Tagged: இன்றைய வசனம் தமிழில்
எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன். அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன் என்று நம்முடைய ஆண்டவர் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். 2 குறிப்பேடு 7 : 14. நாம் நமது பாவங்களை அறிக்கை செய்து மறுபடியும் அதை செய்யாதபடிக்கு விட்டுவிட்டால் ஆண்டவரும் நமக்கு மன்னித்து அவற்றை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டு நம்மை எல்லா ஆபத்துக்கும் விலக்கி காத்து நம்மேல் அன்புக்கூர்ந்து உயர்த்தி ஆசீர்வதிப்பார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டால் நாமும் ஆண்டவரைப்போல் மறுரூபமாக்கப்படுவோம். எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. ஏசாயா 60:1ல் வாசிப்பதுபோல ஆண்டவர் அவரின் முகத்தை நம்மேல் உதிக்கப்பண்ணுவார். இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக்கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும். அன்பானவர்களே! நாமும் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து ஆண்டவரின் சமூகத்தை நித்தமும் தேடினால் அந்தந்த...
Like this:
Like Loading...
பிரியமானவர்களே!!! இன்று நீங்கள் எனக்காக பரிந்து பேச யாருமில்லையே! என்று கவலைப்படுகிறீர்களா? நான் என்ன செய்தாலும் அதில் குறை, குற்றம்,என்று சொல்கிறார்களே என்று கலங்கித் தவிக்கிறீர்களா? உங்களுக்காக பரிந்து பேசுகிற ஒருவர் உண்டு, என்பதை நீங்கள் யாவரும் தெரிந்துக்கொள்ளவேண்டும், என்று விரும்புகிறேன். அவரே நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. 1 யோவான் 2 – 1 மற்றும் 2 என்ற வசனத்தை வாசித்து பார்ப்போமானால் நன்கு விளங்கும். அதுமட்டுமல்ல, நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் பாவங்களை நமக்கு மன்னித்து [ நம் பாவங்களுக்கு கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டுமல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே;] விண்ணுலகின் தந்தையிடம் பரிந்து பேசி நமக்கு எல்லா கவலைகளிலும் இருந்து விடுதலை வாங்கித்தருகிறார். அவரை ஏற்றுக்கொண்டு அவரையே நம்புவீர்களா? பிள்ளைகளே, தந்தையரே, தாய்மார்களே, வாலிப சகோதரரே, சகோதரிகளே, சிறுவர்களே நீங்கள் யாவரும் கடவுளின் கடவுளின் வார்த்தையில் நிலைத்திருங்கள்.1 யோவான் 2 :12 லிருந்து 17 வரை உள்ள வார்த்தைகளை தியானியுங்கள். உலகின் மீதும் அதில் உள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு நீங்கள் அன்பு...
Like this:
Like Loading...
ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை. அவருக்கு அஞ்சி நடப்பவர் அதற்குள் சென்று அடைக்கலம் பெறுவார். நீதிமொழிகள் 18:10.ல் வாசிக்கிறோம். அவருடைய பெயரை நாம் உச்சரித்தாலே நமக்கு மிகுந்த சமாதானமும்,சந்தோசமும் உண்டு.ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உனக்கு மறுஉத்தரவு அருளிச் செய்து உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமை படுத்துவாய் சங்கீதம் 50:15ல் உள்ளபடி அவரையே அண்டிக்கொண்டு சுகமாயிருப்போம் ஒரு குழந்தை எப்படி ஒரு வேற்று மனிதரை கண்டால் தன் தாயிடம் ஓடி தமது முகத்தை மறைத்து அவர்களை இருக்க அணைத்துக்கொள்ளுமோ. நாமும் ஒரு குழந்தையாய் ஆண்டவரின் பாதங்களை இறுகப்பற்றிக்கொண்டு அவரிடம் அடைக்கலம் புகுந்தால் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்துக் கொள்வார். கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் நம்மை தாழ்த்தி அவரிடம் தஞ்சம் புகுந்தால் ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்தி ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஏனெனில் அவர் நம்மேல் கவலைக்கொண்டு நம்மை விசாரிக்கிற ஆண்டவர். நமது கவலை எல்லாம் அவரிடம் ஒப்புக்கொடுத்து அவரை உறுதியாய் பற்றிக்கொள்வோம். நெருக்கடி வேளையில் நமக்கு ஆண்டவர் பதில்...
Like this:
Like Loading...
இந்த உலகில் இயேசு வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர்கள் இயேசுவை அணுகி விண்ணரசில் யார் பெரியவர் என்று கேட்டார்கள். அப்பொழுது அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். இந்த சிறு பிள்ளையைப்போல் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர். இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என்று மத்தேயு 18 – 1 to 5 வரை வாசிக்கிறோம். நாமும் இந்நாளில் ஆண்டவர் விரும்பும் வண்ணம்நாமும் ஒரு சிறு குழந்தையைப் போல் மாறுவோம். அப்பொழுது நம் ஆண்டவர் நம்மை உயர்ந்த கன்மலையின் மேல் நிறுத்துவார். இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன் எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். ஆனால் எவ்வளவு நான் வருந்தி அழைத்தேனோ அவ்வளவாய் என்னை விட்டு தூரமாய் போனார்கள் பாகால்களுக்கு பலியிட்டார்கள். சிலைகளுக்கு தூபம் காட்டினார்கள். அவர்களை நடை பயிற்றுவித்ததும் நானே அவர்களை கையில்...
Like this:
Like Loading...
விண்ணையும், மண்ணையும் படைத்த தேவன் இந்த ஆகஸ்ட் மாதம் முழுதும் நம்மோடு இருந்து பாதுகாத்து ஒரு சேதமும் இல்லாமல் காத்து வழிநடத்தி வந்திருக்கிறார். நேற்று இருக்கும் ஒருவர் இன்று இருப்பது நிச்சயமில்லாத உலகத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கோம். அப்படியிருக்க நாம் ஆண்டவரை துதித்து போற்றும்படி அவர் நமக்கு தம்முடைய ஜீவனைக் கொடுத்து தமது செட்டைகளின் மறைவில் வைத்து காத்து அடுத்த மாதமாகிய செப்டம்பர் மாதத்தை காண கிருபை அளித்துள்ளார். அவரை நன்றியோடு துதிப்போம். இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பிரச்சனை. கவலை இல்லாத , தேவைகள் இல்லாத மனிதர்களே இல்லை. நம்முடைய ஒவ்வொரு தேவைகளையும் நமக்கு வெற்றி கரமாக செய்து கொடுக்கவே நம் ஆண்டவர் நம்மை காண்கிற தேவனாக இருந்து கரம் பிடித்து வழிநடத்துக்கொண்டு இருக்கார். நாம் நமது பாரங்களை அவர் பாதம் வைத்துவிட்டு நிம்மதியோடு அவரைப் போற்றித் துதிப்போம். ஏனெனில் அவர் துதிகளின் நடுவே இருக்கும் ஆண்டவர், அவர் விரும்பும் காரியமும் அதுவே. நாம் எல்லா தேவைகளையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவரை நம்பி துதிக்கையில் மனமிரங்கும் தேவன் தமது அளவற்ற...
Like this:
Like Loading...