Tagged: இன்றைய வசனம் தமிழில்
ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றது! அவரே பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!. அவரையே நம்முடைய பங்காக கொண்டு அனுதினமும் செயல்படுவோமானால் நம் நிழலாக இருந்து நம்மை காத்துக்கொள்வார். காலைதோறும் தேடுவோருக்கு அவர் நல்லவர்! ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்! ஏனெனில் அவர் கட்டளையிடாமல் யார் தாம் சொல்லியதை நிறைவேற்றக்கூடும்? ஆண்டவர் நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிறார். நாம் அமர்வதையும், எழுவதையும் அறிந்திருக்கிறார். நம்முடைய எண்ணங்கள் சிந்தனைகள் யாவும் அவருக்குத் தெரியும். நாம் நடந்தாலும், படுத்திருந்தாலும் நம்முடைய வாயில் வார்த்தைகள் உருவாகும் முன்பே முற்றிலும் அவர் அறிந்திருக்கிறார். நம்மேல் அவர் வைத்துள்ள அறிவை நாம் அறியமுடியுமோ? அது நமக்கு வியப்பானது அல்லவோ! அவருக்கு மறைவாக எங்கேயாவது நாம் போகமுடியுமா? விண்ணையும், மண்ணையும், காற்றையும், கடலையும், மண்ணான மனிதர்களாகிய நம்மையும் படைத்தவர் அவர் அல்லவா!! நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நாம் பெற்றிட ஆண்டவர் நமக்கு கற்றோரின் நாவைக் கொடுக்கிறார். அதற்காகவே காலைதோறும் நம்மை தட்டி எழுப்புகிறார். கற்போர் கேட்பதுபோல நாமும் காலைதோறும் அவரின் வார்த்தைகளை வாசித்து...
Like this:
Like Loading...
இயேசுகிறிஸ்து இந்த உலகில் வந்து பிறந்து தமது தந்தையின் எல்லா நினைவுகளையும் செயல்படுத்தி சென்றுள்ளார். மீதி பணியை நிறைவேற்ற மனிதர்களை ஏற்பாடு செய்திருக்கிறார். இயேசு எப்படி தம் தந்தையின் திருவுளத்தை அறிந்து செயல்பட்டாரோ அதேபோல் நாமும் அவரின் சித்தம் அறிந்து செயல்படவே விரும்புகிறார். நாம் திருப்பாடல்கள் 4 : 3 ல் இவ்வாறு வாசிக்கிறோம். ஆண்டவர் என்னைத்தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார் என்றும் 8 : 5 ம் வசனத்தில் ஆயினும் அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர் ; மாட்சியையும், மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டி உள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர் என்று வாசிக்கிறோம். தந்தை எப்படி தமது குமாரனுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்தாரோ, ஆண்டவர் அவரைப் பின்பற்றி நாமும் செயல்படவேண்டுமாக விரும்புகிறார். ஆண்டவர் அதற்காகவே நம்மை அழைத்து இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் விரும்பும் விதத்தில் செய்து முடிக்கும்படி நமக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுத்திருக்கிறார். நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும்...
Like this:
Like Loading...
தொடக்கத்தில் வாக்கு இருந்தது;அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.அவரே இயேசுகிறிஸ்து என்னும் பெயரில் இந்த உலகிற்கு ஒளியாக வந்தார்.இருளில் இருக்கும் மனிதர்களை மீட்கும்படி வந்தார்.நாமும் அவரிடம் முழுமனதுடன் நம்பிக்கை கொண்டால் அவருடைய செல்லப்பிள்ளைகளாக இருக்கலாம்.அவருடைய செல்லப்பிள்ளைகளாக மாறுவோமானால் நமக்கு தெரியாமல்,அதாவது நம்மிடம் சொல்லாமல் எதுவும் செய்யமாட்டார்.அதை நாம் வாசிக்கலாம்.தம் ஊழியர்களாகிய அதாவது அவரின் பிள்ளைகளாகிய நமக்கு தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல் ஆண்டவர் எதுவும் செய்வதில்லை.என்று ஆமோஸ் 3:7 ல் படிக்கிறோம்.அப்படி என்றால் இந்த வசனத்துக்கு என்ன அர்த்தம் என்று யோசித்து பார்க்கலாமே!! ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் நினைக்கலாம் அதில் இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்துவதாக அல்லவா எழுதியிருக்கிறது என்று சொல்லலாம்.நீங்கள் யோவேல் 2 : 28 ஐ வாசித்துப் பாருங்கள்.நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன்;உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்;உங்கள் முதியோர் கனவுகளையும்,உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.உங்கள் பணியாளர்...
