Tagged: தேவ செய்தி

போற்றவும் தூற்றவும் கடந்து பணியில் நிலைப்போம்

இயேசு தம் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பாராட்டும் புகழ்ச்சியும் வணக்கமும் பெற்றாரோ, அந்த அளவுக்கு இகழ்ச்சியும், புரிந்துணர்வின்மையும், அவதூறும் பெற்றுக்கொண்டார் என்பது உண்மை. அந்த உண்மையெ மாற்கு அச்சமின்றி எழுதிவைத்திருக்கிறார். என்ன காரணம்? 1. நற்செய்தி அறிவிப்பாளரின், இறைவாக்கினரின், பேராளியின் பணியில் எதிர்ப்புகளும், ஏளன விமர்சனங்களும் எழத்தான் செய்யும். அதையெல்லாம் தூசு எனப் பறந்கள்ளிவிட்டு பணியைச் தொடரவேண்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுறோம் (லூக் 10:11) என்று சொல்லித் தம் பணியைச் தொடரச் சீடரைப் பணித்தார் அல்லவா! அந்த மனநிலையை இயேசுவும் கொண்டிருந்தார் என்று காட்ட. 2. பச்சை மரத்துக்கோ இவ்வாறு செய்கின்றார்கள் என்றால், பட்ட மரத்துக்கு என்னதால் செய்யமாட்டார்கள்? (லூக்கப 23:31) என இயேசுவே உரைக்கவில்லையா? எனவே நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற அவதூறுகள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று நமக்குச் சுட்டிக்காட்ட. எனவே யாராவது நம்மைப்...

மரியாளின் மாசற்ற இதயப்பெருவிழா

தொடக்கத்தில் மரியாளின் விண்ணேற்பு விழாவிலிருந்து, எட்டாம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனால், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பிறகு, விழாவின் நாள் மாற்றப்பட்டது. சங்கத்தில் நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்குப் பின் , இயேசுவின் திரு இதயப்பெருவிழாவிற்கு அடுத்த சனிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது. இந்த பக்திமுயற்சியை பரப்பிட முயற்சி எடுத்தவர் ஜாண் யூட்ஸ் என்பவர். இவர்தான் இயேசுவின் திரு இதயப்பக்தியையும் பரப்பிட அனைத்து முயற்சிகளையும் எடுத்தவர். கி.பி 1860 ல் மரியாளின் மாசற்ற இதயத்திற்கான வணக்கத்தை ஏற்படுத்தினார். அன்னைமரியாள் மீது மக்கள் கொண்டிருந்த பக்தி, அவரது பரிந்துரையின் மூலமாக பெற்றுக்கொண்ட பல்வேறு நலன்கள், இவற்றின் மூலமாக இந்த பக்திமுயற்சி வெகு எளிதாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் 1944 ம் ஆண்டு, இந்த திருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடும்படியாக அறிமுகப்படுத்தினார். மீட்பின் வரலாற்றில் மிகப்பெரும் பங்காற்றுவதற்கு, தனது வாழ்வையே தியாகம் செய்தவர்தான் அன்னை மரியாள். நம் அனைவருக்கும் மீட்பு கிடைப்பதற்கு...

இறைவன் நம்மீது காட்டும் அன்பு

ஓசேயா 11: 1, 3 – 4, 8 – 9 முற்காலத்தில் பாரசீகம் மற்றும் கிரேக்க நாடுகள் அவ்வப்போது, கடுமையான போர்களில், ஒருவருக்கு எதிராக ஈடுபட்டனர். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், கிரேக்க வீரர்களே எப்போதும் வெற்றி பெற்றனர். இதுஎப்படி சாத்தியம்? பாரசீக வீரர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைகள். அந்த போரில் ஈடுபடும்படி கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். வேறு வழியில்லாமல் அந்த போரில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், கிரேக்க வீரர்களோ தங்கள் நாட்டிற்காக, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுகிறோம் என்கிற, உணர்வோடு போரிட்டனர். எனவே தான், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் வெற்றி பெற்றனர். தங்கள் தாய்நாட்டின் மீது கொண்டிருந்த பாசம், அந்த போரில் எப்படியும் வெற்றி பெற்று தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தியது. இந்த உவமையை நாம் இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இடையேயான உறவிற்கு பொருத்திப் பார்க்கலாம். கடவுள் தன்னை இஸ்ரயேல் மக்களோடு அன்புறவில்...

பவுலடியாரும், இயேசுவின் பாடுகளும்

2தீமோத்தேயு 2: 8 – 15 தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், இதுவரை பவுலடியார், துன்பத்தைத் தாங்குவதில் அவர் கொண்டிருந்த தனித்துவத்தைப் பற்றி அறிவுரையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இரண்டாவது அதிகாரத்தின் தொடக்கத்திலிருந்து, அவருடைய அறிவுரை இயேசுவின் பாடுகளை நோக்கி நகர்கிறது. ”இயேசு உயிர் பெற்று எழுந்தார் என்பதை நினைவில் கொள்” என்று சொல்கிறார். அதாவது, இயேசுவின் பாடுகள் அழுத்தம் பெறுகிறது, அவருடைய துன்பங்கள் அறிவுரையின் மையமாகிறது. கடவுளுடைய வார்த்தையை யாரும் சிறைப்படுத்த முடியாது. இயேசுவை, அவருடைய சாவு சிறைப்படுத்தி விடும் என்று, பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தப்புக்கணக்கு போட்டார்கள். ஆனால், இயேசு சாவிலிருந்து உயிர் பெற்றெழுந்தார். பவுலடியாருடைய துன்பங்களும், பாடுகளும் யாருக்கும் மீட்பைப் பெற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அவருடைய வாழ்க்கை பலருக்கு உந்துசக்தியாக இருக்கப்போகிறது. குறிப்பாக, துன்பங்களைத் தாங்குவதற்கு மற்றவர்கள் கற்றுக்கொள்கின்ற வாழ்க்கை அனுபவமாகவும் இருக்கிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, துன்பங்களைத் தாங்குவதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதுதான் பவுலடியார் இங்கு சொல்ல...

இயேசு அருளும் வாக்குறுதி

2தீமோத்தேயு 1: 1 – 3, 6 – 12 இயேசு அருளும் வாக்குறுதி ”இயேசு அருளும் வாக்குறுதிக்கு ஏற்ப, அவருடைய திருத்தூதனான பவுல்” என்று, பவுல் தன்னுடைய திருமுகத்தைத் தொடங்குகிறார். இங்கு வாக்குறுதி என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. இயேசு அருளும் வாக்குறுதி என்று பவுல் எதனைக் குறிப்பிடுகிறார்? வழக்கமான பவுலின் திருமுகத்திலிருந்து, இந்த கடிதம் சற்று மாறுபட்ட தொனியில், அதிலும் குறிப்பாக, இந்த வார்த்தையை பவுல் பயன்படுத்தியிருப்பதன் நோக்கம் புரிவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், விவிலியத்தில் அதற்கான விளக்கங்கள் இடம்பெறவில்லை. இதனுடைய பொருள் என்ன, என்பதை சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம். உரோமை நகரில் பவுல் சிறையில் அடைக்கப்பட்ட இடம் என்று காட்டப்படுகிற இடத்தை நாம் பார்த்தோம் என்றால், பவுல் சொல்ல வருகிற அர்த்தத்தை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர் சிறையில் அடைக்கப்பட்ட இடம், குகை போன்ற பாதாள அறை. அந்த...