Tagged: இன்றைய வசனம் தமிழில்
தாய்,தகப்பன் இல்லாத படிப்பறிவில்லாத எஸ்தர் தன்னை வளர்த்து ஆளாக்கிய மொர்தெகாய் என்ற சகோதரனுக்கு எல்லா விஷயத்திலும் கீழ்படிந்து நடந்து தனது மிகுந்த அன்பினாலும், பொறுமையினாலும் தன்னுடைய குலமாகிய யூதா குலம் முழுதும் அழியும் சூழ்நிலையில் இருந்ததை காப்பாற்றி சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பதை பார்க்கும்பொழுது, அதை படிக்கும் பொழுது பெண்களாகியநாம் ஒவ்வொருவரும் நன்கு தியானிக்க வேண்டுமாய் இதை எழுதுகிறேன். இந்தியா முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் உள்ள 127 மாநிலங்களையும் ஆட்சி செய்த ஒரு ராஜாவிடம் சென்று தன் குலத்தை காப்பாற்ற நான் செத்தாலும் சாகிறேன்,என்று சொல்லி துணிந்து ராஜாவின் முன் சென்று தன்னுடைய விண்ணப்பத்தை தெரிவிக்கிறதை பார்க்கிறோம்.ஆனால் அதற்கு முன் மூன்று நாள் இரவு,பகல் உண்ணாமலும், தண்ணீர் முதற்கொண்டு குடியாமலும் பக்தியோடு இறைவனிடம் வேண்டுதல் செய்து நோன்பிருந்து பின் ராஜாவிடம் சென்று தனது விருப்பத்தை தெரிவித்து, அதுவும் உடனே தெரிவிக்கவில்லை. ஞானமாக நடந்து அதாவது இரண்டு நாள் ராஜாவுக்கு விருந்து ஏற்பாடு செய்து அதில் ராஜாவை கலந்துக்கொள்ள பணிவுடன் அழைத்து பின் தனது மன்றாட்டை தெரிவிக்கிறாள். இன்றைய சூழ்நிலையில்...
Like this:
Like Loading...
ஆண்டவரோடு இணைந்து அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலிவூட்டப்பெறுங்கள். ஏனெனில் சாத்தானின் சோதனைகளால் மனம் சோர்ந்து விடுவோம். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமைபெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர்,அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர் வான்வெளியிலுள்ள தீய ஆவிகள்,ஆகியவற்றோடும் போராடுகிறோம்.எபே 6:10 to 12. எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று அனைத்தின்மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆகையால் உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டு, நீதியை மார்புக் கவசமாக அணிந்து நில்லுங்கள். அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்காக உங்கள் காலில் ஆயத்த நிலையை மிதியடிகளாக போட்டுக்கொள்ளுங்கள். எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்து விட முடியும். ஆண்டவர் அருளும் மீட்பைத் தலைச் சீராகவும், கடவுளின் வார்த்தையைத் தூய ஆவிஅருளும் போர்வாளாகவும் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா வேண்டல்களையும்,மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள். எப்போதும் தூய ஆவி துணைக்கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து விழிப்பாயிருங்கள். இறைமக்கள்...
Like this:
Like Loading...
திருத்தூதர்களாகிய பேதுருவும்,யோவானும்,மக்களோடு பேசிக்கொண்டிருக்கையில் குருக்களும், சதுசேயர்களும் அங்கு வந்து இயேசுவை குறித்து அறிவிப்பது பிடிக்காததால் அவர்களை காவலில் வைத்து பின்பு இயேசுவைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என்று சொல்லி பின் விடுதலை செய்தனர். அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நீங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ” கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார் “. இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை, என்று இயேசுவுக்கு என்று அவரின் நாமத்துக்காக,துணிவோடு மக்களுக்கு எடுத்துரைத்தனர். அவர்களின் துணிவைக்கண்ட தலைமைச் சங்கத்தார் வியந்து நின்றனர். ஏனெனில் அவர்களால் சுகம் பெற்ற மனிதர் பக்கத்தில் நின்றதால் சங்கத்தாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் இயேசுவைப்பற்றி சொல்லக் கூடாது என்று சொல்லியும் கேட்காமல் தைரியத்துடன் உங்களுக்கு செவிசாய்ப்பதா ? கடவுளுக்கு செவிசாய்ப்பதா...
