Tagged: இன்றைய வசனம் தமிழில்
விண்ணையும், மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடத்தில் இருந்தே நமக்கு உதவி கிடைக்கும். ஏனெனில் அவரே நம்முடைய கால்கள் இடறாதபடிக்கு பார்த்துக்கொள்வார். அவரே எப்பொழுதும் நம்முடைய வலப்பக்கத்தில் இருந்து, நமக்கு நிழலைப்போல் நம்மோடு கூடவே இருந்து நம்மைக்காத்துக்கொள்வார். நல்ல ஆயனாக, ஒரு தாயாக இருந்து நேற்றும், இன்றும், நாளையும் காப்பவர் அவரே. முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்ப்போல், அவரின் தலையில் முள்முடியை நமக்காக ஏற்றுக் கொண்டார். எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி பூங்கொத்தின் வாசனைப்போல் மணம் வீசி தமது இரத்தத்தால் நம்முடைய பாவத்தின் அழுக்கை நீங்கச்செய்து நறுமண தைலத்தால் நம்மை அலங்கரித்து நம் இதயத்தில் வாசம் செய்து சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தருபவர் அவரே. வானத்தின் நட்சத்திரங்களை ஒளிரச் செய்கிற தேவன் தூங்காமல், உறங்காமல், நம்மையும், நமது வாழ்க்கையும் ஒளிரச் செய்கிறார். அவரிடம் அன்புக் கொள்ளுகிறவர்களுக்கென்று அவர் ஏற்பாடு செய்து வைத்திருக்கிற காரியங்கள் இதுவரை நம் கண்ணுக்கு புலப்படவில்லை. நமது செவிக்கு எட்டவுமில்லை. மனிதனின் உள்ளமும் அதை அறிந்துக்கொள்ளவில்லை. இவைகளை தூய ஆவியானவர் மூலமாகவெ நமக்கு வெளிப்படுத்துவார். மனித இயல்பை மட்டும்...
Like this:
Like Loading...
கடவுள் தாவீதை தெரிந்தெடுத்து அவரை இஸ்ரயேல் தேசம் முழுவதுக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்து சிங்காசனத்தில் அமர்த்துகிறார். தாவீது சாதாரண நிலையில் ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்த ஒரு வாலிபன். அவனுக்கு எந்த படிப்பு அறிவும் கிடையாது. ஆனால் கடவுள் பேரில் மிகப்பெரிய பக்தி வைராக்கியம், நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையால் தான் கோலியாத்தை முறியடித்தான். சவுல் ராஜா மிகப்பெரிய சேனைகளை வைத்துக்கொண்டு இருந்தும் அந்த கோலியாத்துக்குப் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தான். ஆனால் ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்த தாவீது ஒரு சின்ன கல்லின் மூலம் கோலியாத்தை வீழ்த்துவதை காண்கிறோம். ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமை ஆக்குவேன். இவ்வுலகை சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டி விட்டாரல்லவா? கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்துகொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துக் கொள்ளவில்லை. கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த சிறுமையானவர்களையே தெரிந்துக்கொள்கிறார். இதோ இதை எழுதும் நான்கூட ஒரு அறிவாளி...
Like this:
Like Loading...
நாம் நமது கடவுளின் ஆட்சியை தேடுவோமானால் அவரும் நம்முடைய சுகவாழ்வுக்கு கட்டளையிடுவார். ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து முதலாவது அவரை தேடி நம் தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை நாம் நடக்க வேண்டிய வழியில் வழிநடத்துவார். நம்முடைய தேவைகள் யாவையும் சந்திப்பார். இப்படிச் செய்வதால் நாமும் விண்ணகத் தந்தையின் மக்களாக ஆவோம். நாம் வேண்டுவது யாவையும் நமக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். நமக்குள்ளதை பிறர்க்கு பகிர்ந்து கொடுப்போம். நம்மால் ஆன உதவிகளை பிறர்க்கு செய்வோம்.இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று அன்பு செய்து உதவிகளையும் செய்தார். நாமும் அவ்வாறு நடப்போம். நாம் உயிர் வாழ எதை உண்பது எதை குடிப்பது? என்று கவலைப்படத்தேவையில்லை. உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தது அல்லவா? வானத்து பறவைகளை பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை.நமது தந்தை அவற்றுக்கு உணவு அளிக்கிறார். அவற்றைவிட நாம் மேலானவர்கள் அல்லவா! நமது தேவைகளை கொடுப்பார். ஆனால் நாம் நமது நம்பிக்கையில் ஒருபோதும் குறைந்து விடாதபடி இருக்க...
Like this:
Like Loading...
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் என்று எபிரேயர் 13:8 ல் வாசிக்கிறோம். நம்முடைய ஆண்டவர் ஒருநாளும் மாறாவராய் இருக்க அவர் சாயலாய் படைக்கப்பட்ட நாமும் அவ்வாறே இருந்து அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து அவரின் நாமத்திற்கு மகிமை உண்டுபண்ணுவோம். ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து சகோதர அன்பிலே நிலைத்திருந்து அன்னியரை வரவேற்று விருந்தோம்பல் செய்தோமானால் நாம் நம்மை அறியாமலே வானத்தூதர்களை மகிழ்ச்சி படுத்தியவர்களாய் இருப்போம். சிறைப்பட்டவர்களோடு நாமும் சிறைப்பட்டவர்களாய் எண்ணி அவர்களுக்கு ஆறுதல் அளிப்போம்.துன்புறுத்தப்படுகிறவர்களை மறவாமல் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். பொருளாசையை விலக்கி நமக்கு உள்ளதே போதும் என்று நினைப்போம்.ஏனெனில் நம் ஆண்டவர் நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்! உன்னை விட்டு விலகவும் மாட்டேன் என்று நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். ஆதலால் நாம் துணிவோடு ஆண்டவரே எனக்கு துணை, நான் அஞ்ச மாட்டேன்:மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் என்று தைரியமாக இருக்கலாம். நமக்கு கடவுளின் வார்த்தையை எடுத்து சொன்னவர்களை மறவாமல் நினைவு கூர்ந்து அவர்களின் வாழ்வின் நிறைவை எண்ணிப்பார்த்து அவர்களைப்போல்...
Like this:
Like Loading...
நமது வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களையும், பாடுகளையும் நினைத்து நமது மனம் சோர்ந்து போய் இருக்கலாம். ஆனால் அந்த துன்பத்தின் வழியாக நாம் நடக்கும் போது அதில் ஏற்படும் அனுப வத்தினால் நிறைய காரியங்களை கற்றுக்கொள்ளலாம். அதனால்தான் தாவீது சொல்கிறார். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது.அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன். சங்கீதம் 119:71. ஒரு ராணுவ வீரன் ஒருவன் முகாமில் தீவிரமாக யாருக்கும் பயப்படாமல் தைரியத்தோடு சண்டை செய்தானாம். ஆனால் அவனுக்கு ஒரு வியாதியினால் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருந்தானாம். எப்படியும் உயிர் போகப்போகிறது. இராணுவத்தில் இறந்தால் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த திருப்தி இருக்கும் என்று நினைத்து தீவிரமாக சண்டை செய்தான். இதைப்பார்த்த அந்த நாட்டு ராஜா இவன் நம் படையில் இருந்தால் நமக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்று நினைத்து அவனை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்து சென்று அவனுக்கு உண்டான எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அவனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தாராம். அவனுக்கும் நல்ல சுகம் கிடைத்தது.ஆனால் சுகம் பெற்ற அவன் நான் ஏன் சாகவேண்டும்....
Like this:
Like Loading...