தேடி வந்த தெய்வம் நம் இயேசு
பொல்லாப்பு என்னும் சோதனையிலிருந்து நம்மை மீட்டு, சந்திப்பு என்னும் நாளில் என்னை சந்தித்து, சுத்திகரிப்பு என்னும் ஆவியால் நம்மை கழுவி, நெருப்பு என்னும் அக்கினி அபிஷேகத்தினால் நம் நாவை தொட்டு, நட்பு என்னும் சிநேகத்தால் நம்மை நேசித்து, பண்பு என்னும் பாசத்தால் நம்மை அரவணைத்து, சுட்டெரிப்பு என்னும் ஆவியால் நம் பாவத்தை போக்கி, பாதுகாப்பு என்னும் செட்டைக்குள் நம்மை மறைத்து, அன்பு என்னும் காருண்யத்தால் நம்மை தாங்கி, மன்னிப்பு என்னும் பூவினால் [இரத்தத்தினால்] நம்மை அலங்கரித்து, இரட்சிப்பு என்னும் விடுதலையை [சமாதானத்தை] நமக்கு தந்து, பூரிப்பு என்னும் சந்தோஷத்தினால் நம்மை நிறைத்து, அலங்கரிப்பு என்னும் ஆபரணங்களால் நம்மை ஜோடித்து, ஆர்ப்பரிப்பு என்னும் பெருந்தொனியால் நாம் துதிக்கும்படி செய்து, நியாத்தீர்ப்பு என்னும் நாளில் நம்மை அவரோடு சேர்த்துக்கொள்வார் (Written by – Sara, MyGreatMaster.com)