Tagged: இன்றைய வசனம் தமிழில்
கிடைத்துள்ள பதவி, பணம், சேர்த்துள்ள சொத்து, நீண்ட ஆயுள், அன்புள்ள குடும்பம் இவை எல்லாம் கடவுள் தந்த பொறுப்பு. இவை உண்டு குடித்து, அனுபவித்து, கடைசியில் அனைத்தையும் இழந்து,கைகட்டி நிற்க அல்ல. அருகில் உள்ளோரை ஆண்டு ஆட்டிப்படைக்க அல்ல.மாராக,நாம் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க தெய்வம் தந்த வாய்ப்புக்கள் இவைகள்.ஒவ்வொன்றின் பின்னணியிலும் பெரியதொரு பொறுப்பும் கடமையும் புதைந்திருப்பதை உணர்த்துவதே இப்பகுதி. ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பாளர் என்ற முறையில் நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்த தலைவருக்கு நம்பிக்கைக்குரியவராயும் அறிவுடையவராகவும் செயல்பட வேண்டும். அதே வேளையில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட குடும்பத்திற்கு, இறை மக்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு, குடிமக்களுக்கு நாம் பொறுப்புள்ளோராயும் இருப்பது நம்மேல் உள்ள கடமையும் கூட. நம் அன்றாட வாழ்க்கையில் கடவுள் இப்பொறுப்பை நம் ஒவ்வொருவருக்கும் தந்துள்ளார். அதைச் சிறப்பாகச் செய்தால் வாழ்வில் உயர்வும் பரிசும் பாராட்டும் கிடைக்கும். பொருப்பைப் பொருப்புடன் செய்யவில்லையாயின் தண்டனையும் வாழ்க்கை நிலையில் தாழ்வும் வந்து சேரும். “மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம்...
Like this:
Like Loading...
இந்த உலகத்தில், நமக்கான கடமையை நாம் நிறைவாகச் செய்கிறபோதுதான், நாம் நிறைவைப் பெறுகிறோம். இந்த உலகத்தைவிட்டு, எப்போது செல்ல வேண்டும், என்கிற நேரம் யாருக்கும் தெரியாது. முடிவு யாருக்கும், எப்போதும் வரலாம். நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. நாளை யார், யார் இருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. அதுதான் நமது வாழ்வு. முடிவு எப்போதும் வரலாம் என்பதுதான் நிதர்சனம். அந்த நிதர்சனத்திற்கு நாம் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். இந்த நிரந்தரமில்லாத உலகத்தில், எந்நேரமும் நமக்கு அழைப்பு வரலாம் என்கிற சூழலில், நமது கடமையை ஆற்றுவதற்கு நாம் மறந்துவிடக்கூடாது. யோவான் 17: 4 ”நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்”. இயேசு தனது தந்தையை மாட்சிப்படுத்துகிறார். எவ்வாறு? அவருடைய கடமையைச் சரிவரச் செய்து, மாட்சிபடுத்துகிறார். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தது குறுகிய 33 ஆண்டுகள் தான். காலம் குறைவாக இருந்தாலும், இயேசு குறை சொல்லவில்லை. அந்த...
Like this:
Like Loading...
பேராசையைப் பற்றிய இயேசுவின் போதனை இது: எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். பேராசைகள் பல வகைப்படுகின்றன. பணத்தின்மீது பேராசை, பொருள்களின்மீது பேராசை, பதவியின்மீது பேராசை, புகழ்மீது பேராசை … எனப் பல்வேறு விதமான பேராசைகள் இருக்கின்றன. அளவுக்கதிகமான ஆசைதானே பேராசை. ஓரளவு ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அதற்காகவே ஏக்கம் கொண்டு, எந்நேரமும் அதே எண்ணமாக இருப்பது பேராசை. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. எனவே, நமது எண்ணங்களை, விருப்பங்களை நாம் அவ்வப்போது ஆய்வு செய்துகொள்வது அவசியம். பணத்தை, பொருள்களை சேமிப்பவர்கள், பதவிகளில் அமர்ந்தவர்கள், புகழ் பெற்றவர்கள் பெரும்பாலும் அதில் நிறைவடைவதை நாம் காண்பதில்லை. இன்னும் அதிகமாகப் பணமும், பொருள்களும் சேர்க்க விரும்புகிறார்கள், இன்னும் அதிகமாகப் புகழும், பதவிகளும் அடைய விரும்புகிறார்கள். இதுதான் மனித இயல்பு. இந்த இயல்பை உடைத்து, மனநிறைவு என்னும் இறை இயல்புக்குள் நுழைய முயற்சி செய்வோம். எனக்க வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத்...
Like this:
Like Loading...
தலைமைப் பண்பைப் பற்றிய இயேசுவின் போதனை இருபது நுhற்றாண்டுகளுக்குப் பின்பும் புரட்சியானதாகவும், தேவையானதாகவும் இருப்பது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பைத் தருகிறது. நமது உலகம் பல்வேறு விதமான தலைவர்களைப் பார்த்திருக்கிறது: சர்வாதிகாரிகள், ஜனநாயகவாதிகள், வழிகாட்டிகள், மாதிரிகள்… என எத்தனையோ பேர். ஆனால், இயேசு அறிமுகப்படுத்திய பணி செய்யும் தலைமைப் பண்புதான் இன்று வரை உலக வளர்ச்சிக்கும், அமைதிக்கும் தேவையானதாக இருக்கிறது. தலைவர்கள் பிறரை அடக்கி, ஆள்பவர்கள் அல்ல, மாறாக பிறருக்குப் பணி செய்து, தம்மையே பலியாக்குபவர்கள் என்னும் இயேசுவின் பார்வை இன்றும் புதிதாக, புரட்சிகரமானதாகவே இருக்கிறது. ஆனால், இயேசு அதை வாழ்ந்து காட்டினார். திருச்சபையின் வரலாற்றில் இயேசுவின் சீடர்களும் அதை வாழ்ந்து காட்டினர். ஆனாலும், முழமையாக அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இதோ, இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாக இயேசு மீண்டும் இந்த அழைப்பை நமக்குத் தருகிறார். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45 அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும்...
Like this:
Like Loading...
இன்றைய நற்செய்தி, தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றத்தை நமக்கு உறுதிபடுத்துகிறது. மத்தேயு 12: 31 – 32 மற்றும் மாற்கு 3: 28 – 29 ல், இயேசுவின் குணப்படுத்துகின்ற வல்லமையை, தீய ஆவிகளின் சக்திக்கு ஒப்பிடுகிறபோது, இயேசு இதைச் சொல்கிறார். இந்த திருச்சட்ட அறிஞர்கள், கடவுளுடைய அருளையும், ஆசீரையும் தீய ஆவிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில், தூய ஆவியானவரைப்பற்றிய புரிதல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இயேசு இங்கே தூய ஆவியானவரைப் பற்றிப் பேசுகிறபோது, அவர் சொல்கிற அர்த்தமும் நமக்கு விளங்க வேண்டும். அப்போதுதான், நம்மால், சரியான விளக்கத்தைப் பெற முடியும். தூய ஆவியின் செயல்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றது. 1. கடவுள் மனிதர்களுக்கு, தூய ஆவியானவர் வழியாக, உண்மையை உரைத்தார். உண்மையை உரைப்பது தூய ஆவியானவரின் பணி. 2. தூய ஆவியனவரின் தூண்டுதலினால் தான், மனித உள்ளம், கடவுள் அறிவிக்கும் உண்மையை, புரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய தூண்டுதல்...
Like this:
Like Loading...