Tagged: இன்றைய வசனம் தமிழில்
இயேசுவின் படைப்பாற்றலில் வெளியான அற்புதமான இன்னொரு உவமையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். மூத்த மகன் போகவிரும்பவில்லை என்று சொன்னான். பின்னர் மனந்திருந்தி வேலைக்குச் சென்றான். இளையவனோ போகிறேன் என்று சொன்னான். ஆனால், போகவில்லை. கேட்போரின் வாயிலிருந்தே மூத்த மகனே தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் என்னும் பதிலை இயேசு வரவழைத்தார். திருப்பலியிலும், வழிபாடுகளிலும், இறைவார்த்தையிலும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் விழிப்பூட்டும் ஓர் உவமையாக இது அமைகின்றது. நம்மைப் போன்றவர்கள் அந்த மூத்த மகனைப் போல அல்ல, இளைய மகனைப் போலவே செயல்படுகிறோம். இறைவனின் திருவுளத்தை நிறைவோற்றுவோம் என்று வாயால், மனதால் உறுதி கொள்கிறோம். ஆனால், சொன்னதுபோல, செயல்படுவதில்லை. மனித பலவீனத்தால், ஆர்வக்குறைவால், அ;ல்லது சோதனைகளின் சோர்வால் தடம் புரண்டுவிடுகிறோம். எனவே, ஆலயத்துக்கே வராதவர்கள், வழிபாடுகளில் ஆர்வம் காட்டாதவர்கள், இறைவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்— ஆனால், இறையாட்சியின் விழுமியங்களான நேர்மை, உண்மை, சமத்துவம் போன்றவற்றை இயல்பாகவே கடைப்பிடிப்பவர்கள்.. இத்தகையோரைவிட நாம் தந்தையின் விருப்பத்தை...
Like this:
Like Loading...
எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்? என்ற இரண்டு கேள்விகளைத் தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும் இயேசுவிடம் கேட்டனர். இயேசுவோ இதற்கான விடைகளைக் கூறமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர்களின் கடின மனத்தைக் குறித்தே இவ்வாறு சொன்னார். ஆனால், உண்மையில் இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடை இயேசுவுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். இயேசுவின் அதிகாரம் தந்தை இறைவனிடமிருந்தே வந்தது. தந்தையே விண்ணிலும், மண்ணிலும் உள்ள அனைத்தின்மீதும் இயேசுவுக்கு அதிகாரம் வழங்கினார். இந்த அதிகாரம் இரு வகைகளில் இயேசுவிடம் குடிகொண்டிருந்தது. 1. தந்தை இறைவனுடன் அவருக்கிருந்த நெருக்கம். இயேசு எப்போதும் தந்தையுடனே ஒன்றித்திருந்தார். தனது சிந்தனை, செயல் அனைத்திலும் தந்தையின் திருவுளத்தையே மனதில் கொண்டிருந்தார். தனக்கென்று தனியான திட்டங்கள் எதுவும் இயேசுவிடம் இல்லை. தந்தையின் திட்டமே இயேசுவின் திட்டம். எனவேதான், தந்தை இயேசுவைப் பெருமைப்படுத்தினார். விண்ணிலும், மண்ணிலும் உள்ள அனைத்தின்மீதும் அவருக்கு அதிகாரம் வழங்கினார் (பிலி 2:6-11)....
Like this:
Like Loading...
யூதர்களுக்கு தங்களது மீட்பில் எப்போதுமே சந்தேகம் வந்தது கிடையாது. யூதராகப் பிறப்பதே, மீட்பைப் பெற்றுவிட்டதற்கான பொருளாக அவர்கள் நினைத்தனர். அவர்களைப்பொறுத்தவரையில், கடவுளின் நீதித்தீர்ப்பு வருகிறபோது, யூதர்களை ஒரு அளவையிலும், மற்ற நாட்டினரை வேறொரு அளவையிலும் நிறுத்துவார் என்று அவர்கள் முழுமையாக நம்பினர். ஆபிரகாமின் பிள்ளைகள் நீதித்தீர்ப்பிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்று நினைத்தனர். ஆனால், திருமுழுக்கு யோவான் அவர்களின் நம்பிக்கை தவறு என்று சுட்டிக்காட்டுகிறார். கடவுளின் நீதித்தீர்ப்பைக்கான அளவையும், திருமுழுக்கு யோவான் சொல்கிறார். மக்கள் தங்களிடம் இருப்பதை முதலாவதாக பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். ஒருவர் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பதையும், மற்றொருவர் ஒன்றும் இல்லாமல் இருப்பதையும் கடவுள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை அவர் உறுதியாகத் தெரிவிக்கிறார். பகிர்தலுக்கு அடித்தளமாக, அவரவர் பணியை, அவரவர் திறம்படச் செய்ய வேண்டும் என்று, அவர் போதிக்கிறார். எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல, செய்யும் தொழிலில் நேர்மையாக, உண்மையாக, கடவுளுக்குப் பயந்து, மற்றவர்களுக்கு நன்மை செய்யும்...
