Tagged: தேவ செய்தி

மகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

திருப்பாடல் 122: 1 – 2, 3 – 4ஆ, 4இ – 5 இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்களின் பயன்பாட்டிற்காக தாவீது அரசரால் எழுதப்பட்ட பாடல். எருசலேம் மக்கள் திருவிழாக்களைக் கொண்டாடுவதில் இன்பம் கண்டனர். கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கடவுளின் திருப்பெயரைப் போற்றுவதற்காகவும் இதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். தாவீது அரசரின் காலத்தில் தான், எருசலேம் நகர் முக்கியத்துவம் பெற்றது. மக்கள் திருவிழாக்களைச் சிறப்பிப்பதற்கு எருசலேம் நகர் வருவது வழக்கம். புனித நகரமாக கருதப்பட்ட எருசலேமின் சிறப்பை இந்த பாடல் எடுத்துரைக்கிறது. எருசலேம் என்பது ஆண்டவர் வசிக்கக்கூடிய இல்லம் மட்டுமல்ல. மாறாக, விண்ணகத்தின் பிரதிபலிப்பாக எருசலேம் நகர் மக்களால் பார்க்கப்பட்டது. எருசலேம் நகரத்திற்குச் செல்வது விண்ணகத்திற்கு செல்வது போன்றதொரு மனநிலையை உருவாக்கியது. எருசலேம் செல்வதை மக்கள் கடவுளின் புனித நகரத்திற்கு அதாவது விண்ணக நகரத்திற்குச் செல்வதாக உணர்ந்தனர். அந்த ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்வதற்கு நாம் மகிழ்ச்சியான உள்ளத்தோடு செல்ல வேண்டும் என்று...

ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்

திருப்பாடல் 126: 1 – 2b, 2c – 3, 4 – 5, 6 இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளதாக திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் பல அற்புதச் செயல்களைச் செய்திருந்தாலும், “மாபெரும்” செயல் என்று ஆசிரியர் கூறுவது என்ன? முதலாவது இறைவார்த்தை சொல்கிறது: ஆண்டவர் சீயோனின் அடிமைநிலையை மாற்றினார். சீயோன் என்பது எருசலேம் நகரைக் குறிக்கிற வார்த்தை. எருசலேம் பகை நாட்டினரால் தாக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது. இனிமேல் மீண்டு வராது, அதனுடைய மகிமை முடிந்து விட்டது என்று நம்பிக்கையிழந்திருந்த நேரத்தில், ஆண்டவர் அற்புதமாக தன்னுடைய வல்ல செயல்களினால் எருசலேமை மீட்டார். மீண்டும் புதுபொலிவு பெறச் செய்தார். எருசலேம் நகரம் மீது இறைவன் கொண்டிருக்கிற அன்பிற்கான காரணம் என்ன? ஏனென்றால், இறைவன் எருசலேமில் குடிகொண்டிருக்கிறார். அது தான் மண்ணகத்தில் ஆண்டவர் வாழும் இடம். தன்னை நாடி வரும் பிள்ளைகளுக்கு ஆறுதல் வழங்குகிற இடம். அந்த இடத்தை...

அதிகாரமும், அடிமைத்தனமும்

பொறுப்புணர்வு என்பது நமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் உன்னதமான பண்பு. இன்றைய உலகில் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியவர்கள், பொறுப்பற்று இருப்பதால் தான், பல பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கிறது. அதிகாரத்திற்கு ஆசைப்படுகிற எல்லாரும், அதிகாரம் கிடைத்தபிறகு, அதனை பொறுப்பற்ற நிலையில் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு சார்பான காரியங்களைச் செய்து, எப்படி இலாபம் ஈட்டலாம் என்றுதான் நினைக்கின்றனர். இதிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு, இன்றைய வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. செல்வந்தர் ஒருவரின் வீட்டுப்பொறுப்பாளரைப் பற்றிய உவமை நமக்குத் தரப்படுகிறது. தன்னுடைய உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் அவர் நல்லவரா? நேர்மையானவரா? பொறுப்புள்ளவரா? எனப்பார்த்துதான், தேர்ந்தெடுத்திருப்பார். வீட்டுப்பொறுப்பாளராக தேர்ந்தெடுககப்பட்டவர், அதற்கான தொடக்கத்தில் தகுதியைப்பெற்றிருக்கிறதனால், தலைவர் அவரை, பொறுப்பாளராக நியமித்திருக்கிறார். ஆனால், தொடக்கத்தில் இருந்த அந்த நல்ல பண்புகள் அதிகாரம் வந்தவுடன் மாறிவிடுகிறது. பணத்தின் மீது மோகம் ஏற்படுகிறது. விளைவு, அவரிடத்தில் குடிகொண்டிருந்த நல்ல பண்புகள் வெளியேறிவிடுகிறது. அவர் பொறுப்பற்ற மனிதராக மாறிவிடுகிறார்....

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 கடவுளின் மாட்சிமையை, மேன்மையை இயற்கை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதை, இந்த திருப்பாடல் சுட்டிக்காட்டுகிறது. படைப்பை நாம் உன்னிப்பாக கவனிக்கிறபோது, பலவற்றை இந்த படைப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அது ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, கடவுளால் படைக்கப்பட்டிருந்தால், அது எல்லா நாட்களிலும், எல்லா காலங்களிலும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இரவிற்கு பின் பகல் என்பது கடவுள் வகுத்த நியதி. இன்று வரை, அதில் மாற்றம் இல்லை. படைப்பு என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இயற்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மனிதனும் கடவுளின் படைப்பு தான். ஆனால், மனிதன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான்? என்பதுதான் ஆசிரியரின் ஆதங்கமாக இருக்கிறது. மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் இயங்க வேண்டும் என்று கடவுள் எல்லையை வகுத்திருக்கிறார். ஆனால், மனிதன் அப்படி இல்லை. அதனை கடந்து...

தம்மைத் தாமே மீட்டுக் கொள்ள எவராலும் இயலாது

திருப்பாடல் 49: 5 – 6, 7 – 9, 16 – 17, 18 – 19 செல்வத்தைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்கிற மனப்பான்மை மத்திய கிழக்குப் பகுதியில் அதிகமாக காணப்பட்டது. ஏனென்றால், செல்வம் என்பது வெறுமனே உழைத்துப் பெறுவது மட்டுமன்று, அது கடவுளின் கொடை. கடவுளின் கொடை ஒரு மனிதனுக்கு கிடைப்பதால், யாரும் அவனை அழிக்க முடியாது என்று நினைக்கிறான். அந்த நினைப்பு தற்பெருமையாக மாறுகிறது. இப்படிப்பட்ட மனநிலை உள்ள பிண்ணனியில் திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகளை எழுதுகிறார். இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாருமே மீட்பைப் பெற வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அந்த மீட்பை, கடவுள் நமக்கு வாக்களித்திருக்கிற நிலைவாழ்வை பெறுவதுதான் நம்முடைய வாழ்வின் இலக்காகக் கொண்டு வாழ்கிறோம். ஆனால், அந்த இலக்கை வெகு எளிதாக செல்வத்தைக் கொண்டு அடைந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறோம். ஆனால், கடவுளின் பார்வையில் நல்ல செயல்களைச் செய்வோர்...