Like this:
Like Loading...
வானத்தையும்,பூமியையும் உண்டாக்கிய ஆண்டவர் உங்கள் ஒவ்வொரு வருடனும் கூடவே இருந்து உங்கள் உள்ளத்தில் பேசிக்கொண்டு ஒவ்வொரு நொடிப்பொழுதும் செயலாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்.அவர் ஒருபோதும் அவரை நோக்கி கூப்பிடுகிறவர்களை விட்டுவிலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. அதனால் உங்களுக்கு எந்த ஒரு தேவை இருந்தாலும் அவரையே நோக்கிப்பார்த்து கூப்பிடுங்கள்.அப்பொழுது உங்களுக்கு செவிசாய்ப்பார். நான் ஆண்டவரை அறிந்தக் காலத்தில் எனக்கு வாக்குத்தத்தமாக இந்த வசனத்தை தான் கொடுத்தார். அப்பொழுது எனக்கு வேதத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாததால் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. அதனால் பத்து வருஷம் வேதத்தை வாசிக்கவில்லை.ஆனால் நான் மறந்தாலும் ஆண்டவர் என்னை மறக்கவேயில்லை. ஏனெனில் 10 வருஷம்கழித்து எனக்கு ஒரு சோதனையைக் கொடுத்து மறுபடியும் அதே வசனத்தை திரும்பக்கொடுத்து எனக்கு ஞாபகத்தைக் கொடுத்தார். அந்த சோதனையால் பல அவமானங்களை சந்தித்தேன். ஏனெனில் ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாத சோதனை அது, நான் செய்யாத தவறுக்கு என்மேல் கொலைப்பழி சுமத்தி என்னை சிறையில் அடைக்கப்பார்த்தார்கள். ஆண்டவரை மறந்திருந்த நான் அப்பொழுது திகைத்து நின்றேன். ஆனால் ஆண்டவர் என்னை மறக்கவேயில்லை. மறுபடியும் அந்த வசனத்தை எனக்கு ஞாபகப்படுத்தி எனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்கள்...
Like this:
Like Loading...
“இருக்கின்றவராகவே இருக்கின்றவர் நானே” என்று அன்று மோசேயிடம் வாக்களித்து நீ இஸ்ரயேல் மக்களிடம் சென்று ” இருக்கின்றவர் நானே” என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்லச் சொன்னார். விடுதலை பயணம் 3 : 14. அன்று அவ்வாறு வாக்களித்த இறைவன் இன்றும் ” இருக்கிறவராகவே இருந்து” எனக்காக,உனக்காக ஏன் நம்மெல்லோருக்காகவும் இந்த பூமியில் ஒரு மனிதனாக பிறந்து அன்பை வெளிப்படுத்தினார். ஆபிரகாமின் கடவுள்,ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்,இந்த உலகம் அனைத்திற்கும் கடவுள் அவரே, இதுவே என்றென்றும் என் பெயர் என்று சொல்லி தலைமுறை, தலை முறையாக,என் நினைவுச் சின்னமும் இதுவே! வி.ப 3:15 என்று சொல்வதை வாசிக்கிறோம். கடவுள் அனைத்தையும் கடந்தவர். மனித அறிவுக்கு எட்டாதவர். அவரின் இன்னொரு பெயர் யாவே என்பதாகும். எதையும் காண்பவர், யாவற்றையும் கடந்தவர், இவ்வளவு மகத்துவமும், வல்லமையும் , மாட்சியும், ஜெயமும் உள்ள கடவுள் ஏன் மிகவும் தாழ்மை நிலையில் ஒரு மாட்டுக்கொட்டகையில் வந்து பிறக்கவேண்டும்?அவர் நினைத்திருந்தால் ஒரு ராஜாவாக, அல்லது வானத்தில் இருந்து நேரிடையாக இறங்கி நான்தான் கடவுள்...
Like this:
Like Loading...