Tagged: இன்றைய வசனம் தமிழில்

வாழ்வைக் காத்துக் கொள்ளும் வழி

இந்நாட்களில் முழு மனித வாழ்கை வாழ்வதில் பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம். மனித நேயத்தோடு வாழ்ந்தால் பல இழப்புக்கள். நற்செய்தி விழுமியங்களை முதன்மைப்படுத்தி வாழ்ந்தால் ஏராளம் தொல்லைகள். ஒதுங்கி வாழ்ந்தாலும் வாழ முடியாது. பின் வாங்கவும் முடியாது, கூடாது. இத்தகைய சூழல்களில் இன்றைய இறைவாக்கு ஆறுதலாக இருக்கிறது. “என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது”. (லூக் 21’17-18) இறைவனை நம்பி வாழ்கிற மனிதனுக்கு துன்பங்கள் இழப்பகள் அதிகம். அவமானங்கள் ஏராளம். நான் யாரை நம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும் என்ற பவுலடியார் தன் வாழ்வி அடுக்கடுக்காக துன்பங்களை அனுபவித்தபோதும் துவண்ட விடவில்லை. கிறிஸ்துவுக்காக வாழ்வதால் நம் பொருட்களுக்கு சேதம் உண்டாக்கலாம். பெயரை தூற்றலாம். உறவுகள் நம்மைப் புறக்கணிக்கலாம். சலுகைகளை இழக்கலாம். பதவி இல்லாமல் போகலாம். காவல் நிலையமும் நீதி மன்றமும் இழுக்கப்படலாம். குடும்பமே காட்டிக்கொடுக்கலாம். அஞ்ச வேண்டாம். கலங்க வேண்டாம். பயப்பட வேண்டாம்....

ஏமாறாதீர்கள் !

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இயேசுவின் காலத்திலும் நானே மெசியா, நானே விடுதலை தருபவர், காலம் நெருங்கிவிட்டது என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் பலர் இருந்தனர். இயேசு அவர்களைப் பற்றி எச்சரித்தார். அவர்கள் பின்னே போகாதீர்கள். ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கிறார். ஆனால், அன்றிலிருந்து இன்று வரை ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று இயேசுவின் பெயரால், அற்புதங்கள். அருங்குறிகள் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, மக்களை ஏமாற்றும் கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஏமாறும் மக்களின் கூட்டமும் பெருகத்தான் செய்கிறது. ஏன் இந்த நிலை? அருங்குறிகளிலும், அடையாளங்களிலும் மக்களுக்கு இருக்கும் அதிகபட்ச ஆர்வம்தான் இந்த ஏமாற்றலுக்குக் காரணம். அருங்குறிகள் தேடாமல், இறைவார்த்தையின்படி வாழும் ஆர்வத்தை ஏன் நாம் மக்களுக்கு வழங்கக்கூடாது. அற்புதங்களை நாடாமல், நேர்மையாக, மாதிரியாக வாழ்கின்ற முறையை விவிலியத்திலிருந்து கற்றுக்கொள்வோம். யாரும் நம்மை ஏமாற்றாதவாறு விழிப்புடன் வாழ்வோம். மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். வியத்தகு...

கடவுளின் பராமரிப்பில் வாழ்வோம்

ஆலயத்தின் பெண்களுக்கான இடத்தினருகே, 13 காணிக்கைப்பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது. எக்காளம் போன்ற அமைப்பில் அவைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனுடைய மேற்புறம் குறுகியும், கீழ்ப்புறம் அகன்றும் காணப்பட்டிருந்தன. ஒவ்வொரு காணிக்கைப்பெட்டிகளும் ஒவ்வொரு நோக்கத்திற்கானவை. ஆலயத்தில் பலிபொருட்களை எரிப்பதற்குப் பயன்படும் விறகுகளை வாங்க, ஆலயப்பொருட்களை பராமரிக்க, நறுமணப்பொருட்கள் வாங்க என்று பல தேவைகள் ஆலயத்திற்கு இருந்தன. அவற்றை நிறைவேற்ற, இந்தக்காணிக்கைப் பயன்படுத்தினர். இயேசு இந்தக்காணிக்கைப்பெட்டிகள் இருந்த இடத்திற்கு அருகே அமர்ந்திருக்கிறார். செல்வந்தர்களும் காணிக்கைப் போடுகின்றனர், ஏழைக்கைம்பெண்ணும் காணிக்கைப் போடுகின்றார். செல்வந்தர்கள் அதிக பணத்தைக் காணிக்கையாக செலுத்துகின்றனர். ஏழைக்கைம்பெண்ணோ, தன் பிழைப்பிற்காக வைத்திருந்த அனைத்தையுமே போட்டு விடுகிறாள். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப்போகிறேன்? என்பது தெரியாது. யாராவது எனக்கு உதவுவார்களா? அவளுக்கு தெரியாது. ஆனால், கடவுளின் பராமரிப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் அவளின் அந்தக்காணிக்கை. அவளின் நம்பிக்கை பணத்தில் அல்ல, கடவுளின் பராமரிப்பில். இந்த இரண்டு காசுகளும் கடவுள் எனக்குத்தந்தது. அதைக்கடவுளுக்கே காணிக்கையாக்குகிறேன் என்று,...

