Tagged: இன்றைய வசனம் தமிழில்
அழைப்பு என்பது கடவுளின் கொடை தான். அந்த கொடையை கடவுள் நமது நிலையைப் பார்த்து வழங்குவதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். எனவே, அது ஒரு கொடையாக கருதப்பட்டாலும், கடவுளின் அளப்பரிய அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தாலும், நமது தகுதியின்மையில் இருக்கக்கூடிய தகுதியும், இதில் சிறந்த பங்கு வகிக்கிறது. கடவுள் முன்னிலையில் நாம் தகுதி என்றே சொல்ல முடியாது. எனவே, நமது தகுதியின்மையில் ஏதாவது தகுதி இருக்கிறதா? என்பதைப் பார்த்து, அதற்கேற்பவும் நிச்சயம் அந்த தகுதி வழங்கப்படுகிறது. இயேசு தனது பணிவாழ்வை தொடங்குகிறார். எந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறபோதும், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டும். இயேசுவின் பணி அவரோடும், அவரது வாழ்வோடும் முடிந்துவிடக்கூடிய பணி அல்ல என்பது அவருக்கு நன்றாகத்தெரியும். எனவே, தனது பணியை ஆரம்பிப்பது ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்கு தொடக்கமாக, கடலில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை அழைக்கிறார். நாம் நினைக்கலாம்? மீனவர்கள்,...
Like this:
Like Loading...
இன்று ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா. இயேசு திருமுழுக்கு பெற்றுத் தன் பணிவாழ்வைத் தொடங்கிய நாள். அந்தப் பணியைத் தொடங்கும் வேளையில் இயேசுவின்மேல் இன்று ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா. இயேசு திருமுழுக்கு பெற்றுத் தன் பணிவாழ்வைத் தொடங்கிய நாள். அந்தப் பணியைத் தொடங்கும் வேளையில் இயேசுவின்மேல் தூய ஆவி புறா வடிவில் இறங்கினார். வானத்திலிருந்து “என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ” என்று தந்தையின் குரல் கேட்டது. இந்த இரு நிகழ்வுகளும் நமக்குத் தருகின்ற செய்தி: 1. நமது பணியை ஆற்றுவதற்கு தூய ஆவியின் துணை வேண்டும். அவரது அருள்கர ஆற்றலின்றி நமது பணி வெற்றியடைய முடியாது. 2. தந்தை இறைவனை மகிழ்ச்சிப்படுத்துவதே நமது பணியின், வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும். அதற்கு முதல்கட்டமாக, தந்தை இறைவனோடு நாம் நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும். அதற்கான அருளை இன்று மன்றாடுவோம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவை...
Like this:
Like Loading...
யோவான் நற்செய்தியாளர் இயேசுவைப்பற்றி செய்தி அறிவிப்பதற்குத்தான் தனது நற்செய்தியை எழுதுவதன் நோக்கமாக தொடக்கத்திலேயே சொல்கிறார். அப்படி இருக்கிறபோது, எதற்காக திருமுழுக்கு யோவானின் நற்செய்திப்பணி பற்றி அவர் கூற வேண்டும்? எதற்காக இயேசுவின் பணிவாழ்வோடு திருமுழுக்கு யோவானின் பணிவாழ்வையும் கலந்து சொல்ல வேண்டும்? இதற்கு பதில் இல்லாமல் இல்லை. திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடி மட்டும்தான். அவர் வரவிருந்த மெசியா அல்ல. இது திருமுழுக்கு யோவானுக்கும் தெரிந்திருந்தது. அவருக்குரிய இடம் நிச்சயமாக அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இயேசுவுக்கான இடம் அதற்கும் மேலான இடம். ஆனால், இயேசுவுக்கான இடத்தை திருமுழுக்கு யோவானுக்குக் கொடுத்து, அவரை மெசியா எனவும், மீட்பர் எனவும் மக்கள் அழைக்கக்கூடிய அளவுக்கு, அவர் பெயர் பெற்றிருந்தார். இந்த நிலையில் தான், இயேசு, நிச்சயமாக திருமுழுக்கு யோவானைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக, நற்செய்தியாளர் இந்த பகுதியில், இரண்டு கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறார். இந்த பகுதி திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சியின் மகிமையையும்...
Like this:
Like Loading...
நம் இயேசு விரும்புவதெல்லாம் நாம் அனைவரும் நோய் நீங்கி நலமுடன் வாழ வேண்டும் என்பதே. இதற்காக அவர் எதையும் செய்யவும் எதையும் இழக்கவும் தயாராக உள்ளார். “கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.” (பிலி 2’6-8) யாரும் அண்டாத தொழுநோயாளியைத் தொடுகிறார். வெறுத்து ஒதுக்கிய மக்களோடு விருந்துண்கிறார். பாவி, விபச்சாரி என்று பழிக்கப்பட்டவர்களோடு பாசத்தைப் பகிர்ந்து கொண்டார். யாருடைய பசியையும் தாகத்தையும் சகிக்க முடியாதவர். விதவையின் வேதனை, பெண்களின் கண்ணீர் தாங்க முடியாதவர். தன்னை நோக்கி குரல் எழுப்பும் எவருக்கும் மறுக்காதவர். எப்பொழுதுமே “நான் விரும்புகிறேன், நலமாயிருங்கள்” என்பதைத் தவிர வேறெதுவும் அவரால் எண்ண முடியாது. இயேசுவிடம் வாருங்கள். உங்கள் குறைகள், குடும்ப...
Like this:
Like Loading...
இயேசுவின் வாழ்க்கையில் செபம் மையமாக இருப்பதை நாம் ஆங்காங்கே நற்செய்தி நூல்களில் காணலாம். இந்த செபம் இயேசுவின் வாழ்க்கையில் கொடுத்த ஆன்மீக பலம் என்ன? செபம் எவ்வாறு இயேசுவின் வாழ்வை வழிநடத்தியது? செபத்தினால் அவர் பெற்ற நன்மைகள் என்ன? என்று நாம் பார்க்கலாம். இயேசுவின் வாழ்க்கையில் செபம் மூன்று ஆசீர்வாதங்களை அவருக்குக் கொடுத்தது. இறைவனின் திருவுளத்தை அறிய உதவியது. இயேசு தான் சென்று கொண்டிருக்கிற வழி சரிதானா? தான் கடவுளின் திட்டப்படி நடந்து கொண்டிருக்கிறேனா? என்பதை அறிவதற்கான ஆயுதமாக செபத்தைப் பயன்படுத்தினார். எனவே தான், ஒவ்வொருநாளும் பகல் முழுவதும் பணியில் மூழ்கியிருந்தாலும், இரவிலே தந்தையோடு செபத்தின் வழியாகப் பேச, அவர் மறந்ததே இல்லை. துன்ப, துயரங்களை, சவால்களை சந்திப்பதற்கு ஆன்ம பலத்தைக் கொடுத்தது. இயேசுவின் வாழ்வில் எவ்வளவோ சவால்களைச் சந்தித்தார். அதிகாரவர்க்கத்தினரை எதிர்த்து, சாதாரண தச்சரின் மகன் வாழ்ந்தார் என்றால், அது மிகப்பெரிய சாதனை. அந்தச் சாதனையை இயேசுவால் அசாத்தியமாக செய்ய...
Like this:
Like Loading...