Tagged: இன்றைய வசனம் தமிழில்
அன்பார்ந்த இணையதள உறவுகளுக்கு, பூமியெங்கும் உலாவி வரும் ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். விண்ணையும், மண்ணையும் படைத்த நம் இறைவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பவராக இருக்கிறார். ஆனால் நாம்தான் அவரிடம் கேட்காமல் நமது விருப்பத்துக்கு செய்துவிட்டு பிறகு மனம் தவிக்கிறோம். அவருடைய கண்கள் நம்மேல் எப்பொழுதும் உலாவிக்கொண்டே இருக்கிறது. நம்மை பாதுகாக்க வேண்டி அவர் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதும் இல்லை. நமது வலப்பக்கத்தில் எப்பொழுதும் நிழலாய் இருக்கிறார். திருப்பாடல்கள் 121:4,5. ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று வாக்கு அருளுகிறார். அவர்மேலேயே நம் முழுநம்பிக்கையும் வைத்து காத்திருந்தால் நாம் ஆசீவாதத்தை பெற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை. ஏனெனில் உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றது. அவரை நம்புவோருக்கு ஆற்றல் அளிக்கிறார். 2 குறிப்பேடு 16:9. அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. அதனால் உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்கு புகழ்பாடுங்கள். அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். மாட்சியை எடுத்துரையுங்கள். அவரின்...
Like this:
Like Loading...
அன்பும்,பாசமும்,நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பும், நல்வாழ்த்துக்களும் இப்பொழுதும், எப்பொழுதும் உரித்தாகட்டும். இந்த உலகத்தில் உள்ள சுவாசமுள்ள யாவும் தம்மை படைத்த கடவுள் மேல் அன்பு கொண்டுள்ளது. அதிகாலையில் எழுந்து பாருங்கள். ஒவ்வொரு பறவை இனங்களும் என்ன அழகாக கூவி ஆண்டவரை போற்றுகிறது. தெருவில் திரியும் ஒரு நாய்க்கு என்றாவது ஒருநாள் சாப்பாடு போட்டால் அது நம்மை பார்க்கும்பொழுது அழகாக வாலை ஆட்டி தன் அன்பை வெளிப்படுத்தும். மனிதர்கள் முதல்கொண்டு எல்லா ஜீவராசிகளும் தம்மை படைத்த கடவுளுக்கு அன்பை வெளிப் படுத்தி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அதனால்தான் கடவுளும், தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு தன் சொந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16. நமக்கு தண்டனை, தீர்ப்பு அளிக்க அல்ல. தமது மகன்மூலம் நம்மை மீட்கவே கடவுள் தமது மகனை உலகிற்கு அனுப்பினார். நீங்கள் யாராயிருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒவ்வொருவருக்கும் தனது உயிரை கல்வாரியில் ஒப்புக்கொடுத்து...
Like this:
Like Loading...
அன்பார்ந்த இறை மக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் ஒவ்வொருவரும் மிகவும் விரும்பும் காரியம் ஆசீர்வாதம். அதிலும் பரிபூரண ஆசீர்வாதம் கிடைத்தால் கூடுதல் சந்தோஷமே ஆனால் அந்த பரிபூரண ஆசீர்வாதத்தை எப்படி பெற்றுக்கொள்வது என்று யோசிப்போம். நீதிமொழிகள் 28:20 ல் இதைக்குறித்து வாசிக்கிறோம். நேர்மையாக அதாவது உண்மையாக நடப்பவர்களுக்குதான் கிடைக்கும் நீங்கள் நினைக்கலாம், உலகத்தில் எவ்வளவோ பேர்கள் அநியாயம் செய்து எல்லா ஆசீர்வாதங்களுடன் வாழவில்லையா? நீங்கள் கேட்பது சரியே. ஆனால் அவர்களின் வாழ்க்கையை உற்று பார்த்தீர் களானால் அவர்கள் எப்படி சீக்கிரமாய் பெற்றுக்கொண்டார்களோ அப்படியே சீக்கிரம் காணாமல் போய்விடும். நீதிமொழிகள் 20:21. இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் சவுல் என்ற அரசரை நியமித்தார். காணாமல் போன கழுதையை தேடிச்சென்ற அவரை சாமுவேல் என்ற இறைவாக்கினர் ஆண்டவரின் திருவுளசித்தப்படி சவுலை திருநிலைப்படுத்தி இஸ்ரயேல் மக்களுக்கு அரசராக நியமித்தார். சவுல் அரசராக பொறுப்பெடுத்து அந்நாட்டை ஆட்சி செய்த பொழுது நிறைய தடவைகளில் ஆண்டவரின் வார்த்தை மீறி செயல்படுவதாக 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதனால்...
