இறைவாக்குப் பணி
எசேக்கியேல் 2: 2 – 5 இறைவாக்கினர் எசேக்கியேல், கடினமான நேரத்தில் இறைவாக்குப் பணியைச் செய்ய இறைவனால் அனுப்பப்படுகிறார். கி.மு.597 ம் ஆண்டு, பாபிலோனியர்கள் யூதாவை முற்றுகையிடுகிறார்கள். வேறு வழியில்லாமல் பாபிலோனியர்களிடம் யூதர்கள் சரணடைகிறார்கள். யூதர்களுக்கு மிகப்பெரிய கப்பத்தொகையை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டியதிருக்கிறது. செதேக்கியாவை யூதர்களின் அரசனாகவும், தங்களின் கைப்பொம்மையாகவும் பாபிலோனியர்கள் நியமனம் செய்கிறார்கள். ஆனால், பத்து ஆண்டுகளுக்குப் பின், செதேக்கியா பாபிலோனியர்களுக்கு எதிராக நிற்பதற்கு தயாராகுகிறார். எகிப்தியர்களுடன் சேர்ந்து கொண்டு, பாபிலோனியர்களை எதிர்க்கத் துணிகிறார். இது நெபுகத்நேசருக்கு கோபத்தைத் தூண்டுகிறது. கி.மு.587 ம் ஆண்டு, மீண்டும் எருசலேம் நகருக்கு படையெடுத்து வந்து, அவர்களை சின்னாபின்னமாக்குகிறார். எருசலேமை தரைமட்டமாக்குகிறார். இருக்கிற செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார். மீண்டும் தன்னுடைய கைப்பொம்மையாக அரசரை நியமிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. எனவே, அனைவரையும் நாடுகடத்துகிறார். இஸ்ரயேல் என்கிற நாடு இல்லாமல் போகச் செய்கிறார். இப்படிப்பட்ட மோசமான, துயரமான நேரத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் இறைவாக்குப் பணியைச்...