கிறிஸ்து அரசர் பெருவிழா !

பணித் தலைமை என்னும் புதிய தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் ஆண்டவர் இயேசு. இன்றைய நாள்களிலும் ஆளுகை மேலாண்மைப் பாடங்களில் பணித் தலைமைத்துவத்தை ஓர் அவசிய பாடமாகவும், இன்றியமையா மாதிரியாகவும் காட்டுகின்றனர் தலைமைத்துவ வல்லுனர்கள். இயேசுவை அரசராகக் கொண்டாடும் இந்த நாளில் நமது சிந்தனையும், செயல்பாடும் அவ்வாறே இருக்க வேண்டும். இயேசு அறிமுகப்படுத்திய அரசாட்சி, இயேசு மாதிரி காட்டிய பணித் தலைமைத்துவம். இயேசுவைப் போல நாம் வாழ்கிறோமா என்று நம்மையே கேட்டுக்கொள்வோம். ஒவ்வொரு கணவரும் தம் மனைவியை எப்படி நடத்துகிறார் என்று சோதித்துப் பார்க்க வேண்டும். அதிகாரமும், அடிபணியச் செய்யும் ஆளுமையா, அல்லது பணிவிடை செய்யும் அன்பின் ஆளுகையா? அதிகாரிகள் தங்கள் ஊழியர்களை நடத்தும் விதம் எப்படி? பணித் தலைமையா, அல்லது அதிகாரத் தோரணையா? ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை நடத்தும் விதம், பங்குத் தந்தையர் பங்கு மக்களை நடத்தும் விதம்… இவை அனைத்திலும் நாம் இயேசுவைப் பின்பற்றி தலைவர்களாக இருக்கலாம், அல்லது அதிகாரமும் ஆணவமும்...

உறவுகளின் முக்கியத்துவம்

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, அவருடைய உறவினர்களும், சகோதரர்களும் புரிந்து கொள்ளாதது நிச்சயம் மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். நமக்கு எந்நாளும் உற்ற துணையாயிருக்கக்கூடிய நமது உறவுகள், நம்மை தவறாகப் புரிந்து கொள்கிறபோது, நிச்சயம் அது நமக்கு மிகப்பெரிய கவலையை உண்டாக்கும். இயேசுவும் இதற்கு விதிவிலக்காக இருந்திருக்க முடியாது. அவருடைய சகோதரர்கள் கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. மாற்கு நற்செய்தியாளரும் இதே கருத்தை வலியுறுத்துகிறார். மாற்கு 3: 21 ல் வாசிக்கிறோம்: ”இயேசுவுடைய உறவினர் இதைக்கேள்விப்பட்டு, அவரைப்பிடித்துக் கொண்டு வரச்சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர். பெரும்பாலான மக்கள் இயேசுவை மெசியாவாகவும், தங்களை மீட்க வந்தவராகவும், அதிசயங்கள், அற்புதங்கள் செய்கிறவராகவும், கடவுளின் மகனாகவும் பார்த்துக்கொண்டிருக்கிறபோது, தன்னுடைய உறவினர்கள் இவ்வளவு மோசமாக நடப்பதைப்பார்த்து, இயேசுவுக்கு நிச்சயம் கவலை வந்திருக்க வேண்டும். ஏனென்றால், உறவுகள் தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. உயரும்போது மகிழ்ச்சியடைவதும், கீழே விழும்போது தாங்கிப்பிடிப்பதும் இந்த உறவுகள்....