Tagged: இன்றைய வசனம் தமிழில்

கிறிஸ்துமஸ் பெருவிழா

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா ஏன் டிசம்பர் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும்? ஆங்கில வருடத்தை “கிறிஸ்து பிறப்பிற்கு முன்” மற்றும் ”கிறிஸ்து பிறப்பிற்கு பின்” என்று பிரித்திருக்கிறோம். அப்படிப்பார்த்தால், இயேசு பிறந்தது ஜனவரி முதல் தேதி தானே. பின் ஏன் கிறிஸ்துமஸ் பிறப்புவிழாவை டிசம்பர் 25 ம் நாள் கொண்டாடுகிறோம்? கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றி இரண்டு வாதங்களை, திருவழிபாட்டு அறிஞர்கள் முன்வைக்கின்றனர். 1. சமய வரலாறு. 2. கணக்கீடு. முதல் கூற்றுப்படி, உரோமைப் பேரரசன் அவ்ரேலியுஸ் கி.பி.274 ம் ஆண்டு, சூரிய கடவுளுக்கு தனது ஆட்சி பொறுப்பில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். அதனை டிசம்பர் 25ம் நாள் கொண்டாட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். ஆனால், அவனுடைய உள்நோக்கம் விழா கொண்டாடுவது கிடையாது. மாறாக, இந்த விழா மூலம், மக்கள் அனைவரையும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரே கலாச்சாரத்தின் கீழ், தனது...

யோவானின் பணித் திட்ட அறிக்கை !

செக்கரியாவின் இறைவாக்கு யோவானின் எதிர்காலப் பணியின் திட்ட அறிக்கை போலவே இருக்கிறது. அது செக்கரியாவின் வாக்கு அல்ல. தூய ஆவியால் அவர் ஆட்கொள்ளப்பட்டு, இறைவாக்காக உரைத்தது. எனவே, திருமுழுக்கு யோவானுக்கான இறைவனின் திட்ட அறிக்கை என்றே எடுத்துக்கொள்ளலாம். அவரது பணியும், வாழ்வும் எவ்வாறு அமையும் என்ற ஒரு பட்டியலே நமக்குத் தரப்படுகிறது. 1. அக்குழந்தை உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படும். எனவே, அவர் இறைவாக்கினராக வாழ்வார் என்பது முதலிலேயே தெளிவுபடுத்தப்படுகின்றது. 2. ஆண்டவருக்கான வழியை செம்மைப்படுத்த, அவர் முன்னே செல்ல வேண்டும் என்பது இன்னொரு தெளிவு. 3. தூய்மையோடும் 4. நேர்மையோடும் 5. வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யவேண்டும். யோவானுக்குச் சொல்லப்பட்ட பணித் திட்ட அறிக்கை நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தரப்பட்டதாகவே எடுத்துக்கொள்ளலாம். காரணம், நாம் ஒவ்வொருவருமே இயேசுவின் முன்னோடிகளாக, இயேசுவைப் பிறருக்கு அறிவிப்பவர்களாக, அவருக்காக உலகை ஆயத்தம் செய்பவர்களாக வாழ வேண்டும். எனவே, நாமும் துhய்மையோடும், நேர்மையோடும்,...

நன்றியுணர்வு

நன்றி மறப்பது நல்லதன்று என்று வள்ளுவர் கூறுகிறார். நமது வாழ்வில் நாம் பல மனிதர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நன்றியுணர்வு என்கிற வார்த்தையும், அதற்கான பொருளும் இன்றைய சமூகத்தில் ஒரு பொருட்டாக நினைக்கப்படுவதில்லை. செய்த நன்றியை மறப்பது, நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம். நன்றி என்ற வார்த்தைக்கு, இன்றைய நற்செய்தி வாசகத்தல் எடுத்துக்காட்டுக்களாக செக்கரியாவும், எலிசபெத்தும் சித்தரிக்கப்படுகிறார்கள். எலிசபெத்தம்மாளுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. குழந்தை பெறக்கூடிய வயதையும் கடந்துவிட்டாள். அந்த தருணத்தில் கடவுளின் அருள் அவளுக்கு கிடைக்கிறது. குழந்தை பாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறாள். தான் பெற்றெடுக்கப்போகும் குழந்தைக்கு, யோவான் என்று பெயரிட பணிக்கப்படுகிறார்கள். பொதுவாக, குழந்தைக்கான பெயரை தாயோ, தந்தையோ தேர்ந்தெடுப்பார்கள். அந்த பெயர்களில் தங்களின் நெருக்கமான உறவுகளின் பெயரையோ அல்லது தந்தை, தாயின் பெயரையோ வைப்பது இன்றைக்கும் நம் மத்தியில் காணப்படுகிறது. அதேபோல செக்கரியாவின் உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், செக்கரியாவும், எலிசபெத்தம்மாளும் கடவுள் செய்த நன்மைகளுக்கு, நன்றியுணர்வோடு...

