Tagged: தேவ செய்தி

உம் பெயரின் மாட்சிமையை முன்னிட்டு கடவுளே எங்களை விடுவியும்

திருப்பாடல் 79: 1 – 2, 3 – 5, 8, 9 அடிமைத்தனத்தின் பிடியிலிருக்கிற இஸ்ரயேல் மக்களை கடவுள் விடுவித்தருள வேண்டுமென்று விடுக்கிற அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது. பாபிலோனிய மன்னன் நெபுகத்நேசார் எருசலேமை தரைமட்டமாக்கினான். இஸ்ரயேலின் ஆண்களை அகதிகளாக பாபிலோனுக்கு நாடுகடத்தினான். எருசலேமை எவராலும் அழிக்க முடியாது என்கிற மமதை கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்த பாடல் எழுதப்பட்டிருக்கலாம். வாழ்வில் பலம் இருக்கிறவரை அல்லது பலம் இருக்கிறது என்பதை நம்புகிற வரையிலும், மற்றவர்களை எவரும் தேடமாட்டார்கள். வெற்றிக்கு தங்களின் பலம் தான் காரணம் என்கிற மமதை அவர்களின் எண்ணத்தில் குடிகொண்டு விடுகிறது. ஆனால், எப்போது பலத்தை இழக்கிறார்களோ, அல்லது மற்றவர்கள் இவர்களின் பலவீனத்தை அறிந்து இவர்களை வீழத்துக்கிறார்களோ, அப்போதுதான், தங்களது உண்மைநிலையை அறிந்தவர்களாக மாறுகிறார்கள். கடவுளைத்தேடி வருகிறார்கள். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இது முற்றிலும் உண்மை. அவர்கள் வெற்றி பெற்ற...

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை, அவை இதயத்தை மகிழ்விப்பவை

திருப்பாடல் 19: 7, 8, 9, 10 இந்த உலகத்தில் இருக்கிற அனைவருமே சமமானவர்கள். இந்த உலகம் யாருக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமானது அல்ல. கடவுளின் படைப்பு எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், ஒரு சிலர் தங்களது சுய லாபத்திற்காக, தங்களது வலிமையைப் பயன்படுத்தி மற்றவர்களை அடக்கி ஒடுக்கி, தாங்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, அனைவரையும் கட்டுப்படுத்துவதற்கு ஒழுங்குகளும், சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த ஒழுங்குகள் பலருக்கு கடுமையானவையாக இருக்கின்றன. இன்றைய திருப்பாடலின் வரிகளில் ஆண்டவரின் கட்டளைகள் இதயத்தை மகிழ்விப்பவையாக இருக்கின்றன என்று ஆசிரியர் சொல்கிறார். யாருக்கு ஒழுங்குகள் இதயத்திற்கு இனிமையானதாக இருக்கும் என்றால், கடவுளுக்கு அஞ்சி வாழ வேண்டும், எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டும் தான், அப்படி இருக்கும். மற்றவர்களுக்கு அது எப்போதும் கடினமானதாக, கடுமையானதாகத்தான் இருக்கும். ஆண்டவரின் கட்டளைகள் கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், அதனை கடைப்பிடித்து வாழ்கிறபோது, அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிற...

