Tagged: தேவ செய்தி

வாழ்வு வழிபாடாக மாறட்டும்

லேவியர் புத்தகத்திலே, 11வது அதிகாரத்தில் எவையெவை சாப்பிடக்கூடியவை, எவையெவை சாப்பிடக்கூடாதவை என ஒழுங்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இறந்த மற்றும் சில விலங்குகளின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பதற்கு காரணம் இல்லாமலில்லை. பல காரணங்களை நாம் சொல்லலாம். 1. யூதர்கள் தீய ஆவிகளை நம்பினர். இறந்துபோன உடல்மீது தீய ஆவிகளின் தாக்கம் இருக்கும் என்ற காரணத்தால், தவிர்த்தனர். 2. ஒரு சில விலங்குகள் வேறு மதத்தில் உள்ளவர்களுக்கு புனிதமானவையாக இருந்தன. உதாரணமாக, பூனையும், முதலையும் எகிப்தியர்களுக்கு புனிதமானவை. வேறு மதத்தினர் வழிபடுவது, நிச்சயமாக யூதர்களுக்கு தீட்டுப்பட்டதாகத்தான் இருந்திருக்கும்.3. சில விலங்குகளின் இறைச்சி, அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களுக்கு திங்கிழைக்கக்கூடியதாக இருந்தது. பன்றியின் இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிடாவிட்டால், அது பல வழிகளில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனவே, அதுபோன்று கேடுவிளைவிக்கக்கூடிய இறைச்சியை தவிர்த்தனர். 4. சில மூடநம்பிக்கைகளின் காரணமாகவும், சில விலங்குகளின் இறைச்சியை, யூதர்கள் தவிர்த்து வந்தனர். இந்தப்பிண்ணனியில் தான் இயேசுவின் போதனையை நாம் பொருத்திப்பார்க்க...

இயேசு தரும் கொடை

பெறுவதை விட, கொடுத்தலே மிகச்சிறந்தது. இயேசு இந்த உலகத்திற்கு தன்னையே கொடுக்க வந்தார். அதை முழுமையாகக் கொடுத்தார். அதை மகிழ்வோடு கொடுத்தார். நிறைவோடு வாழ்ந்தார். இன்றைய நற்செய்தியிலும், இயேசுவைத்தேடி பல நோயாளிகள் வந்தார்கள் என்று வாசிக்கிறபோது, இயேசுவைப் பற்றி இப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது. இயேசுவிடம் மக்கள் கண்ட பரிவு, பாசம், அன்பு தான், இத்தனை மக்கள் அவரைத் தேடி வரக்காரணமாக அமைந்திருந்தது. வந்தவர்கள் அனைவருமே, இயேசுவிடமிருந்து எந்த அளவுக்குப் பெற்றுக்கொள்ள முடியுமோ, அதைப் பெற்றுக்கொள்வதில் கவனமாக இருந்தார்கள். ஆனால், பெற்றுக்கொண்ட அருளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு மனம் வரவில்லை. தொடர்ந்து இயேசு காட்டிய அந்த வழியிலும் வாழ அவர்கள் தயாராக இல்லை. தங்களது கடமை முடிந்தவுடன், தங்களது தேவை நிறைவேற்றப்பட்டவுடன், அவரை மறந்துவிடுகிறார்கள். நமது விசுவாச வாழ்விலும், இந்த மனநிலையை அதிகமாகப் பார்க்கிறோம். இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டு, பெற்றுக்கொண்டிருக்கிற கொடைகளுக்கு பல வேளைகளில் நாம் உண்மையாக இருப்பதில்லை. அதை மற்றவர்களுக்கும் கொடுத்து,...

கனிவோடு கண்டிப்பது கடமையே!

