Tagged: இன்றைய வசனம் தமிழில்

தேவையில் இருக்கிறவர்கள்

”சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர், என்னையே ஏற்றுக்கொள்கிறார்” என்று இயேசு சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? இயேசு சிறுபிள்ளைகளை உவமையாக எதற்கு ஒப்பிடுகிறார்? எந்த பெற்றோரும், தனது பிள்ளைகளை சுமையாக நிச்சயம் கருதமாட்டார். அவர்களை ஏற்றுக்கொள்வது யாருக்கும் கடினமானது அல்ல. எனவே, குழந்தைகளை ஏற்றுக்கொள்வதைப்பற்றி இயேசு இங்கே பேசவில்லை. குழந்தைகளை உவமையாகப் பயன்படுத்துகிறார். அப்படியென்றால், குழந்தைகளை, இயேசு யாருக்கு ஒப்பிடுகிறார்? இங்கே குழந்தைகள் என்று வருகிற வார்த்தையை, நாம் புரிந்து கொள்ளும் சிந்தனை, சிறுகுழந்தைகள் யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாது. அவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து இருப்பார்கள். குழந்தைகளின் பெற்றோர், அவர்களுக்கு தேவையானவற்றை பார்த்து, பார்த்து செய்கிறார்கள். குழந்தைகள் மற்றவர்களின் உதவியில் தான், வாழ்கிறார்கள். அந்த குழந்தைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவர்களை அன்பு செய்கிறோம். அது போலவே, தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத, ஏழை, எளியவர்களை, வறியவர்களை இயேசு குழந்தைகளுக்கு ஒப்பிடுகிறார்கள். அவர்களை நாம் ஏற்றுக்கொள்ள பணிக்கிறார். தேவையில் இருப்பவர்களை...

”நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்”

“நீங்கள் என்னைத்தேர்ந்து கொள்ளவில்லை. நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்”. இயேசு தான் நம்மைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார். தனது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எதற்காக தனது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? அவர்களுடைய பணி என்ன? அவரது சிந்தனைகளை, அவரது கோட்பாடுகளை, அவரது போதனைகளை எடுத்துரைப்பதற்காக நம்மைத் தேர்ந்தெடுத்தார். எனவே, நாம் பேசக்கூடிய வார்த்தைகள் மட்டில் கவனத்தோடு இருக்க வேண்டும். நமக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், நாம் இயேசுவின் பிரதிநிதிகளாக இருப்பதால், நமது கருத்துக்களை நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், நம்மை யாரும் தனிப்பட்ட நபர்களாக பார்ப்பது கிடையாது. நாம் பேசுவதை நமது சிந்தனையாக யாரும் பார்ப்பது கிடையாது. மாறாக, இயேசுவின் மாதிரியாகப்பார்க்கிறார்கள். உதாரணமாக, ஒரு அருட்பணியாளர் ஆலயத்தின் பீடத்தில் நின்று பேசுகிறபோது, அவரை யாரும் வெறும் அருட்பணியாளராகப்பார்ப்பதில்லை. இயேசுவின் பிரதிநிதியாக, இயேசுவே பேசுவதாகப்பார்க்கிறார்கள். அதனால்தான், இயேசுவை நமது வாழ்வில் நாம் பிரதிபலிக்க வேண்டும். இந்த சமுதாயத்தில் கிறிஸ்தவர்களைப்பற்றிய ஒரு பார்வை மற்ற மதத்தினர் மத்தியில்...

