Tagged: இன்றைய வசனம் தமிழில்
இயேசு ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகிற நிகழ்வை நாம் பார்க்கலாம். நாணயம் மாற்றுவோரையும், விலங்குகள் விற்போரையும் இயேசு துரத்துகிறார். எதற்காக அன்பே உருவான இயேசு, வன்முறையைக் கையிலெடுப்பது போல பேசுகிறார்? எது இயேசுவை இந்த அளவுக்கு கோபப்படுத்துகிறது? யெருசலேம் ஆலயத்தில் காணிக்கை செலுத்த, குறிப்பிட்ட நாணயத்தைத்தான் செலுத்த வேண்டும். வெளிநாடு வாழ் யூதர்கள், தங்களின் நாணயங்களைக்கொண்டு, ஆலய வளாகத்தில், ஆலயத்தில் செலுத்த வேண்டிய நாணயங்களை மாற்றிக்கொள்வார்கள். அதேபோல, விலங்குகளை பலிசெலுத்த எங்கு வேண்டுமானாலும் அவைகளை வாங்கலாம். ஆனால், பலிசெலுத்தப்படும் விலங்குகள் குறைபாடுகளோடு இருக்கக்கூடாது. வெளியே விலங்குகளை வாங்கினால், அதிலே குறைகண்டுபிடித்து, பலிசெலுத்தவிடாமல் செய்து, அதிலே கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறவர்கள் இருந்தனர். இவ்வாறு, வியாபாரத்தில் முறைகேடு நடந்து வந்தது. ஆண்டவரை வழிபடும் வழிபாடே முறைகேடுகளுக்கு காரணமாக அமைகின்ற அளவுக்கு, வழிபாட்டை ஒரு கேவலமாக மாற்றிவிட்டார்களே என்பதுதான் இயேசுவின் ஆதங்கம். அது சமூக நீதியின் மீது இயேசு கொண்டிருந்த தாகத்தின் வெளிப்பாடு. சமூத்தில் கண்ணெதிரே நடந்த அநியாயத்தைத்...
Like this:
Like Loading...
எருசலேம் நகர் யூதர்களுக்கு முக்கியமான இடமாக விளங்கியது. அங்கேதான் யூத மக்களின் தலைசிறந்த மன்னராக விளங்கிய தாவீது தம் தலைநகரை அமைத்திருந்தார். அங்குதான் சாலமோன் மன்னர் கடவுளுக்கு அழகியதொரு கோவில் கட்டியெழுப்பினார். யூத மக்களின் சமய-சமூக மையமாக விளங்கிய எருசலேம் நகருக்கு வெளியேதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார். எருசலேமுக்கு இயேசு எத்தனை தடவை சென்றார் என்பது பற்றித் தெளிவில்லை. எருசலேம் கோவிலுக்குள் நுழைந்து அங்கே வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோரை இயேசு விரட்டியடித்த செய்தியை எல்லா நற்செய்தி ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர் (காண்க: மத் 21:12-17; மாற் 11:15-19; லூக் 19:45-48; யோவா 2:13-22). அந்த நிகழ்ச்சிக்கு முன் இயேசு ”எருசலேமைப் பார்த்து அழுதார்” (லூக் 19:41) என்னும் செய்தியை லூக்கா குறிப்பிடுகிறார். எருசலேம் நகரம் அழிந்துபடும் எனவும் இயேசு முன்னறிவிக்கிறார். இயேசு அறிவித்தபடியே, கி.பி. 70ஆம் ஆண்டில் தீத்து என்னும் உரோமை மன்னரின் படைகள் எருசலேமுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தன;...
Like this:
Like Loading...
