Tagged: தேவ செய்தி

ஆண்டவரே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது!

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8 இந்த உலகத்தில் தாகம் எடுக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்த உடலுக்கு தண்ணீர் தேவை. ஏனென்றால், நம்முடைய உடல் பஞ்சபூதங்களால் இணைந்த ஒன்று. இந்த உடல் தண்ணீராலும் நிரப்பப்பட்டிருக்கிறது. தண்ணீர் அருந்துகிறபோது, நம்முடைய தாகம் தணிகிறது. இந்த தாகம் என்பதை நாம் பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். அதிகார தாகம், செல்வம் சேர்க்கக்கூடிய தாகம், முதல் இடம் பெற வேண்டும் என்கிற தாகம் என்று, இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது நாம் பார்த்த தாகமெல்லாம், இந்த உலகம் சார்ந்த தாகம். இன்றைய திருப்பாடலில் இந்த உலகம் சார்ந்த தாகம் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஆன்மா சார்ந்த தாகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருப்பாடல் ஆசிரியரின் தாகம், இந்த உலகம் சார்ந்த தாகமாக இருக்கவில்லை. அவருடைய தாகம் இறையனுபவத்தைப் பெறுவதற்கான தாகமாக இருக்கிறது. இது உயர பறக்க...

மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவரைத் தொழுவேன்

திருப்பாடல் 116: 12 – 13, 15 – 16, 17 – 18 மீட்பின் கிண்ணம் என்றால் என்ன? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுப்பது என்பதின் பொருள் என்ன? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுப்பது என்பது இறைவனை வழிபடக்கூடிய செயலைக் குறிக்கிறது. இறைவனை வழிபடுகிறபோது, திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலை பாடுகிறார். அவர் ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறார். இறைவனுக்கான காணிக்கைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார். இறைவனுக்கான காணிக்கைப் படைக்கிறபோது, நீர்மப்படையலும், விலங்குகளின் இறைச்சியும், பலிப்பொருட்களுமாக இணைத்துப் படைக்கப்படுகிறது. இறைவனுக்கு படைத்துவிட்டு அதனை எடுக்கிறபோது, இறைவனின் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. கிண்ணம் என்பது, “நிறைவான“ ஆசீரைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களின் மீட்புக்கான ஆசீர்வாதம், அதாவது வாழ்வை அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான ஆசீர்வாதத்தை அவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பது, இந்த சடங்கு உணர்த்தக்கூடிய உண்மையாகும். இறைவனிடம் வரக்கூடிய நாம் அவருடைய அருள் வரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற...

ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கை

திருப்பாடல் 105: 1, 5, 8 – 9, 24 – 25, 26 – 27 ஒரு சில திருப்பாடல்கள் மிக நீளமானதாக அமைந்திருக்கும். ஒரு சில திருப்பாடல்கள் மிகக் குறுகியதாக இருக்கும். குறுகியதோ, நீளமானதோ, எப்படிப்பட்ட மனநிலையோடு வார்த்தைகளில் ஒன்றித்திருக்கிறோம் என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்த திருப்பாடல் நீளமான திருப்பாடல். வழக்கமான மற்ற திருப்பாடல்களைப் போல, இறைவனின் மாட்சிமையைப் புகழ்வதற்கான பாடல் தான் இது. உடன்படிக்கைப் பேழையை கொண்டு வரக்கூடிய நிகழ்வை குறிக்கக்கூடிய பிண்ணனியைக் கொண்டதனால், இறைவன் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை இது குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இன்றைய திருப்பாடல் ஆபிரகாமோடும், இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்களோடும் இறைவன் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆபிரகாம் குழந்தை இல்லாமல் இருந்த காலத்தில், கடவுள் அவர் வழியாக சந்ததியைப் பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். ஆபிரகாமோ உடன்படிக்கையை மேற்கொள்கிறார். அந்த வாக்குறுதிக்கு உண்மையானவராக இருக்கிறார். இஸ்ரயேலை வழிநடத்திய...

எளியேன், சிறுமைப்பட்டவன்

திருப்பாடல் 69: 2, 13, 29 – 30, 32 – 33 இயற்கையின் அழிவுக்கு நடுவில் இருப்பது போல் உணர்வதாக திருப்பாடல் ஆசிரியர் உணர்ந்து எழுதுகிறார். ஆழமான நீர்த்திரள், நிலைகொள்ளாத நீர், வெள்ளம் போன்ற உருவகங்கள், அவர் துயரங்களுக்கு மத்தியில் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அவருடைய இதயம் நொறுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அவருடைய மனம் புண்பட்ட நிலையில் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சவுலின் எதிர்ப்பு, உடனிருந்தவர்களின் துரோகம், உயிரைப்பற்றிய பயம் போன்றவை அவருக்கு இந்த கலக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில் அவருக்கு ஆறுதலாய் இருப்பது என்ன? கடவுளின் பாதுகாப்பு. இந்த உலகத்தில் யாரையெல்லாம் அவர் நம்பினாரோ, அவர்கள் கைவிட்ட நிலையில், கடவுளிடம் அவர் பாதுகாப்பை உணர்கிறார். அந்த பாதுகாப்பின் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்கிறார். இந்த புகழ்ச்சி வெறும் உதட்டளவில் வந்த புகழ்ச்சி அல்ல. மாறாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகின்ற புகழ்ச்சி. கடவுளின் உண்மையான அன்பை...

ஆண்டவரின் பெயரே நமக்குத்துணை

திருப்பாடல் 124: 1 – 3, 4 – 6, 7 – 8 இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்களுடைய வாழ்வை திரும்பிப்பார்க்கச் செய்கிற திருப்பாடல். நம்முடைய வாழ்வில், நமக்கு ஏணியாக இருந்து உயர்த்திவிட்ட மனிதர்களை நாம் மறக்கிறவர்களாக இருக்கிறோம். உயரத்திற்குச் சென்றவுடன், நம்மை ஏற்றி விட்டவர் நம் நினைவிலிருந்து அகன்று போய் விடுகிறார். அவரை நாம் ஒரு பொருட்டாகப் பார்ப்பதில்லை. ஆனால், அவர் இல்லையென்றால், நாம் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்பது, நமது அறிவிற்கு எப்போதுமே எட்டாது. இந்த நிலை தான் திருப்பாடலிலும் வெளிப்படுகிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால், அவர்கள் இந்த நிலையை அடைந்திருக்க முடியுமா? இந்த உயரத்தைத் தொட்டிருக்க முடியுமா? என்கிற கேள்விகளை, திருப்பாடல் ஆசிரியர் கேட்கிறார். ஒருவேளை ஆண்டவர் இல்லையென்றால், இஸ்ரயேல் மக்களை எதிரிநாட்டவர் அழித்தொழித்திருப்பார்கள். அவர்கள் இன்னும் நாடோடிகளாய்த்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். யாரும் அவர்களை எதுவும் செய்துவிட முடியும் என்கிற நிலையில்...