Tagged: தேவ செய்தி

ஆறுதலின் இறைவன்

பிரிவிற்கும், நோன்பிற்குமான தொடர்பை இன்றைய வாசகம் விளக்கிக்காட்டுகிறது. பிரிவு என்பது பலவிதங்களில் நாம் வாழ்வில் அனுபவிக்கக்கூடிய ஒன்று. நமக்கென்று பல நண்பர்கள் இருப்பார்கள். அவர்களோடு நமக்கு ஒரு சில நேரங்களில், மனக்கசப்பு ஏற்படலாம். நமக்கும் அவர்களுக்குமான உறவில் விரிசல் ஏற்படலாம். அது தற்காலிகப் பிரிவை நிச்சயம் ஏற்படுத்தும். சில உறவுகள் நிரந்தரப் பிரிவுகளாக இருக்கும். இழப்பு மற்றும் இறப்பு நமக்கு ஆழாத்துயரை ஏற்படுத்தும் பிரிவாக இருக்கிறது. ஆக, பிரிவு என்பது நமக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நோன்பு என்பது நம்மை இறைவன்பால் ஈடுபடுத்துவதற்கான முயற்சி ஆகும். இன்றைக்கு நோன்பிருந்து கால்நடையாக பல திருத்தலங்களுக்கு மக்கள் செல்கிறார்கள். நோன்பிருந்து செபிக்கிறார்கள். இவையனைத்துமே இறைவனை அடைவதற்கான ஒரு தேடலே ஆகும். இந்த நோன்பு, நம்மை கடவுள்பக்கம் ஈர்ப்பதாக அமைகிறது. அவரோடு நெருங்கி வருவதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆக, நோன்பு என்பது கடவுளின் துணையை நாடுவதற்கான ஒரு செயல்பாடாக அமைகிறது. பிரிவில் நாம்...

கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்துள்ளேன்

திருப்பாடல் 52: 8, 9 ”கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்துள்ளேன்” சவுல் தாவீதைக் கொல்வதற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறார். தாவீதை மட்டுமல்ல, அவரோடு நெருக்கமானவர்களையும், குறிப்பாக குருக்களையும் கொலை செய்வதற்கு ஆணையிடுகிறார். அகிமலேக்கின் புதல்வர்களுள் ஒருவனான அபியத்தார் தாவீதிடம் வந்தடைகிறார். அவரிடத்தில் நடந்ததை விவரிக்கிறார். அப்போது தாவீது, ”உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்” என்று குற்ற உணர்ச்சியில் கதறுகிறார். எனவே, அவரை தன்னோடு தங்குமாறு வேண்டுகிறார் (1சாமுவேல் 22: 22). இப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையிலிருந்து விடுபட, தன்னுடைய உள்ளத்தில் இருப்பதை எழுத்து வடிவத்தில் தாவீது எழுதுகிறார். அதுதான் இந்த திருப்பாடல். இந்த திருப்பாடலில் கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்துள்ளதாக தாவீது வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், கடவுள் என்னோடு இருக்கிறார் என்பது தாவீதின் ஆழமான நம்பிக்கை. இக்கட்டான சூழ்நிலையிலும், நெருக்கடியான காலக்கட்டத்திலும் ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து வெளிப்படுத்துகிறார். அவருடைய உள்ளம் பதற்றமாக இருக்கிற வேளையில்,...

ஆண்டவரே! என் ஒளி!

