Tagged: தேவ செய்தி

மற்றவர்களை மதித்து நடப்போம்

”உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு, உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம் ”உன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?” என்ற வார்த்தைகளைச் சொல்லும்போது, நிச்சயமாக அவர் புன்முறுவல் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், பழத்திலே ஊசி ஏற்றுவது போல, இயேசு புன்முறுவலோடு, ஒரு செய்தியை அங்கே சொல்கிறார். இயேசு சொல்ல வருகிற செய்தி, இந்த உலகத்தில் யாரும் எவரையும் குற்றப்படுத்திப் பேசுவதோ, தீர்ப்பிடுவதோ, குற்றம் கண்டுபிடிப்பதோ கூடாது. அதற்கு ஒருவரும் தகுதியானவர்கள் கிடையாது. அப்படியே குற்றப்படுத்த விரும்பினாலும், குற்றம் இல்லாதவர்கள் குறைகூறலாம் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் குற்றம் இல்லாதவர்கள் எவருமே கிடையாது. எனவே, யாரும் மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதுதான் இயேசு சொல்கிற செய்தி. ஆனால், நாம் ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை நமது வார்த்தைகளால், செயல்பாடுகளால் காயப்படுத்துகிறோம். உண்மையிலே நாம் நேர்மையாளர்கள் என்றால், நிச்சயம் மற்றவர்களை நாம் குற்றப்படுத்த மாட்டோம். அவர்களை ஏற்றுக்கொண்டு தான் வாழ்வோம். நாம்...

கட்டாயக் கல்வி: திரும்ப கிடைக்காது

லூக்கா 6:27-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் அனைத்தையும் செய்கிறோம். நாம் செய்கிற உதவி, நாம் காட்டுகிற அன்பு என அனைத்தும் திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் செய்கிறோம். திரும்ப கிடைக்காது என்று தெரிந்தால் நாம் திரும்ப திரும்ப பல முறை யோசிப்போம். அப்படி யோசிக்கும் நமக்கு மிகச் சிறந்த கட்டாயக் கல்வியாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த கட்டாயக் கல்வி என்னவென்றால் நாம் செய்வது திரும்ப கிடைக்காது என்பதை புரிந்துக்கொள்வது தான். 1. செய்ததை மறந்து விடு பிறருக்கு உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தற்காக கடவுளுக்கு நன்றி சொல்வது பெருந்தன்மை. செய்த உதவிக்கு...

பட்டியலைப் பார்த்தீர்களா?

லூக்கா 6:20-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்றைய நற்செய்தி வாசக்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு பட்டியலை வெளியிடுகிறார். என்ன அந்த பட்டியல்? அதுதான் பேற்பெற்றோர் யார் என்பதும் கேடுற்றோர் யார் என்பதும் ஆகும். நமக்கு அந்த பட்டியலில் எந்த இடம் என்பதை கவனமாய் கண்டுபிடிக்க இன்றைய வழிபாடு நம்மை அழைக்கின்றது. 1. பரிசு வரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் மலைப்பொழிவில் பேறுபெற்றோருக்கான பரிசுகளை வழங்குகிறார். ஏழைகளுக்கு விண்ணரசு என்ற பரிசு கிடைக்கும். பட்டினியாய் இருப்போருக்கு பசி தீா்ந்து நிறைவு என்ற பரிசு கிடைக்கும். அழுது கொண்டிருப்போர் சிரிப்பு என்ற பரிசை பெறுவர் என ஆண்டவர் இயேசு பேறுபெற்றோருக்கான பரிசுகளை அறிவித்துக்கொண்டே சொல்கிறார். 2....

தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா

வாழ்க்கையை கோலாகலமாக்கு… மத்தேயு 1:1-16,18-23 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாளின் பிறந்த நாள் விழாவினைச் செப்டம்பர் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மிக கோலாகலமாக நாம் கொண்டாடுகின்றோம். அன்னை மரியாள் மிகவும் கோலாகலமாக வாழ்ந்தார். ஆகவே அவரின் அன்பு பிள்ளைகளாகிய நாமும் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றோம். இந்த இனிய நாளில் நம் வாழ்வை கோலாகலமாக மாற்ற வேண்டும். அதற்கு மரியை மாதிரியாக கொண்டு வாழ வேண்டும் என இப்பெருவிழா பெருமகிழ்ச்சியோடு நம்மை அழைக்கின்றது. மரியிடமிருந்து நான்கு மாதிகள் நமக்கு மூலதனமாக உள்ளன. 1. அருள் தெரிகிறது “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன் நீ பிறக்கும் முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்(எரே...

நன்மைக்கு விடுமுறை இல்லை

லூக்கா 6:6-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கையை நீட்டி நன்மையை பெறுகின்ற ஒவ்வொரு கிறிஸ்தவா்களும் நன்மை செய்ய வேண்டும் என்ற அழைப்பைப் பெறுகின்றார்கள். நன்மை என்று ஆண்டவரின் உடலை எதற்காக சொல்கிறோம்? நாம் நன்மை செய்பவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவே. இயேசு நடந்த இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார். நாமும் அப்படி செய்ய வேண்டும் என்ற அழுத்த திருத்தமான அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நன்மை செய்யும் போது நாம் இரண்டு காரியங்களை கண்டுக்கொள்ளவே கூடாது. 1. குறைகளைக் கண்டுக் குனியாதே நாம் நன்மைகள் செய்யும் போது பல விதமான விமர்சனங்கள் வரும். அவைகள் நம் நன்மைகளுக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாம்...