Tagged: இன்றைய வசனம் தமிழில்

விடாப்பிடியான செபம் !

இன்று செபத்தின் வலிமையைப் பற்றி ஆண்டவர் இயேசு கூறும் உவமைக்கு செவிமடுக்கிறோம். அருமையான உவமை. நண்பரிடம்கூட உதவி கேட்க முடியாத இக்கட்டான நேரம் நள்ளிரவு நேரம். அந்த நேரத்தில் கதவைத் தட்டி உதவி கேட்பரிடம் மறுத்துப் பேசியபின்னும், நண்பர் என்பதற்காக அல்லாது, தொல்லையின் பொருட்டாவது கேட்ட உதவியைக் கொடுத்துவிடுவது மனித இயல்பாக இருக்கிறது என்று உளவியல் வழி பாடம் சொல்கிறார் இயேசு. மனித இயல்பே தொந்தரவுக்குப் பணிகிறதே, இறை இயல்பு நிச்சயம் பரிவு கொள்ளும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் இயேசு. விடாப்பிடியாய் என்று சொல்லாடல் நண்பரின் முயற்சிக்கு அணி சேர்க்கிறது. நாமும் விடாமுயற்சியுடன், தளரா நம்பிக்கையுடன் இறைவனை நோக்கி மன்றாட வேண்டும் என்று அழைக்கிறார் இயேசு. எனவே, நமது நம்பிக்கையைக் கொஞ்சம் ஆழப்படுத்திக் கொள்வோம். அத்துடன், விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி என்றும் இயேசு கூறி, எதற்காக விடாப்பிடியாய் மன்றாட வேண்டும் என்பதையும் தெளிவு...

செபமாலை அன்னை திருவிழா

கி.பி 1571 இல் நடந்த கடற்போரில் கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வென்றபோது, அவர்களுக்கு கிடைத்த வெற்றி, செபமாலையின் மகத்துவத்தால் விளைந்தது என்று கருதப்பட்டது. இதன் விளைவாக திருத்தந்தை ஐந்தாம் பயஸ் இந்த நாளை வெற்றி அன்னையின் திருவிழாவாக அறிவித்தார். பின்பு திருத்தந்தை பதிமூன்றாம் கிரகோரி காலத்தில் இந்த நாள் செபமாலை அன்னையின் திருவிழாவாக அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. துருக்கியர் இரண்டாம் முறையாக தோல்வியுற்றபோது, திருத்தந்தை ஆறாம் கிளமண்ட் இத்திருவிழாவை வழிபாட்டு அட்டவணையில் சேர்த்தார். ஆனால், திருத்தந்தை பத்தாம் பயஸ், இந்த விழாவானது ஏற்கெனவே கொண்டாடப்பட்ட அக்டோபர் 7 ம் நாளன்று கொண்டாடுவதே, சிறந்தது எனக்கருதி, அதற்கான மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதன்படி, தற்பொழுது இவ்விழாவானது, அக்டோபர் 7 ம் நாளன்று கொண்டாடப்படுகின்றது. செபமாலை என்பது வல்லமையுள்ள ஓர் ஆன்மீக ஆயுதம். செபமாலையைச் செபித்து, அன்னை மரியாவோடு இணைந்து நாம் கடவுளை மகிமைப்படுத்துகின்றபோது, அளவில்லா நன்மைகளை நாம் நிச்சயம் பெற்றுக்கொள்ள முடியும். இது...

தேவையானது ஒன்றே !

