Tagged: இன்றைய வசனம் தமிழில்
இறைஇயேசுவில் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு தவக்கால வாழ்த்துக்களை சொல்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். நம்மை இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு அழைத்து வந்த நம் இயேசுவின் குணங்களை நாமும் பெற்று அவரின் திருவுளச் சித்தத்தை நிறைவேற்ற அவர் பாதம் பணிந்திடுவோம். அவர் சிலுவை சுமப்பதற்கு முன் நமக்கு கற்றுக்கொடுத்த அறிவுரைகளை நாமும் அப்படியே கடைப்பிடிப்போம். கடவுளின் மைந்தனாய் வந்த அவரே, அவரின் தந்தைக்கு எவ்வளவாய் கீழ்படிந்து நடந்தார் என்றால் நாம் இன்னும் எவ்வளவு கீழ்படிய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவோம். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம் என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது” என்றார். மத்தேயு 11 :29 , 30. இந்த நாளிலும் நாம் ஆண்டவரைப்போல் நம்மை மாற்றி ஒரே மனத்தவராய் இருக்கவும், உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகவும், நம்மையே அறிவாளி என்று கருதாமல் பிறரையும் மதித்து வாழ்ந்து இந்த...
Like this:
Like Loading...
அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள். நம் ஆண்டவராகிய இயேசு நமக்கு ஆயிரக்கணக்கில் வேதத்தின் மகத்துவங்களை [திருச்சட்டங்களை ] எழுதி கொடுத்திருந்தாலும் நாம் அவைகளை பற்றிக்கொள்ளாமல், அவைகள் நமக்கில்லை யாருக்கோ என்று அலட்சியப்படுத்தி விட்டு பிறகு துன்பங்களும், துயரங்களும் வரும்பொழுது மனம் சோர்ந்து போய்விடுகிறோம். ஓசேயா 8:12. ஆண்டவராகிய இயேசு 40 நாள் இரவும், பகலும் நோன்பிருந்து பின் சாத்தானால் சோதிக்கப்படும்படி பாலை நிலத்திற்கு தூய ஆவியால் அழைத்துச்செல்லப்பட்டார் என்று மத்தேயு 4:1,2. ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். அவருக்கே அந்த நிலை என்றால் நமக்கு எப்படி என்று இந்த தவக்காலத்தில் யோசிப்போம். நமக்காக பிறந்து வளர்ந்து நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து பின்னர் அந்த சிலுவையிலே அடிக்கப்பட்டு, அந்த நேரத்திலும் நமக்காக பரிந்து பேசி, நமக்காக வேண்டுதல் செய்கிறார். இந்த மகத்துவமான ஆண்டவரின் சிந்தனைகளை, அவர் மனவிருப்பத்தை நாம் அறிந்து அவர் விரும்பும் வழியில் நடந்து அவருக்கு மகிமை சேர்ப்பதே இந்த தவக்காலத்தின் சிறப்பாகும். ஏதோ கடனே என்று வாழாமல் வாழ்க்கையின்...
Like this:
Like Loading...
அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் அன்பான நல்வாழ்த்துக்கள். கடவுள் மனித அவதாரம் எடுத்து நம்மை மீட்கும் பொருட்டு இந்த உலகில் பிறந்து வளர்ந்து பலப்பல நன்மைகளை செய்து கடைசியில் தம்முடைய உயிரையும் கொடுத்து சிலுவையில் அடிக்கப்பட்டு ஈட்டியால் குத்தப்பட்டு மரித்தார் என்று வாசிக்கிறோம். இதை எல்லாம் ஏன் செய்தார்? இருளில் இருக்கும் நம் ஒவ்வொருவரையும் ஒளியினிடத்திற்கு அழைத்து செல்லவே இவ்வாறு செய்தார். ஆனால் நாமோ ஒளியான அவரை அறிந்துக்கொள்ளாமல் இருக்கிறோம். தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கே கடவுளாகவும் இருந்தது. அனைத்தும் அவரால் உண்டாயின. அவரால் இன்றி எதுவும் உண்டாகவில்லை. அவரிடமே வாழ்வு இருந்தது. அவ்வாழ்வே மனிதருக்கு ஒளியாக இருந்தது. ஒளியாக வந்த அவர் இருளை விரட்டி அடித்தார். இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் வாழ்வளிக்கும் தெய்வமாக வந்த அவரை ஏற்றுக்கொண்டு நாமும் இந்த தவக்காலத்தில் அவர் விரும்பும் செயல்களை செய்து அவரின் நாமத்திற்கே மகிமை சேர்க்க கடனாளியாக இருக்கிறோம். அன்பானவர்களே நாம் யாவரும் அவரின் வார்த்தையாகிய வாக்குகளை கடைப்பிடித்து அவர் தரும் தீர்ப்பில்...
