Tagged: தேவ செய்தி

தூய ஆவியானவரின் வழிநடத்துதல்

திருத்தூதர்பணி 20: 28 – 38 எபேசு நகரிலிருந்து, மிலேத்துவிற்கு மூப்பர்களை அழைத்த பவுல், அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அங்கிருந்து தான், எருசலேம் செல்லவிருப்பதாகவும், இனிமேல் அவர்களை காண மாட்டேன் எனவும் சொல்கிறார். பவுலின் இந்த வார்த்தைகளை இயேசுவின் வார்த்தைகளோடு நாம் இணைத்துப் பார்க்கலாம். எருசலேம் செல்வது என்பது, இயேசுவுக்கு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும். எருசலேம் பயணம் எப்படி அமையப்போகிறது என்பது இயேசுவுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அதுதான், தன்னுடைய கடைசி பயணம் என்று அறிந்திருந்தார். அறிந்திருந்தார் என்பதைவிட, தூய ஆவியானவர் அவருக்கு உணர்த்தியிருந்தார். கிட்டத்தட்ட அதே போல ஒரு சூழ்நிலைதான், பவுலடியாரின் வாழ்விலும் நடைபெறுகிறது. எருசலேமுக்கு செல்கிற தன்னுடைய பயணம் பாடுகளின் பயணம் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவர் பலவிதமான பாடுகளை தாங்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார். உணர்ந்திருந்தார் என்பதை விட, தூய ஆவியானவர் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இறைத்திட்டத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறபோது, தூய ஆவியானவர் நமக்கு...

பவுலடியாரின் இறைப்பற்று

திருத்தூதர்பணி 20: 17 – 27 பவுலடியார் எபேசு நகரத்தைச் சேர்ந்த திருச்சபையின் மூப்பர்களை வரவழைக்கிறார். மூப்பா்கள் என்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள். எந்த ஒரு விவிலியப்பகுதியை வாசித்தாலும், எங்கே? ஏன்? எப்போது? யார்? என்ன? எப்படி? என, கேள்விகளை வைத்து, நாம் பதில் காண முயலுகின்றபோது, விவிலியம் நமக்கு சொல்ல வருகிற செய்தியை, ஓரளவு புரிந்து, கடவுள் நமக்கு சொல்கிற அறிவுரையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பகுதி பவுலின் மூன்றாவது திருத்தூதுரைக்கும் பயணத்தின் தொடக்கம் என்று சொல்லலாம் 18: 23 – 21: 16). திருத்தூதர் பவுல், அவருடன் இருந்தவர்கள் மற்றும் திருச்சபையின் மூப்பர்கள் இதில் பங்கெடுக்கிறார்கள். இடம்: மிலேத். பவுல் எதற்காக எபேசு சென்று அவர்களை சந்திக்கவில்லை? எதற்காக அவர்களை மிலேத்துவிற்கு வரவழைக்கிறார்? 20: 16 தெளிவாகச் சொல்கிறது: பவுல் காலம் தாழ்த்த விரும்பாததால் எபேசுக்குப் போகாமலே, எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார். முடியுமானால், பெந்தகோஸ்து நகரில் அங்கிருக்க வேண்டும் என்று...

நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்

திருப்பாடல் 68: 1 – 2, 3 – 4, 5 – 6 நேர்மையாளர்கள் யார்? அவர்கள் ஏன் மகிழ்ச்சியடைவார்கள்? நேர்மையாளர்கள் என்பவர்கள், கடவுளின் சட்ட திட்டங்களுக்கு தங்களையோ முழுமையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுகிறவர்கள். கீழ்ப்படிதலோடு வாழ்கிறவர்கள். தங்கள் மனச்சான்றுக்கு பயந்து வாழக்கூடியவர்கள். சுயநலத்தோடு எல்லாவற்றையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். அவர்கள் எப்போதும் கடவுளுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறவர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார். இந்த உலக வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறபோது, மேலே சொல்லப்பட்டிருக்கிற விழுமியங்களோடு ஒரு மனிதர் வாழ்ந்தால், அவர் நிச்சயம் கவலைகொள்வதற்குத்தான் அதிகமான காரணங்கள் நமக்குக் கிடைக்கிறது. பின்னர் எப்படி நோ்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அநீதி இந்த உலகத்தில் இருந்தாலும், அதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு அநீதி செய்கிறவர்களால், தொடர்ந்து அநீதியோடு வாழ முடியாது. அவர்களுக்கும் ஒரு முடிவு வரும். அதுதான் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. அநீதி செய்கிறவர்கள்...

ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழுங்கள்

திருப்பாடல் 47: 1 – 2, 5 – 6, 7 – 8 இது வெற்றியின் பாடல். வெற்றியின் களிப்பில் வெளிப்பட்ட பாடல். உடல், உள்ளம், ஆன்மா அனைத்தும் களைப்பில் இருந்தாலும், களிப்பை வெளிப்படுத்தும் பாடல். அரசர் ஒருவர் தான் போரில் பெற்ற வெற்றியை இங்கே வெளிப்படுத்துகிறார். கை தட்டி ஆர்ப்பரியுங்கள் என்று சொல்லக்கூடிய வார்த்தைகள், உள்ளத்தில் இருக்கிற மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆரவார ஒலியிடையே பவனி செல்கிறார் என்பது அரியணைக்கு ஏறக்கூடிய காட்சியைக் குறிக்கிறது. அரசர் அரியணையில் அமர்கிறபோது, அனைவருமே மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அரசரை வாழ்த்துவார்கள். இப்போது கூட, முக்கியமான பதவியில் இருக்கிறவர்கள், தாங்கள் பதவி ஏற்கிறபோது, அவர்களுக்கான நாற்காலியில் உட்கார்கிறபோது, மற்றவர்கள் தங்களது மகிழ்ச்சியை, கைதட்டல் மூலமாக வெளிப்படுத்துவார்கள். அது மகிழ்ச்சியையும், மரியாதையையும் வெளிப்படுத்துகின்ற அடையாளம். அதுதான், அரியணையில் ஏறுகின்ற அரசருக்கும் கொடுக்கப்படுவதாக இருக்கிறது. அத்தகைய மகிழ்ச்சியை நாமும் நமது வாழ்விலும் இருக்க வேண்டும். நமது வாழ்க்கையில்...

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 நம்முடைய நற்செய்திப்பணி அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும்...