Tagged: இன்றைய வசனம் தமிழில்

உணவை வீணாக்க வேண்டாம்

நற்செய்தி நூல்கள் அனைத்திலும் காணப்படுகின்ற புதுமை, இயேசு அப்பத்தை பலுகச்செய்த புதுமை. பசுமையான புல்வெளியை பாலஸ்தீனத்தில் ஏப்ரல் மாத்தில் தான் பார்க்க முடியும். ஆகவே, இந்த புதுமை ஏப்ரல் மாதத்தின் நடுவில் நடைபெற்றிருக்கலாம். இந்த காலகட்டத்தில், சூரியன் ஏறக்குறைய மாலை ஆறு மணி அளவில் மறையக்கூடியதாக இருந்தது. எனவே, மாலைப்பொழுதில், சூரியன் மறையக்கூடிய அந்த நேரத்தில் தான் இந்த புதுமை நடைபெற்றிருக்க வேண்டும். மீதியுள்ள அப்பத்துண்டுகளை பன்னிரெண்டு கூடை நிறைய சேர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. பன்னிரெண்டு என்பது, திருத்தூதர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எங்கோ அமர்ந்து உணவுக்கே வழியில்லாமல் இருந்த மக்கள்கூட்டத்தில் கூடை எங்கிருந்து வந்தது? என்று நாம் நினைக்கலாம். பொதுவாக, பாரம்பரிய யூதர்கள் தங்களின் உணவை தாங்களே கூடைகளில் வெளியே எடுத்துச் சென்றனர். குறிப்பாக நீண்ட தூரப்பயணம் அமைகிறபோது, இந்த நடைமுறையைப் பின்பற்றினர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. யூதர்களுக்கு தூய்மை என்பது உண்கின்ற உணவிலும் மிகவும் சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்....

இயேசுவின் பணித் தொடக்கம் !

இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கிய செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் (+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17, 23-25) தருகிறது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தை இறைவாக்கினர் எசாயாவின் அறைகூவலின் நிறைவேறுதலாகப் பார்க்கிறார். “காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது“. கிறிஸ்து பிறந்ததால் ஒளியும், வாழ்வின் நம்பிக்கையும் இந்தப் புவிப் பரப்பில் உருவானது என்ற நற்செய்தியை மத்தேயு பறைசாற்றுகின்றார். என்னுடைய பணியும், வாழ்வும் இயேசுவின் பணியும், வாழ்வும் போல அமைந்திருக்கின்றனவா என்று ஆய்ந்து பார்க்க அழைப்பு விடுக்கிறது இன்றைய வாசகம். எனது பணி இருளில் வாழ்வோர்க்கு ஒளியாக, நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையாக இருக்கிறதா என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். எனது வாழ்வும் இயேசுவின் வாழ்வு போல அமைய அருள்வேண்டுகிறேன். மன்றாடுவோம்: நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது பணியும், வாழ்வும் நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையை. இருளில்...

திருக்காட்சிப் பெருவிழா

திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது. இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள்...

புதிய ஆண்டில் புதிய நம்பிக்கைகள் !

இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா! கடந்த ஆண்டின் ஏமாற்றங்கள், தோல்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, புதிய எதிர்நோக்கோடு இந்த ஆண்டைச் சந்திக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நம் வாழ்வின் தனிப்பட்ட போராட்டங்கள், பொதுநீதிப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போகுமோ என்னும் கவலையும், கலக்கமும் நம்மைத் தாக்கலாம். ஆனால், இன்றைய இறைவாக்கு நமக்கு ஊக்கமூட்டுகிறது. மரியா, யோசேப்புடன் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தை இயேசுவைக் கண்ட இடையர்கள் வியப்படைந்தனர், மகிழ்ச்சியும் அடைந்தனர். “அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்திருந்தது”. எனவே, கடவுளைப் போற்றிப் பாடிக்கொண்டே திரும்பிச் சென்றனர். “ஆண்டவர் உனக்கு ஆசிவழங்கி உன்னைக் காப்பாராக” என்னும் ஆண்டவரின் ஆசிமொழி ஆண்டின் முதல் நாளில் நமக்கு வழங்கப்படுகிறது. இந்த வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு...

நன்றி கூறுவோம் !

இன்று ஆண்டின் இறுதி நாள்! இறைவனுக்கு நன்றி கூறும் நாள். இந்த ஆண்டைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்து அதன் நன்மைகளுக்காக, ஆசிர்வாதங்களுக்காக, வெற்றிகளுக்காக நன்றி கூறும் நாள். இந்த நாளில் ஆண்டு முழுவதும் நம்மை அரவணைத்த அன்பு இறைவனைப் போற்றுவோம். இந்த ஆண்டில் நாம் அடைந்த வளர்ச்சிகளுக்காக நன்றி கூறுவோம். இந்த ஆண்டின் தவறுகள், தோல்விகள், நோய்கள், இன்னல்களையும் நினைத்துப் பார்ப்போம். அவற்றிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வது நல்லது. எந்தத் தோல்வியிலிருந்தும், தவறிலிருந்தும் நாம் நன்மைகளை அடையலாம். முதலில், தவறுகளை, தோல்விகளை ஏற்றுக்கொள்வோம். தோல்வி என்பது யாருக்கும் நேர்வதுதான். அதில் தவறில்லை. தோல்வியிலேயே துவண்டுவிடுவதுதான் தவறு. அடுத்து, அந்தத் தோல்விகள், தவறுகள் ஏன் நிகழ்ந்தன என எண்ணிப்பார்ப்பதும், ஆய்வு செய்வதும் நன்று. இவையும் நமக்கு உதவும். மூன்றாவதாக, இனி இத்தகைய தோல்விகள், தவறுகள் நேராதபடி கவனமாயிருக்க உறுதி பூணுவோம். இந்த ஆண்டின் இறுதி நாளை மகிழ்ச்சியுடன் கழிப்போம். மன்றாடுவோம்: தொடக்கமும், முடிவுமான...