ஆண்டவரே! நான் உம்மை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக

திருப்பாடல் 137: 1 – 2, 3, 4 – 5, 6 திருப்பாடல் என்பது ஒட்டுமொத்தமாக வரிசையாக எழுதப்பட்ட புத்தகம் அல்ல. பல்வேறு சூழ்நிலைகளில் எழுதப்பட்ட பாடல்கள் மொத்தமாக தொகுக்கப்பட்ட நூல் தான் திருப்பாடல். இன்றைய பல்லவியாக வந்திருக்கிற திருப்பாடல், இறைவாக்கினர்களின் இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பில் அடங்கிய பாடல். குறிப்பாக, பாபிலோனில் நாடுகடத்தப்பட்டு சிறைக்கைதிகளாக இருந்த சூழலில் எழுதப்பட்டது. தங்களை அடிமைப்படுத்தியவர்கள் தங்களை வசைமொழிகளால் அவமானப்படுத்தியபோது, உள்ளம் நொந்த மனநிலையில் எழுதப்பட்ட பாடலாகவும் இது தோன்றுகிறது. அதேவேளையில் பாபிலோனின் வீழ்ச்சி அண்மையில் இருக்கிறது என்பதை குறித்துக்காட்டும் நம்பிக்கையும் இந்த பாடலில் ஆங்காங்கே காணப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் பல நிலைகளில் தோல்விகளையும் அடிமைத்தனத்தையும் தங்களது வாழ்வில் அனுபவித்தவர்கள். அவமானங்களைச் சந்தித்தவர்கள். ஆனால், அவர்களிடத்தில் உலகமே வியந்த ஒரு பண்பு அவர்கள் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்து வந்தார்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது அவர்களது கடவுள் நம்பிக்கை. கடவுள் எந்த நேரத்திலும்...

வாழ்வை மாற்றுங்கள்

சீடர்கள் இயேசுவிடத்திலே யார் பெரியவர்? என்ற கேள்வி கேட்கிறார். இயேசு அவர்களிடத்தில் ”நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் சொல்கிறார். சீடர்கள் நிச்சயம் இந்த பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதை, இதை எல்லாம் செய்யுங்கள், நீங்கள் விண்ணரசிற்குள் நுழைய முடியும் என்ற பாணியில், இயேசுவின் பதில் அமைந்திருக்கும் என்று சீடர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், இயேசு முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலைத் தருகிறார். அவர்களை மனம் மாறுவதற்கு, மாற்றம் பெறுவதற்கு அழைப்புவிடுக்கின்றார். இதனுடைய அர்த்தம் என்ன? இயேசு எதற்காக மனமாற்றத்தைப் பற்றி இங்கு பேசுகிறார்? அப்படி மனமாற்றம் இல்லையென்றால், விண்ணரசிற்கான வாய்ப்பே இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்கிறார். ஏன்? இயேசுவோடு இருந்து, அவருக்குப் பின்னால் அவருடைய பணி செய்யக்கூடிய சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சாதாணமானவர்கள் கேட்கக்கூடிய கேள்வியை கேட்டு, தங்களுக்குள் சண்டையிடுவது இயேசுவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தவறான பாதையில்...

பணிவிடை செய்யவே வந்தேன்

தங்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்று சீடர்கள் சண்டையிட்டுக் கொள்வது, இன்னும் அவர்கள் இயேசுவையும், அவரது பணிவாழ்வையும், அவரது பணியின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பதையும், தங்களது வாழ்வின் முக்கியத்துவத்தை அவர்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எதற்காக இந்த சண்டை எழுந்தது? தொடக்கத்தில் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்ட சீடர்கள், திடீரென்று தங்களுக்குள்ளாக ஏன் சண்டையிட்டுக்கொள்கின்றனர்? இயேசுவை பல சீடர்கள் பின்தொடர்ந்தார்கள். அவர்களுள் திருத்தூதர்கள் முதன்மையானவர்களாக இருந்தனர். இயேசுவிற்கு பணிவிடை செய்வதற்கு பெண் சீடர்களும் உடனிருந்தார்கள். இயேசு மூன்று சீடர்களை எப்போதுமே, உடன் அழைத்துச் செல்வதையும் நாம் நற்செய்தியின் ஆங்காங்கே பார்க்கலாம். பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று பேர் தான், அந்த சீடர்கள். அவர்களுக்கு இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறபோது, மற்றவர்கள் பொறாமைப்படுவதற்கும், அந்த மூன்றுபேரும் பெருமைப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இயேசு அவர்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்ற கேள்விக்கே இடமில்லை, என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார். யார் அதிகமாக பணிவிடை செய்கிறார்களோ,...