுக் கருவி என்று சொன்னால் அது மிகையாகாது. நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு, இயேசுவின் பிறப்பு, அவருடைய பணிவாழ்வு, புதுமைகள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு மற்றும் விண்ணகம் ஆகியவற்றைப் பற்றி நமக்கு தெளிவாகக் குறித்துக் காட்டுகிறது. அதனுடைய தொடர்ச்சியாக திருத்தூதர் பணி நூலானது பார்க்கப்படுகிறது. திருத்தூதர் பணி நூலானது லூக்கா நற்செய்தியின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த நூலின் தொடக்கத்திலும், “தெயோபில்“ என்கிற பெயருக்கு எழுதப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இங்கும் அதே வார்த்தை குறிப்பிடப்படுகிறது. இரண்டு புத்தகங்களின் நடையும் ஒரே மனிதருக்குரியவையாக விவிலிய அறிஞர்களால் பார்க்கப்படுகிறது. திருத்தூதர் பணி எழுதப்படும் நோக்கம் பற்றி,...

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 நம்முடைய நற்செய்திப்பணி அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும்...