சாட்சிய வாழ்வு

இயேசு மூன்றுமுறை பேதுருவைப்பார்த்து ‘என்னை அன்பு செய்கிறாயா?’ என்ற கேள்வியைக்கேட்கிறார். அதற்கு காரணம், மூன்றுமுறை மறுதலித்த பேதுருவுக்கு அவரது அன்பை உறுதிப்படுத்த இயேசு வாய்ப்பு தருகிறார் என்பதுதான். கடவுள் எப்போதுமே நமக்கு வாய்ப்பு தருகிறவராக இருக்கிறார். கடவுளுக்கு மனித பலவீனம் தெரியும். அவர் நம்முடைய நிலையை உணராதவர் அல்ல. நம்மில் ஒருவராக வாழ்ந்திருக்கிறார். நம்மோடு உறவாடியிருக்கிறார். நம்முடைய துன்பத்தில் பங்கு கொண்டிருக்கிறார். எனவே, அவர் நிச்சயம் மனிதர்களை அறிந்திருக்கிறார். அந்த வகையில் பேதுருவுக்கு வாய்ப்பு கொடுத்த இறைவன் நமக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார். வாய்ப்பு என்பது செய்த தவறை திருத்திக்கொண்டு வாழ வழங்கப்படுவது. செய்த தவறுக்காக மனம்வருந்தி, இனி அந்த தவறை செய்யாமல் இருப்பதற்காகக் கொடுக்கப்படும் வெகுமதி. அப்படிப்பட்ட கொடையைப் பெற்றுக்கொண்டது தகுதி என்பதை, பெற்றுக்கொண்ட நபர் வாழ்ந்து காட்ட வேண்டும். பேதுரு உண்மையிலேயே அதை வாழ்ந்து காட்டினார். அவர் தன்னுடைய பலவீனத்தில் இயேசுவை மறுதலித்திருந்தாலும், இயேசுவை கைவிட்டிருந்தாலும் இயேசுவுக்காக இரத்தம்...

பிரிவினைகளை அகற்றுவோம்

இயேசுவின் செபம் என்ன? நாமெல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதுதான். எப்படி ஒன்றாய் இருக்க வேண்டும்? நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது சாத்தியமா? நமக்குள்ளே பல அடிப்படை வேறுபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரிதலில், வாழ்க்கைமுறையில், பண்பாட்டில், வழிபாட்டு முறையில் என பல வேறுபாடுகள் நம் மத்தியில் இருக்கிறது. இத்தகைய வேறுபாடுகள் நமக்குள்ளாக பல பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பிரிவினைகளாக இருப்பவை எப்படி நம்மை ஒன்றுபடுத்த முடியும்? இயேசு நம்மை அன்பால் ஒன்றுபட செபிக்கிறார். நமக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை அவர் அறியாதவர் அல்ல. அந்த வேறுபாடுகள் ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பை, மதிப்பைக் கூட்ட வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது. கடவுளை நாம் அன்பு செய்தால், கடவுள் மீது நாம் நம்பிக்கை வைத்தால், கடவுளை நமது தந்தையாக ஏற்றுக்கொண்டால், ஒருபோதும் நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகள் பெரிதாகத் தோன்றாது. கடவுள் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான், நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகளைப் பெரிதாகக்காட்டுகிறது. இந்த பிரிவினைகளுக்குள்ளாக...

வாழ்க்கைப் போராட்டம்

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நம்மை நிலைநிறுத்தி வெற்றிகாண்பதில் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. எதற்காக வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்? நாம் நினைப்பது ஒன்றாக இருக்கிறது. ஆனால், நாம் செய்வது மற்றொன்றாக இருக்கிறது. ஏன்? இந்த உலகத்தில் நடக்கிற நிகழ்வுகள். நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக எதிர்ப்புக்களைச் சந்திக்கிறோம். ஆனால், இறுதியில் நாம் தனித்து விடப்படுகிறோம். இந்த உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரியாதவனாக தோன்றுகிறோம். அப்போது நமக்குள்ளாக பல கேள்விகள் தோன்றுகிறது. நாம் செல்லக்கூடிய பாதை சரி தானா? மற்றவர்கள் சொல்வது போல நாம் பிழைக்கத் தெரியாதவர்களா? இது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நாம் எடுக்கும் முடிவு முக்கியமானது. இந்த உலகம் தனக்கென்று ஒரு சில மதிப்பீடுகளை வழிவகுத்து இருக்கிறது. ஆனால், இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள், அந்த மதிப்பீடுகளை புறந்தள்ளும்விதமாக, தங்களுக்கென்று, தங்களுக்காக ஒருசிலவற்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். மற்றவர்களையும் அப்படி வாழ்வதற்கு தூண்டுகிறார்கள்....