மினாக்களைப் பற்றிய இயேசுவின் உவமை இருவிதமான மனநிலைகளை எடுத்துக்காட்டுகிறது. உயர்குடிமகன் தன் பணியாளர்களுக்கு பத்து மினாக்களைக் கொடுத்து அவற்றைக் கொண்டு வாணிகம் செய்யப் பணிக்கின்றார். சில காலம் கழித்து அவர் திரும்பி வரும்போது அவர்களில் பலரும் வாணிகம் செய்து ஈட்டியதைப் பெருமையுடன் அறிக்கை இடுகின்றனர். உயர் குடிமகன் அவர்களைப் பாராட்டுகிறார். ஈட்டியது எவ்வளவு என்று கணக்குப் பார்க்கவில்லை. அவர்களது நம்பிக்கைக்குரிய பண்பைப் பாராட்டுகிறார். ஒரே ஒரு பணியாளன் மட்டும் பணம் ஈட்டாதது மட்டுமல்ல, தம் தலைவரையே குறைசொல்லவும் துணிகிறார். நீர் கண்டிப்புள்ளவர், வைக்காததை எடுக்கிறவர், விதைக்காததை அறுக்கிறவர் என்று அவரையே தன் உழைப்பின்மைக்குப் பொறுப்பாளியாக்குகிறார். தலைவரோ அவருக்கு அவரது வாய்ச்சொல்லைக் கொண்டே தீர்ப்பளிக்கிறார். இரண்டாவதாக உள்ள மனநிலையைப் பலரிடமும் நாம் பார்க்கிறோம். ஒருவேளை நம்மிடம்கூட அந்த மனநிலை இருக்கலாம். பொறுப்புகளை ஏற்காமல், உழைக்காமல், உழைக்க மனமில்லாமல் வாழ்வதோடு, அதற்கான பொறுப்பையும் பிறர்மேல் சுமத்துகின்ற மனநிலையெ அது. ஆசிரியர் சரியில்லை, பள்ளி சரியில்லை,...
Like this:
Like Loading...
பல முறை வாசித்து, மகிழ்ந்த பகுதி சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வு. லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடும் இந்த நிகழ்வில் சக்கேயுவின் மனமாற்றத்தையும், அவரது வாழ்வை இயேசு தலைகீழாக மாற்றிப்போட்டதையும் நாம் எண்ணி வியக்கிறோம். ஒரு மாற்றத்துக்காக இன்று இந்த நிகழ்வில் சக்கேயுவைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இயேசுவின் செயல்பாட்டைச் சிந்திப்போம். சக்கேயுவின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் இயேசு எடுத்த முதல் முயற்சிதான். இயேசு சக்கேயு ஏறியிருந்த அத்திமரத்தை அண்ணாந்து பார்த்து, அவரை விரைவாய் இறங்கிவர அழைத்திருக்காவிட்டால், சக்கேயு மரத்தின்மேலேயே இருந்திருப்பார். இயேசுவைக் கண்களால் கண்டதோடு அவரது ஆவல் நிறைவேறியிருந்திருக்கும். இயேசு தாமாகவே முன்வந்து அவரை அழைத்ததுதான் சக்கேயுவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மனமாற்றத்தைத் தந்தது. இயேசு எடுத்த இந்த முன் முயற்சியைத்தான் தன் முனைப்பு, தன்னார்வம் என்று சொல்கிறோம். இது ஒரு தலைமைப்பண்பு. நல்ல தலைவர்கள் எப்போதும் தன் முனைப்பு, தன்னார்வம் உடையவர்களாகவும், மாற்றங்கள் தாமாகவே விளையும்...
Like this:
Like Loading...
கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றுதான் இரண்டாம் வருகை. முதல் வருகையின்போது, மானிட உருவெடுத்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்த இறைமகன் இயேசு இரண்டாம் முறையாக மீண்டும் வருவார். அந்த வருகையின்போது அவர் நடுவராக உலகைத் தீர்ப்பிடுவார் என்பதுவே இரண்டாம் வருகையின் பொருள். ;இதை நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியிலும், விசுவாசப் பிரமாணத்திலும், இன்னும் வேறு பல வேளைகளிலும் அறிக்கையிடுகிறோம். இந்த விசுவாச அறிக்கையை எப்படி வாழ்வில் பயன்படுத்துவது? நல்ல கேள்வி. நடுவராக இயேசு மீண்டும் வரவிருக்கிற அந்த இரண்டாம் வருகை உலக முடிவில்தான் இருக்கும். உலக முடிவு எப்போது என்று மனுமகனுக்கே தெரியாது என்று இயேசுவும் கூறிவிட்டார். எனவே, நம்மைப் பொறுத்தவரை, உலக முடிவு என்பது நம் ஒவ்வொருவரின் முடிவுதான். அதாவது, நமது இறப்புதான். நாம் இறக்கின்றபோது நடுவராம் இயேசு நம்மைச் சந்தித்து நம்மைத் தீர்ப்புpடுவார். அந்தத் தீர்ப்பின் வேளைக்காக நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாம்...
Like this:
Like Loading...