கடுகு, புளிப்பு மாவு : தைரியம் தரும் தைலங்கள்
மத்தேயு 13:31-35 மனிதர்களுக்கான பல பிரச்சினைகளில் தாழ்வு மனப்பான்மை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. தாழ்வு மனப்பான்மை என்பது நான் சிறியவன், சிறந்தவன் அல்ல என்பதிலிருந்து உதயமாகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கு தைரியம் கொடுக்கும் தைலமாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். கடுகு உருவில் சிறியது ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. கடுகு தனக்குள்ளே இருக்கும் சக்தியை உணா்ந்ததால் வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை அந்த சிறிய விதை வெளிக்கொணர்கின்றது. புளிப்பு மாவு கண்ணுக்கு புலப்படாதது. ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. மாவு முழுவதையும் புளிப்பேற்றும் தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை வெளிப்படுத்துகின்றது. நமக்குள்ளே கடவுள் கொடுத்த பிரம்மாண்டமான சக்தி இருக்கிறது. அதை கண்டுபிடிப்போம். அதை உசுப்பிவிடுவோம். மிகவும் சிறியவைகள் இப்படி செய்கிறது என்றால் ஏன் நம்மால் செய்ய முடியாது? எல்லாமே முடியும். நம்மை ஆட்டிப்படைக்கும் தாழ்வு மனப்பான்மையை தரை...