Tagged: இன்றைய வசனம் தமிழில்

விசுவாசம் – கடவுளின் கொடை

இயேசு கடவுளின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கிறார். இயேசுவின் இந்த செயல், விசுவாசம் என்பது போற்றிப்பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, அது பறைசாற்றப்பட வேண்டியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கத்தோலிக்க திரு அவை இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலான பாரம்பரியத்தைகொண்டு இருக்கிறது. இந்த இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தின் வெற்றி, ஒவ்வொரு தலைமுறையினரின் அர்ப்பணத்திலே இருந்திருக்கிறது. அன்றைக்கு சீடர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்தை அர்ப்பண உணர்வோடு தலைமுறையினர் தோறும் அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த பாதுகாப்போடு, மகிச்சியோடு, தியாக உள்ளத்தோடு பரிமாறியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஆனாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட அந்த மாட்சிமையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் சந்தித்த இன்னல்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் திருத்தூதர்கள். திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவுக்காக சிந்திய இரத்தம் அதற்கு சாட்சி. இன்றைக்கும் நாம் பெற்றிருக்கிற இந்த பாரம்பரியமான விசுவாசத்தை சிதைக்காமல் எந்தச்சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு...

கடவுளின் அருகாமையில் இருக்க….

தீய ஆவிகள் இயேசுவைக்கண்டதும், ”இறைமகன் நீரே” என்று கத்தியதாக நற்செய்தி கூறுகிறது. ”இறைமகன்” என்ற வார்த்தையின் பொருளை இங்கு நாம் பார்ப்போம். இறைமகன் என்கிற வார்த்தை, மத்திய கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த மக்களால், அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வார்த்தை. எகிப்து தேசத்தின் அரசர்கள் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர். அகுஸ்துஸ் சீசர் முதல் ஒவ்வொரு உரோமை அரசர்களும் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர். பழைய ஏற்பாட்டில் நான்கு வழிகளில் இந்த வார்த்தை பயன்படுகிறது. 1. வானதூதர்கள் கடவுளின் மகன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தொடக்க நூல் 6: 2 ல் ”மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப்புதல்வர் கண்டு…. ” என்று பார்க்கிறோம். 2. இஸ்ரயேல் நாடு கடவுளின் மகனாகக் கருதப்படுகிறது. ஓசேயா 11: 1 ”எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்”. இங்கே இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததும், அவர்களைக் கடவுள் அழைத்து வந்ததும் தெரியப்படுத்தப்படுகிறது. 3. ஒரு நாட்டின் அரசர், கடவுளின் மகனாக பார்க்கப்படுகிறார்....

மக்களுக்காக வாழ்ந்த இயேசு

கழுகுப்பார்வைகள், இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்க கூர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டன. எப்படியும் இயேசுவை தொலைத்துவிட வேண்டும் என்று, தலைமைச்சங்கத்தால் அனுப்பப்பட்ட குழு, இயேசுவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இயேசுவின் ஒவ்வொரு அசைவும் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இயேசுவின் முன்னால், ஓய்வுநாளில் கைசூம்பிப்போன மனிதன், குணம் பெறுவதற்காக காத்திருக்கிறான். அந்த மனிதனுக்கும் தெரியும், ஓய்வுநாளில் சுகம்பெறுவது, தனக்கு சுகம் கொடுக்கிறவருக்கு தேவையில்லாத பிரச்சனைகளைத் தரும் என்று. ஆனால், அந்த மனிதன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குணம் பெறுவது ஒன்றையே இலக்காக வைத்திருக்கிறான். ஓய்வுநாளில் குணப்படுத்துவது வேலைசெய்வதாகும். உயிர்போகக்கூடிய சூழ்நிலையில் இருக்கிற ஒருவனுக்கு மட்டுமே, ஓய்வுநாளில் உதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குச் செய்தால், அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். ஏன் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இந்த சட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்று நமக்கு கேட்கத்தோன்றும். நமது பார்வையில், இதனைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், யூதர்கள் எந்த அளவுக்கு, இதனை கடைப்பிடித்தார்கள் என்று பார்த்தோம் என்றால்,...

மனிதத்தின் முழுமை இறைமை

இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல் வழியே செல்கின்றபோது அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து கொண்டே வழிநடக்கின்றனர். சாதாரண நாட்களில் செல்லும்போது கதிர்களைக் கையால் கொய்வது குற்றம் கிடையாது. “உனக்கு அடுத்திருப்பவனுடைய விளைநிலத்திற்குச்சென்றால் உன் கையால் கதிர்களைக் கொய்யலாம்: ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே” (இணைச்சட்டம் 24: 25). இங்கே சீடர்கள் செய்த தவறு ஓய்வுநாளில் கதிர்களை பறித்தது. ஓய்வுநாளை முழுமையாகக் கடைப்பிடிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்கங்களை யூத மதத்தலைவர்கள் வகுத்திருந்தனர். அந்த ஒழுங்குமுறைகளுக்கு எதிராக அமைந்திருந்தது சீடர்களின் செயல்பாடு. சட்டம், மனிதம் இரண்டில் இயேசு மனிதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார். அதற்கு அவர்களின் மொழியிலேயே விளக்கமும் தருகிறார். பழைய ஏற்பாட்டிலே 1 சாமுவேல் 21: 1 – 6 ல் பார்க்கிறோம்: குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய தூய அப்பத்தை (லேவியர் 24: 9 – அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும் உரியது. அதைத்தூயகத்திலே உண்ண வேண்டும்) தானும் உண்டு,...

எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கட்டும்

யூதர்களின் நோன்பு என்பது ஒரு பெரிதான காரியம் அல்ல. காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நோன்பு நேரம். அதற்கு பிறகு வழக்கமான உணவு உண்ணலாம். பாரம்பரிய யூதர்களுக்கு நோன்பு என்பது வழக்கமான கடைப்பிடிக்கக்கூடிய ஒரு பழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாள் அன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருப்பார்கள். இன்னும் சில பாரம்பரிய யூதர்கள் வாரத்தில் இருமுறை அதாவது திங்களும், வியாழனும் இருந்தார்கள். இதைத்தான் இந்த நற்செய்தியிலும் பார்க்கிறோம். இயேசு நோன்பிற்கு எதிரானவர் அல்ல. ஏனென்றால் நோன்பு என்பது ஒருவன் தன்னையே அடக்கி ஆள, உதவி செய்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உணர்வோடு, தன்னடக்கத்தோடு வாழத்தூண்டுகின்ற ஒன்றாகும். ஆனால், பரிசேயர்களை பொறுத்தவரையில், அவர்களின் நோன்பு சுய இலாபத்திற்கானதாக இருந்தது. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் வாய்ப்பாக, அவர்கள் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தங்களை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணுவதற்கும் நோன்பு ஒரு காரணமாக அமைந்தது. இதை இயேசு கண்டிக்கிறார். எந்தவொரு...