திருப்பாடல் 27: 1, 4, 13 – 14 இந்த திருப்பாடல் தாவீது அரசர் அரியணை ஏறுவதற்கு முன்னதாக எழுதப்பட்ட திருப்பாடலாகவும், அந்த வேளையில் அவர் சந்தித்த துன்பங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட திருப்பாடலாகவும் பார்க்கப்படுகிறது. தாவீதின் பெற்றோர் இறந்த நேரத்தில் பாடப்பட்ட பாடலாகவும் ஒரு சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பான்மையான யூதர்களின் எண்ணப்படி, இந்த பாடல் பெலிஸ்தியருடனான போரின் போது, தாவீது இந்த பாடலை எழுதினார் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. 2சாமுவேல் 21வது அதிகாரம் இஸ்ரயேலருக்கும், பெலிஸ்தியருக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாக இருக்கிறது. 17 இறைவார்த்தையில் சொல்லப்படுகிற செய்தி: இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன் தாவீதை தாக்கவிருந்ததாகவும், செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனை வெட்டிக் கொன்றான் என்றும், இறுதியில் இஸ்ரயேல் மக்கள் தாவீதிடம் வந்து, ”இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது” என்றும் சொன்னதாகவும் இந்த அதிகாரத்தில்...

பிற இனத்தாருக்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்

திருப்பாடல் 96: 1, 3, 4 – 5, 11 – 12, 13 பிற இனத்தவர்க்கு எதற்காக ஆண்டவரைப்பற்றிய செய்தியினை எடுத்துரைக்க வேண்டும்? இது கடவுளின் புகழை அனைத்து உலகினரும் அறிய வேண்டும் என்பதற்காகவா? கடவுளின் பலத்தை அறியச் செய்வதற்காகவா? நிச்சயமாக இது காரணமாக இருக்க முடியாது. கடவுளைப் பற்றி வெறும் புகழையும், வல்லமையையும் மற்றவர்கள் அறியச்செய்து, அவர்களை பயமுறுத்துவதற்காகவோ, அடிமைப்படுத்துவதற்காகவோ இதனை ஆசிரியர் சொல்கிறார். பின் எதற்கு ஆண்டவரது மாட்சியை அறிவிக்கச் சொல்கிறார்? ஆண்டவரது மாட்சியை அறிவிக்கச் சொல்வது, மற்றவர்களும் உண்மையான கடவுளை அறிந்து மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. இது சுயநலத்திற்கானது அல்ல. பொதுநலத்திற்கானது. அனைவரும் மீட்பு பெற வேண்டும் என்கிற பரந்த நோக்கத்தைக் கொண்டது. இறைவனின் அருமை பெருமைகளை அறிய வருகிறபோது, மற்றவர்களும் கடவுளிடத்தில் வருகிறார்கள். அவரின் அன்பைப் பெற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு, பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை நாம் மட்டும் அனுபவிக்கலாகாது. மாறாக, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து...

ஆண்டவர்க்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்

திருப்பாடல் 98: 1, 7 – 8, 9 ஆண்டவர்க்குப் புதியதொரு பாடல் பாட திருப்பாடல் ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். ஆண்டவர்க்கு எதற்காக புதியதொரு பாடல் பாட வேண்டும்? பொதுவாக, இஸ்ரயேல் மக்களின் செபமானது, ஏற்கெனவே தொகுத்து எழுதப்பட்ட இறையனுபவத்தின் வரிகளை மீண்டுமாக நினைவுகூர்வது ஆகும். எகிப்திலிருந்து பாலைவனத்தின் வழியாக, அவர்களை அற்புதமாக விடுவித்தபோது, அவர்கள் சந்தித்த இறையனுபவம் தான், அவர்களுக்கு பாடலாக தரப்பட்டிருந்தது. ஆனால், இப்போது புதியதொரு பாடலைப் பாட ஆசிரியர் அழைப்பு விடுப்பதன் நோக்கம் என்ன? யாவே இறைவன் வரலாற்றில் மட்டும் இல்லை. இன்றும் இருக்கிறார் என்பதை இந்த திருப்பாடல் உணர்த்துகிறது. வழக்கமாக, தெய்வங்களை நாம் வணங்குகிறபோது, அவர்கள் இதுவரை செய்து வந்த அற்புதங்களை நினைவுபடுத்தி, நாம் அவர்களை வழிபடுவோம். யாவே இறைவனைப்பொறுத்தவரையில், அவரது வல்ல செயல்கள் வரலாற்றோடு முடிந்துவிடவில்லை. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்காலத்திலும் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது முடிந்து போனது அல்ல, மாறாக, தொடர்ச்சியானது....