எல்லோருக்கும் மதிப்புக் கொடுங்கள்
“கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று “. மற்றும் அது, ” இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும் “, இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள் இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். 1 பேதுரு 2 : 7,8. வாசிக்கிறோம். விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவன் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுப் போனாலும் அவரே நம் எல்லோருக்கும் மூலைக்கல்லாக விளங்குகிறார். இந்த உலகில் வந்து பிறந்த ஒவ்வொருவரும் ஆண்டவரின் பிள்ளைகளே! நாம் யாரையும், வேதனைப்படுத்தவோ, அலட்சியப்படுத்துவதையோ, இறைவன் ஒருநாளும் விரும்பவே மாட்டார். எல்லோரையும் மதித்து நடக்க வேண்டும், மதிப்பு கொடுக்க வேண்டும் என்றே ஆண்டவர் விரும்புகிறார். அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டு பணிந்திருங்கள்; அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும், நன்மை செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப் பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள். இவ்வாறு நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம் எல்லோருக்கும் மதிப்பு கொடுக்கவும், சகோதர, சகோதரிகளிடம் அன்பு செலுத்தவும், கடவுளுக்கு அஞ்சி நடக்கவும், அரசருக்கு மதிப்பு கொடுக்கவும் வேண்டும் என்பதே நம்...