Like this:
Like Loading...
அன்பானவர்களே! நம்முடைய நற்கருணையின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நம்முடைய ஆண்டவர் பாலகனாய் இந்த உலகத்தில் தோன்றி நம் எல்லோருக்காகவும், ஏன் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனுஷனுக்காகவும்,அவருடைய தோளில் சிலுவையை சுமந்து நம் ஒவ்வொருவருடைய பாவத்துக்காகவும் சிலுவையில் அடிக்கப்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும் நமக்காக சிந்தி அவரின் உயிரை கொடுத்து நம்மை மீட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.எசாயா 53ம் அதிகாரத்தை முழுதும் வாசித்து பார்த்தால் நன்கு புரியும். பிரியமானவர்களே! இப்படிப்பட்ட ஆண்டவரை நாம் தெய்வமாக கொண்டுள்ளது எத்தனை விசேஷித்தவர்கள் நாம்.அவருடைய உடலை அப்பமாகவும்,அதாவது நற்கருணையாகவும்,அவர் இரத்தத்தை திராட்சரசமாகவும் பருகும் நாம் அவரின் எண்ணங்களின்படி வாழ்கிறோமா? என்று யோசித்து பார்ப்போம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரே இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்குள் எத்தனை பிரிவினைகள், எத்தனை ஜாதிகள்?. அவர் உடல் என்ன ஜாதியோ, நாம் எல்லாரும் அந்த ஜாதியே! அவரின் இரத்தம் என்ன மதமோ, நாம் எல்லோரும் அந்த மதமே. கிறிஸ்துவர்கள் என்று பெயர்...
Like this:
Like Loading...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! உங்கள் யாவருக்கும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் விலையுயர்ந்த பொக்கிஷம் என்றால் அது நம்முடைய வேதமே! ஏனெனில் வேதத்தின் மூலம் நாம் நல்லது எது? கெட்டது எது? வாழ்வா,சாவா? அனுதின வாழ்க்கையின் போராட்டத்தில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், ஆசீர்வாதமா? சாபமா? எல்லாவற்றுக்கும் பதில் அதில் இருக்கிறது. அனுதினமும் வேதத்தை வாசித்து தியானித்து அதன்படி நடந்தோமானால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. பயத்திலிருந்து விடுதலை, ஆபத்திலிருந்து பாதுக்காப்பு, நோயிலிருந்து சுகம், கடன் பிரச்சனையிலிருந்து சுதந்திரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் அதற்கு நாம் செய்ய வேண்டிய வேலை தினமும் காலையில் எழுந்து வேதத்தை வாசித்து ஆண்டவரை நோக்கி ஜெபித்துவிட்டு அந்த நாளுக்குரிய எல்லா காரியத்தையும் அவர் பாதபடியில் வைத்துவிட்டு அவர் சித்தப்படி நடந்துக்கொண்டால் இந்த உலகத்திலே நாம்தான் சிறந்தவர்கள். எல்லாம் நமக்கு கூட்டியே கிடைக்கும். மத்தேயு 6 :33. ஆனால் நாமோ அப்படிப்பட்ட விலையுயர்ந்த பொக்கிஷத்தை ஏதோ ஒரு மூலையில்...
Like this:
Like Loading...