உண்மையான பங்கேற்பு

நாம் ஒவ்வொரு நாளும் செபிக்கிறோம். திருப்பலியில் பங்கு பெறுகிறோம். இறைவார்த்தையை வாசிக்கிறோம். ஆனால், அது உண்மையிலே நிறைவாக பங்கேற்ற உணர்வைத்தருகிறதா? பல வேளைகளில் நமது பதில் இல்லை. பல வேளைகளில் ஏதோ கடமைக்காக, வழிபாடுகளில் பங்கேற்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறோம். அதே வேளையில், நமக்கு ஒரு கஷ்டம் என்று வைத்துக்கொள்வோம். ஆலயத்திற்குச் செல்கிறபோது, மிகவும் பக்தியாக உணர்கிறோம். சொல்லப்படுகிற இறைவார்த்தை நம் உள்ளத்தைத் தொடுவதாக இருக்கிறது. நாம் சொல்லும் செபம் அர்த்தமுள்ளதாக மாறுகிறது. ஒரே வழிபாடுதான். ஆனால், நமது மனநிலைதான் அதை வேறுபடுத்திக்காட்டுகிறது. இன்றைய நற்செய்தியில் அன்னை மரியாளின் பாடல்களும், இத்தகைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரக்கூடிய செபம் தான். 1சாமுவேல் புத்தகம் 2: 1 – 10 ல் நாம் அன்னாவின் பாடலை வாசிக்கிறோம். ஏறக்குறைய, மரியாளின் பாடல், இதைத்தழுவியதாகத்தான் இருக்கிறது. கடவுளின் மகனைத்தாங்கப் போகிறோம் என்கிற பேரானந்தமும், தனது உறவினர் எலிசபெத்தம்மாளும் மலடி என்ற அவப்பெயரைத் துடைப்பதற்கு, இறைவன் கருணைபுரிந்திருக்கிறார் என்கிற உணர்வும்,...

இறைவனின் அருள்

இறைவனுடைய அருளைப்பெறுவது என்பது மிகப்பெரிய பேறு. அதற்கு ஈடுஇணை இந்த உலகத்திலே எதுவும் கிடையாது. அதற்கு மேல் பெறக்கூடிய சிறப்பு இந்த உலகத்திலே இல்லை. மரியாளுக்கு கடவுளுடைய வார்த்தை அறிவிக்கப்பட்டபோது, இத்தகைய மகிழ்ச்சி அவளுள் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், வானதூதர் அவளைப்பார்த்து, ”அருள்மிகப்பெற்றவரே!வாழ்க!” என்று வாழ்த்துகிறார். கடவுளுடைய அருளை அன்னை மரியாள் பெற்றிருக்கிறாள் என்பதுதான் இதனுடைய பொருள். ஆக, அந்த வார்த்தைகள் அன்னை மரியாளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும். அதே வேளையில், கடவுளின் அருள் மற்றொரு அனுபவத்தையும் தாங்கியதாக இருக்கும். அதுதான் மரியாளின் இதயத்தை வாளாக ஊடுருவ இருப்பதாகும். கடவுளின் அருள் கொடுக்கப்படுவது பெற்றுக்கொண்டு வைத்திருப்பதற்கு மட்டும் அல்ல. அது வாரி வழங்கப்படுவதற்காக கொடுக்கப்படுகிறது. அதில், நாம் நமது வாழ்வை, தியாகம் செய்ய வேண்டியது வரலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். ஆனால், கடவுளின் அருளைப்பெறுவதற்கு, எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான், அன்னை மரியாளின் வாழ்வாக இருந்தது....