Tagged: இன்றைய வசனம் தமிழில்
யூதர்களின் சட்டப்படி ஒருவர் தமக்குத் தாமே சாட்சியாக இருக்க முடியாது. அவருக்குப் பிற சாட்சிகள் தேவை. எனவே, இயேசுவும் யூதர்களின் சட்டத்தை மதித்து, தம்முடைய சான்றுகளை முன்வைக்கிறார். 1. இயேசுவின் முதல் சான்று திருமுழுக்கு யோவான். அவரைப் பற்றியே இயேசு “என்னைப் பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்” என்கிறார் இயேசு. திருமுழுக்கு யோவான் ஒரு நேர்மையாளர், இறைவாக்கினர். அவருடைய சான்று ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. இயேசுவின் இரண்டாவது சான்று அவரது பணிகள். ” நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்”. கனிகளைக் கொண்டே மரத்தை எடைபோடலாம் என்னும் இயேசுவின் வாக்கிற்கு, அவரது பணிகளே உரைகல். இயேசுவின் பணிகள் நேர்மையான,...
Like this:
Like Loading...
யூதர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த முக்கியமான ஒழுங்குமுறைகளை, ‘விளக்கம்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கைகளில் இயேசு வாழ்ந்த காலத்திலே மக்கள் மாற்றியிருந்தனர். அதிலே ஒன்று ஓய்வுநாளைப்பற்றிய விளக்கம். ஓய்வுநாளைப்பற்றிய சட்டம் எளிமையானது: பிறநாட்களுக்கும், ஓய்வுநாளுக்கும் வேறுபாடு இருக்க வேண்டும். எனவே, அன்றைய தினத்தில், மனிதர்களோ, அடிமைகளோ அல்லது விலங்குகளோ வேலை செய்யக்கூடாது, என்பதுதான் இ;ந் எளிமையான சட்டத்தின் பொருள். ஆனால், இந்த எளிமையான, சாதாரண ஒழுங்கிற்கு ‘விளக்கம்’ என்ற பெயரில் 39 வகையான தலைப்புகளில், இதனுடைய எண்ணிக்கையையும் சில பழமைவாத யூதர்கள். அதில் ஒன்று தான், ஓய்நாளில் சுமைகளைத்தூக்கிச்செல்வது தொடர்பானது ஆகும். இந்த ஒழுங்கு இரண்டு விவிலியப்பகுதி அடிப்படையில் வகுக்கப்பட்டது. எரேமியா 17: 21 -22 “ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம். அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம். ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் தூக்கிச்செல்ல வேண்டாம். அன்று எந்த வேலையும் செய்ய...
Like this:
Like Loading...
யூதர்களுக்கு மூன்று திருவிழாக்கள் முக்கியமானவைகளாக இருந்தன. அவைகள் முறையே, பாஸ்கா திருவிழா, பெந்தகோஸ்து திருவிழா மற்றும் கூடாரத்திருவிழா. யெருசலேம் ஆலயத்திலிருந்து 15 மைல்களுக்குள் வாழும் ஒவ்வொரு யூத ஆண்மகனும், இந்த திருவிழாக்களில் கட்டாயம் கலந்தகொள்ள வேண்டும். இன்றைய நற்செய்திப் பகுதியை யோவான் ஒரு உருவகமாக எழுதியிருக்கலாம் என சிலர் விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். முடக்குவாதமுற்ற மனிதன் இஸ்ரயேல் மக்களை குறிக்கிறவர். ஐந்து தூண்களும் முதல் ஐந்து புத்தகங்களைக் குறிக்கிறது. 38 ஆண்டுகள் என்பது இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் நாடோடிகளாக வாழ்ந்ததைக்குறிக்கிறது. தண்ணீரைக்கலக்குவது என்பது திருமுழுக்கை நினைவூட்டுகிறது. ஆனால், உண்மையில் இயேசுவின் புதுமைகளுள் ஒன்றுதான் இது என்று வாதிடுகிற அறிஞர்கள்தான் ஏராளம். இயேசு அந்த மனிதரிடம் ‘நலம் பெற விரும்புகிறீரா?’ என்று கேட்கிறார். இயேசுவின் இந்தக்கேள்வி பொருத்தமான கேள்வியாக, அறிவார்ந்த கேள்வியாக இருக்க முடியுமா? என்ற கேள்வி நமக்குள்ளாக எழலாம். காரணம், இத்தனை ஆண்டுகளாக, அந்த குளத்தின் கரையில் அந்த மனிதன் இருந்ததே,...
Like this:
Like Loading...
அரச அலுவலர் இயேசுவிடம் வந்து தன் மகனை நலமாக்க வருமாறு அழைத்தபோது, இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப் போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் மகன் பிழைத்துக்கொண்டான். எனவே, அவரும் அவர் வீட்டாரும் இயேசுவை நம்பினர். இறைவனின் இயல்புகளுள் ஒன்று அவர் “வாக்கு மாறாதவர்” என்பது. எனவேதான், காலையில் அவரது பேரன்பையும், இரவில் அவரது வாக்குப் பிறழாமையையும் புகழ்வது நல்லது என்று திருப்பாடலில் (92) வாசிக்கிறோம். இறைவன் வாக்குப் பிறழாதவர், சொன்ன சொல் தவறாதவர். எனவே, நாமும் அவரது வார்த்தையை நம்பி வாழ்வோம். இறைவனின் வாக்கே விவிலியம். அந்நூலில் இறைவனின் வாக்குறுதிகளும், ஆறுதல் மொழிகளும், அறைகூவல் சொற்களும் அடங்கியுள்ளன. அவரது வார்த்தைகள் நிலைவாழ்வைத் தருகின்றன. எனவே, இறைவனின் வார்த்தையை நம்புவோம். அந்த வார்த்தைகளின்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்....
Like this:
Like Loading...
உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறான். மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவம். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம். தன்னை மகனாக ஏற்க வேண்டும் என்று, அவன் நினைக்கவில்லை. தன்னுடைய தந்தையின் பணியாட்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டாலே போதும், என்பதுதான் அவனின் எண்ணம். தன்னுடைய தகுதியின்மையை, இளைய மகன் உணர்கிறான். தந்தை அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒருபோதும் எண்ணவில்லை. தான் செய்தது தவறு. அதற்கு விமோசனமே கிடையாது என்பதுதான், இளைய மகனின் மனநிலை. அந்த மனநிலையோடு தான் அவன் தந்தையிடம் திரும்பி வருகிறான்....
Like this:
Like Loading...