(லூக்கா 10:40) உபசரிப்பது என்பது நல்ல பண்பாடு மட்டுமல்ல, ஒரு விவிலிய மதிப்பீடும்கூட. வழிப்போக்கர்களை வரவேற்றுப் பணிவிடை செய்ததால், தங்களை அறியாமலே வானதூதருக்குப் பணிவிடை செய்தவரும் உண்டு எனப் பவுலடியார் கூறியுள்ளார். ஏழைகளை, ஒடுக்கப்பட்டோரை, சமூகத்தில் யாருக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுவதில்லையோ, அவர்களை வரவேற்று, உபசரிப்பது இறைவனுக்கே செய்யும் பணிவிடை. எனவேதான், சின்னஞ் சிறு என் சகோதர சகோதரிகளுக்குச் செய்யும்போதெல்லாம், எனக்கே செய்தீர்கள் என இயேசு மொழிந்தார். முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் மூவர் வந்தபோது, ஆபிரகாம் அவர்களை வரவேற்று, மிகுந்த ஈடுபாட்டுடன் உபசரித்தார். அதனால், இறையாசியை நிறைவாகப் பெற்றுக்கொண்டார். மார்த்தாவும், மரியாவும் ஆண்டவர் இயேசுவைத் தங்கள் இல்லத்தில் வரவேற்று, உணவு வழங்கி, அவரோடு உறவாடினர். பணிவிடையோடு, பாதம் அமர்ந்து உரையாடியது இயேசுவைக் கவர்ந்தது. நாமும் உதவிகளோடு, நட்புறவும் வழங்கினால், அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். மன்றாடுவோம்: எங்கள் இல்லங்களில் மறைவான விருந்தாளியாம் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் மத்தியில் வாழும் எளியோரைக் கண்ணோக்கி,...

”எனக்கு அடுத்திருப்பவர் யார்?” (லூக்கா 10:29)

திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் இயேசு கூறிய கதை ”நல்ல சமாரியர்” என்னும் சிறப்பான உவமை ஆகும். லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமை தரும் செய்தி என்ன? ”எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்னும் கேள்விக்குப் பதில் கேள்வியாக, ”உமக்கு அடுத்திருப்பவராக இல்லாத ஒருவரைக் காட்ட முடியுமா?” என்றுகூட இயேசு சவால் விட்டிருக்கலாம். ஆனால் இயேசு ஓர் உவமை வழியாக அந்த உண்மையைக் கற்பித்தார். சமாரிய இனத்தவர் தாழ்த்தப்பட்டோர்; அவர்களுக்கு யூதர்கள் நடுவே மதிப்பு இருக்கவில்லை. ஆனால் கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் குற்றுயிராக விடப்பட்ட மனிதருக்கு உதவிசெய்தது அந்த சாதாரண சமாரியர்தானே தவிர யூத குருவோ, லேவியரோ அல்ல. யார்யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். இந்த உண்மையை வாழ்க்கையில் காட்டியவர் நல்ல சமாரியர். இன்று இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள்; மனித மாண்பு மறுக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, இழிவாக நடத்தப்படுகிறார்கள்....

கடின உள்ளமும், மண விலக்கும் !

மணவாழ்வு ஒரு மிகப் பெரிய சவால் என்பதை நாம் அறிவோம். மணவிலக்குகள் பெருகி வரும் இக்காலத்தில் மணவாழ்வின் ஒற்றுமைக்காக செபிக்கவும், முயற்சிகள் எடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். மோசேயின் அனுமதியைப் பற்றி பரிசேயர் இயேசுவிடம் வினவியபோது உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே இவ்வாறு எழுதிவைத்தார் என்கிறார் இயேசு. மணவிலக்கு, மண முறிவு என்பதெல்லாம் கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள். எப்போது கணவன் அல்லது மனைவியின் உள்ளம் கடினப்பட்டுவிட்டதோ, அப்போது அவர்களின் மனதில் மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அம்மன முறிவின் வெளிப்பாடே மணவிலக்கு. எனவே, தம்பதியர் தங்கள் உள்ளம் கடினப்பட்டுப் போகாமல் காத்துக்கொள்ளவேண்டும். தன்னலம் என்பது கடின உள்ளத்தின் ஓர் அடையாளம். புரிந்துகொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை, மன்னிக்காமை, பாசம் கொள்ளாமை, நல்லதைப் பாராட்டாமை … இவை அனைத்துமே கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள்தாம். இத்தகையோர் மனதில் ஏற்கனவே மணமுறிவு ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம். கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, கனிவான இதயத்தைப் பெற நாம் இறைவனிடம் இறைஞ்சுவோம். அவ்வாறே, கணவன் மனைவி...