மத்தேயு 14:1-12 நம்மோடு வாழும் ஒருசிலர் தவறான வழிகளில் நடக்கும் போது அவர்களுக்கு ஆழமான ஆன்மீக அறிவுரை வழங்கி அவர்களை ஆண்டவரின் அருகில் கொண்டு வர உதவி செய்ய வேண்டியது அவர் அருகில் இருக்கும் நம் கடமை. அறிவுரை சொல்லும் போது ஒருவேளை கேட்காமல் போனால் கனிவோடும் மிகுந்த அக்கறையோடும் கண்டிப்பது மிகவும் அவசியம். இன்றைய நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் கனிவாக கண்டிப்பை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. திருமுழுக்கு யோவான் தன் சகோதரனின் மனைவியை ஏரோது வைத்திருப்பது முறையல்ல என அவனை கனிவோடு கண்டிக்கிறார். திருமுழுக்கு யோவானின் இந்த கண்டிப்பு இரண்டு அவசியமான காரணங்களுக்காக.1) ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்கை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வருங்கால தலைமுறையினருக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் 2) தவறு என்றால் அது யார் செய்தாலும் அது தவறுதான் என்பதை அழுத்தமாக அறிவிக்கவும் இந்த இரண்டு காரணங்களை அவர்...

உங்கள் உற்காசத்தால் உங்கள் ஊர்க்காரர் உயரட்டும்!

மத்தேயு 13:54-58 ஒரே ஊரில் வாழும் மனிதர்கள் தங்கள் ஊர்க்காரரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைவதில்லை. பெரும்பாலும் பொறாமை தான் பொங்கி வருகிறது. இப்படி இருப்பதனால் ஒருவருக்கொருவர் வளர்ச்சியை காண்பதில்லை. அதோடு மட்டுமல்லாமல் அந்த மொத்த ஊரிலும் வளர்ச்சி என்பது இல்லாமல் போகிறது. பல நல்ல காரியங்கள் நடக்காமலே போகிறது. அதற்கு மிக சிறந்த உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகச்சிறந்த திறமையுடன் மறைநூலை எடுத்துரைத்த போது அவர்கள் தன் சொந்த ஊார்க்காரன் தானே என்று அலட்சியமாக இருந்ததால் இயேசு தன்னுடைய ஆற்றலை அங்கு வெளிப்படுத்த ஆசைப்படவில்லை. அதனால் இயேசு கிறஸ்துவின் திறமை அங்கே வெளிப்படுத்தப்படவில்லை. ஆகவே அந்த ஊரின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலே தடை ஏற்படுகிறது. நம் ஊார்க்காரன் என்ற உணர்வு நமக்குள் மேலோங்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மனதார பாராட்ட வேண்டும். மிக அதிகமாகவே உற்சாகப்படுத்த வேண்டும். அதற்காகவே நாம் ஒரே...

குயவனும், மண்பானையும்

எரேமியா 18: 1 – 6 இறைவன் உருவகங்கள் வழியாக, தன்னுடைய செய்தியை, மக்களுக்கு அறிவிக்க வேண்டிய செய்தியை, இறைவாக்கினர் வழியாக அறிவிப்பதை இன்றைய வாசகத்தில் நாம் பார்க்கிறோம். குயவன், மண்பானை உருவகத்தை இறைவன் பயன்படுத்துகிறார். குயவன் மண்பானை செய்கிறான். அந்த மண்பானை என்பது, குயவனின் உருவாக்கத்தில் விளைந்தது. தன்னுடைய விருப்பத்திற்கேற்ப, தான் எண்ணியவற்றை, மண்பானையாக குயவன் வடிக்கிறான். அவர் செய்ய விரும்புவதையெல்லாம், அந்த மண்பானை செய்வதில் அவர் செய்து கொள்ளலாம். இந்த உவமையானது, இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிப்பதற்காகச் சொல்லப்படுகிறது. கடவுள் அவர்களுக்குச் சொல்கிற செய்தி இதுதான்: ஒரு நாட்டையோ, அரசையோ எப்போது வேண்டுமானாலும் பிடுங்கி எறிவதற்கு கடவுளுக்கு ஆற்றல் இருக்கிறது. ஏனென்றால், அவர் இந்த உலகத்தைப் படைத்து பராமரிக்கிறவர். அதேவேளையில், சொல்லப்படுகிற செய்தியைக் கேட்டு, அவர்கள் தங்கள் தீய வழிகளிலிருந்து விலகி, தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்வாரென்றால், நிச்சயம் கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார். எல்லாமே கடவுளின் கையில் இருந்தாலும்...