Like this:
Like Loading...
கி.மு. 600 ஆம் ஆண்டையொட்டி யூதா நாட்டில் வாழ்ந்த இறைவாக்கினர்தான் அபக்கூக்கு. வடக்கிலிருந்து பாபிலோனியர்கள் படையெடுத்து வந்து தாக்கும் ஆபத்து எப்போதும் சூழ்ந்திருந்தது. யூதாவிலோ நாட்டின் ஒற்றுமையும், நீதியும் குலைந்து, வலியோர் எளியோரை ஒடுக்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் அபக்கூக்கு இறைவாக்குப் பணியில் ஈடுபடுகிறார். கயவர்களை ஏன் இறைவன் தண்டிக்காமல் விட்டுவைக்கிறார்? பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும்போது இறைவன் ஏன் மௌனமாய் இருக்கிறார்? என்னும் கேள்விகளை அபக்கூக்கு எழுப்பி, அவற்றுக்கு விடை காண முயல்கிறார். பன்னெடுங்காலமாக மானிட இனத்தைத் தட்டி எழுப்பும் கேள்வி அல்லவா இது! ஏன் இந்த உலகில் தீமை? ஏன் தீயவர்கள் தழைக்கிறார்கள், நல்லவர்கள் துன்புறுகிறார்கள்? இக்கேள்விக்கு விடை காண முயலும் இறைவாக்கினருக்கு ஆண்டவர் தரும் பதில்: நம்பிக்கையோடிருங்கள். எனவேதான், மிகப் பிரபலமான இந்த வார்த்தைகளோடு இன்றைய முதல் வாசகம் நிறைவுக்கு வருகிறது: “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்”. மன்றாடுவோம்: நம்பிக்கையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நேர்மையுடையவர்கள் தம் நம்பிக்கையினால்...
Like this:
Like Loading...
யேசு மனித மனம் காட்டும் முரண்பாட்டை எண்ணி வருந்துகிறார். தனது வருத்தத்தை சந்தைவெளியில் சிறுபிள்ளைகளின் மனப்பாங்கில் வெளிப்படுத்துகிறார். சந்தைவெளியில் ஒரு குழு, மற்றொரு குழுவிடம், ”வாருங்கள், திருமணவிருந்தில் இசைக்கலாம்” என்று அழைப்புவிடுக்கிறது. மறுகுழுவோ ”மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. மீண்டும் அந்த குழு, அடுத்த குழுவிடம், ”சரி, அடக்க வீட்டிலாவது ஒப்பாரி வைக்கலாம்” என்று சொன்னால், ”கவலையாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கும் மறுப்பு வருகிறது. எதைச்சொன்னாலும் அதை செய்யக்கூடாத மனநிலையும், எதிலும் குற்றம் காணும் மனநிலையை இந்த உவமை வாயிலாக இயேசு படம்பிடித்துக்காட்டுகிறார். இயேசுவையும், திருமுழுக்கு யோவானையும் மக்கள் எப்படிப்பார்த்தனர்? என்பதற்கு இயேசு இந்த விளக்கத்தைக்கொடுக்கிறார். இரண்டு பேருமே வெவ்வெறான மனநிலை உடையவர்கள். இரண்டு பேருமே, வேறு வேறு கண்ணோட்டத்தில் நற்செய்தியைப் போதித்தவர்கள். ஆனால், இரண்டு பேரிலும் மக்கள் குறைகண்டனர். இரண்டு பேரையும் மக்கள் வசைபாடினர். இரண்டு பேரையும் அதிகாரவர்க்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய...
Like this:
Like Loading...