Like this:
Like Loading...
எனக்கு பிரியமான ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள். போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இந்த உலகத்தில் வாழும் நாம் பல நேரங்களில், என்மேல் அன்பு காட்ட யாரும் இல்லையே என்றும் எனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லையே என்று ஏங்கித்தவிக்கிறோம். தனிமையில் வாடும் உங்களை இன்று நம்முடைய ஆண்டவராகிய மீட்பர் என் மகனே! என் மகளே! என்றும் அன்பு செல்லங்களே! நீங்கள் ஏன் மனம் கவலைப்படுகிறீர்கள்? ஏன் தவிக்கிறீர்கள்? இதோ உங்களுக்காக நான் இருக்கிறேன். உங்கள் தேவைகளை எல்லாம் சந்தித்து உங்களை காப்பாற்ற நான் காத்திருக்கிறேன்என்று சொல்கிறார். பால்குடிக்கும் தன் பிள்ளையை ஒரு தாய் மறப்பாளோ? கருவில் சுமந்த தன் குழந்தை மீது இரக்கம் காட்டாமல் இருப்பாளோ? ஒருவேளை அந்த தாய் மறந்தாலும் நான் உங்களை மறக்கவே மாட்டேன் என்று இன்று நமக்கு வாக்கு அளிக்கிறார். எசாயா 49:15. இதோ நான் உங்களை என் உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளேன். உங்கள் பாதைகள் எப்பொழுதும் என் கண்முன்னே இருக்கிறது என்று கூறுகிறார். ஏசாயா...
Like this:
Like Loading...
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் எங்கள் அன்பான நல்வாழ்த்துக்கள். நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்து இந்த உலகில் வந்து வாழ்ந்து நம் ஒவ்வொரு தேவைகளையும் சந்தித்து நமக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அளித்து தமது கிருபையினால் நம்மை மீட்டெடுத்து நமக்கு நல்வாழ்க்கையை தந்தருளியிருக்கிறார். கடவுள் நம்மை உருவாக்கி பெயர் சொல்லி அழைத்து நம் வலக்கரம் பிடித்து வழிநடத்தி காத்து வருகிறார். நிலையற்ற இந்த உலகில் நாம் மகிழ்ந்து வாழ்ந்திருக்கும்படி நம் குற்றங்களைக் கார்மேகம் போலும் நம் பாவங்களை பனிபடலம் போலும் அகற்றி பிள்ளைகளே என்னிடம் திரும்பி வாருங்கள் நான் உங்களுக்கு மீட்பு அளித்துவிட்டேன் என்று சொல்கிறார். எசாயா 44:22. நாம் நமது தேவைகளையும், எண்ணங்களையும் அவரிடம் ஒப்புக்கொடுத்து நம் விருப்பங்களை நிறைவேற்றி கொள்ளலாம். அதற்காக தானே இந்த உலகில் வந்தார். தமது உயிரை கொடுத்தார். அதனால் நாம் கலங்காமல், அஞ்சாமல் அவருடைய சாட்சிகளாய் வாழ்வோம். நம்மை படைத்தவரும், உருவாக்கியவருமான நம் ஆண்டவர் கூறுவதை பாருங்கள். அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன்:உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ எனக்கு...
Like this:
Like Loading...