Like this:
Like Loading...
கேளுங்கள்,உங்களுக்கு கொடுக்கப்படும்;தேடுங்கள்,கண்டடைவீர்கள்.தட்டுங்கள்,உங்களுக்கு திறக்கப்படும்.ஏனெனில் கேட்போர் எல்லோரும் பெற்றுக்கொள்கின்றனர்.தேடுவோர் கண்டடைகின்றனர்.தட்டுவோருக்கு திறக்கப்படும்.உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தை கேட்கும் உங்கள் பிள்ளைக்கு கல்லை கொடுப்பீர்களா? அல்லது அந்தப்பிள்ளை மீன் வேண்டும் என்று கேட்டால் அதற்கு பதிலாக பாம்பை கொடுப்போமா?நாமே நம்முடைய பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்பதை கொடுக்கும் பொழுது விண்ணையும்,மண்ணையும் உண்டாக்கிய கடவுள் நாம் கேட்கும் பொழுது கொடுக்காமல் இருப்பாரா?நிச்சயம் கொடுப்பார்.நாம் கேட்க வேண்டிய முறையில் கேட்டால் நமக்கு இல்லை என்று சொல்லவே மாட்டார். யோவான் 14 : 13 ,14, ஆகிய வசனங்களில் நாம் வாசிப்பது என்ன?நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்.நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்,என்று சொல்கிறார். நாம் மறந்தாலும் நம்மை ஒருபோதும் மறக்காத இயேசு நாம் கேட்பதை கொடுத்து ஆசீர்வதிப்பார்.அதற்கு நாம் அவரைத் தேடவேண்டும். எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்.என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டு பிடிப்பார்கள் என்றும் எழுதியிருக்கிறது. ஆண்டவரிடமே செல்வமும்,மென்மையும்,அழியாப் பொருளும் அனைத்து...
Like this:
Like Loading...
நாம் வேண்டுவதற்கு முன்னே மறுமொழி தரவும்,நாம் பேசி முடிப்பதற்கு முன்னே பதில் அளிக்கவும் கடவுள் எப்பொழுதும் நம்முடைய நினைவாக நிழலாக இருக்கிறார்.நம்மை ஒரு திராட்சை தோட்டமாக உருவாக்கி நல்ல பழங்களை நாம் கொடுக்கும்படி அவர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.நற்கனிகளை கொடுக்கிறோமா?என்று ஒவ்வொருவரும் இந்த நாளில் சிந்தித்து செயல்பட வேண்டுமாக விரும்புகிறார்.ஏனெனில் மலைகளை உருவாக்கியவர் அவரே; தோற்றுவிப்பவர் அவரே; எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுதுபவரும் அவரே;காலைப்பொழுதை காரிருள் ஆகச் செய்பவரும் அவரே;இப்பேற்பட்ட ஆண்டவருக்கு நாம் நல்ல பழங்களை கொடுக்கிறோமா? ஒருநாள் இயேசு காலையில் நகரத்திற்கு திரும்பி வந்தபொழுது அவருக்கு பசி உண்டாயிற்று.வழியோரத்தில் ஒரு அத்தி மரத்தை பார்த்து அதன் அருகில் சென்று அதில் ஏதாவது கனி இருக்கும்,பறித்து சாப்பிடடலாம் என்று நினைத்தார்.ஆனால் அந்த மரத்தில் ஒன்றும் இல்லாததால் அந்த மரத்தைப் பார்த்து இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய் என்று சொன்னார்.உடனே அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று.சீடர்கள் யாவரும் ஆச்சரியப்பட்டு இந்த மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?என்று...
Like this:
Like Loading...