Tagged: இன்றைய வசனம் தமிழில்
இயேசு தனது போதனையில் திருமுழுக்கு யோவானைப்புகழ்ந்தது போல் வேறு யாரையும் புகழ்ந்திருக்க முடியுமா? என்றால் அது சந்தேகம் தான். அந்த அளவுக்கு, இயேசு திருமுழுக்கு யோவான் மேல் பாசமும், அன்பும், பற்றுதலும் கொண்டு விளங்கினார். திருமுழுக்கு யோவான் ஓர் இறைவாக்கினா். இறைவாக்கினர்களுக்கு இரண்டு கடமைகள் இருக்கிறது. 1. கடவுளை செய்தியைப்பெறுவது. 2. கடவுளின் செய்தியை துணிவோடு அறிவிப்பது. கடவுளின் ஞானத்தை எண்ணத்திலும், கடவுளின் உண்மையை தங்கள் உதட்டிலும், கடவுளின் துணிவை தங்கள் இதயத்திலும் ஏந்துகிறவர்கள் தான் இறைவாக்கினர்கள். அப்படிப்பட்ட உண்மையான இறைவாக்கினர் தான் திருமுழுக்கு யோவான். ஆனாலும், திருமுழுக்கு யோவானுக்கும், இயேசுவுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. திருமுழுக்கு யோவானுடைய போதனை முழுவதும், மக்களைப் பயப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. ”விரியன் பாம்புக்குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?”….”ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று”….”தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார். ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்”. ஆனால்,...
Like this:
Like Loading...
கடவுளை பலவிதமான வழிகளில் களைப்புறாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்வில் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலாக அமைகிறது. கிரேக்கர்கள், ”கடவுளைக்காண்பது அரிது. கடவுளைக்கண்டாலும் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக்கூறுவது அரிதிலும் அரிது” என்று சொல்வார்கள். யோபு புத்தகத்திலே சோப்பார், யோபுவிடம் கேட்பதும் இதுதான், ”கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா?” (யோபு 11: 7). அப்படியென்றால், கடவுளைக்காணவே முடியாதா? நன்மை செய்கிறவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான் கிடைக்குமா? அவர்கள் ஆறுதல் கூட பெற முடியாதா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழலாம். அதற்கு பதில்தான் இயேசுவின் அமுதமொழிகள். கடவுளைப்பற்றிய தேடல் இயேசுவில் நிறைவடைகிறது. வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு நிறைவு இயேசுவில் கிடைக்கிறது. இயேசு சொல்கிறார், ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. இந்த வார்த்தைகள் கடவுளைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்வில் நன்மையே...
Like this:
Like Loading...
கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் மாதம் 25ஆம் நாம் கொண்டாடுகிறோம். அதற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்னர், மார்ச் 25ஆம் நாள், இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியைத் திருச்சபை நினைவுகூர்கிறது. கடவுளின் தூதர் மரியாவிடம் சென்று, அவர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவார் என அறிவிக்கிறார் (லூக் 1:26-33). திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தும் கணவரோடு கூடி வாழாதிருந்த மரியா, ”இது எப்படி நிகழும்?” என்று கேட்ட கேள்விக்கு வானதூதர் அளித்த பதில்: ”கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” (லூக் 1:37) என்பதாகும். மனிதர் பல திறமைகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய திறமைக்கு ஒரு எல்லை உண்டு. எவ்வளவுதான் அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் மனிதரால் கூடுமான சாதனைகள் அளவுக்கு உட்பட்டவையே. ஆனால் ”கடவுளால் எல்லாம் கூடும்”. இவ்வாறு கடவுள் வல்லமை மிக்கவர் என நாம் கூறும்போது இரு அடிப்படையான உண்மைகளை வலியுறுத்துகின்றோம். முதலில், கடவுள்தாம் நம்மை உருவாக்கியவர். எனவே, நாம் கடவுளின் படைப்புகள் என்பதாலும்...
Like this:
Like Loading...
புனிதர்களுக்கு நாம் அனைவரும் சிறப்பாக விழா எடுக்கிறோம். அவர்கள் வாழ்ந்த மிகச்சிறந்த தியாக வாழ்விற்காக, எந்த தருணத்திலும் கடவுளைப் பற்றிப்பிடித்துக்கொண்ட அந்த உறுதியான விசுவாசத்தை எண்ணிப்பார்த்து, நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதேவேளையில் அவர்களிடம் நாம் மன்றாடுகிறோம். எதற்காக புனிதர்களிடம் செபிக்க வேண்டும்? நமக்குத் தேவையென்றால் நாம் தானே செபிக்க வேண்டும்? நமது விசுவாசத்திற்குத்தானே கடவுள் பதில் கொடுப்பார்? அப்படியென்றால், புனிதர்களிடம் “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்“ என்று எதற்காகச் செபிக்கிறோம்? இந்த கேள்வி நிச்சயம் நம் அனைவரின் உள்ளத்திலும் எழும். இந்த கேள்விக்கான பதிலாக அமைவது தான், இன்றைய நற்செய்திப்பகுதி. இன்றைய நற்செய்தியில் (லூக்கா 5: 17-26) முடக்குவாதமுற்ற மனிதன் ஒருவனை அவனுயை நண்பர்கள் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இங்கே முடக்குவாதமுற்ற மனிதன் பேசக்கூடிய நிலையிலும் இல்லை. அவனிடத்திலே விசுவாசம் இருந்ததாகவும் சொல்லப்படவில்லை. ஆனால், அவன் அங்கு வந்தது அவனுடைய நலம்விரும்பிகளின் விசுவாசத்தால். முடக்குவாதமுற்ற மனிதனை, இயேசுவிடம் கொண்டு சென்றால், நிச்சயம் குணம்பெறுவான்,...
Like this:
Like Loading...
இத்திருவருகைக் காலத்தில் இயேசுவின் இரண்டு வருகைகளையும் நாம் சிந்திக்கின்றோம். முதல் முறை வந்த மனுவுருவான நிகழ்வை மகிழ்ச்சி மிக்க கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாட ஆவலோடு இருக்கிறோம். அத்துடன், அவரது இரண்டாவது வருகை ஒரு நடுவரின் வருகையாக, தீர்ப்பின் வருகையாக இருக்கப் போகிறது. அதற்காக நாம் எப்போதும் விழிப்பாக, ஆயத்தமாக இருக்க வேண்டும் என்னும் உணர்வையும் இத்திருவருகைக் காலத்தில் பெறுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் இறையாட்சிக் கனவைப் பறைசாற்றுகிறது. இது யோவானின் கனவு மட்டுமல்ல, இறைமகன் இயேசுவின் கனவு, அவரது தந்தையாம் இறைவனின் கனவு. இறைவனின் வருகைக்காக அகத்திலும், புறத்திலும் ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டும். பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட வேண்டும். மலை, குன்றுகள் தாழ்த்தப்பட வேண்டும். கோணலானவை நேராக்கப்பட வேண்டும். கரடுமுரடானவை சமதளமாக்கப்பட வேண்டும். இந்த சமுதாயத்தின் மேடு, பள்ளங்கள், முரண்பாடுகள் அனைத்தும் சீராக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல, மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காணவேண்டும். எல்லாருக்கும் இறையன்பு பரவலாக்கப்பட...
Like this:
Like Loading...