Tagged: இன்றைய வசனம் தமிழில்

நம்மை வழிநடத்திச் செல்பவர் நம் கடவுளாகிய ஆண்டவரே! இ.ச 9:3.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். கடவுள் நம்மை ஒவ்வொருநாளும் ஆசீர்வதித்து கரம் பிடித்து வழிநடத்தி செல்லவேண்டுமானால் நாம் அவரை அதிகாலையில் தேடவேண்டும். எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன். என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள் என்று நீதிமொழிகள் 8:17 ல் வாசிக்கிறோம். ஒரு நண்பரையோ, அல்லது உறவினர்களையோ நமக்கு பிடித்த நபர்களை காணவேண்டுமானால் நாம் எவ்வளவோ நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கிறோம். ஆனால் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய கடவுளுக்கு நாம் எவ்வளவு நேரத்தையும், பணத்தையும் கொடுக்கிறோம் என்று யோசித்துப்பாருங்கள். ஏனெனில் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் கடவுளின் கையில் உள்ளது. அவரே நம்முடைய எதிரிகளின் கையினின்றும் நம்மை துன்புறுத்துவோரின் கையினின்றும் விடுவிக்கிறார். திருப்பாடல்கள் 31:15. கடவுளிடம் அடைக்கலம் புகுந்துள்ளோர் ஒருபோதும் வெட்கமடைய விடமாட்டார்.நம் துன்பத்தை பார்த்து இருக்கிறார்.நமது இக்கட்டுகளை அறிந்திருக்கிறார்.என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது. ஆம்,என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது. துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது: என் எலும்புகள் தளர்ந்து போகின்றது திருப்பாடல்கள் 31:10ல் வாசிப்பது...

பயப்படாதே,[அஞ்சாதே]நான் உங்களுடன் இருக்கிறேன்.எசாயா 43:5.

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். வேதத்தில் 365 நாட்களுக்கும் 365 பயப்படாதே என்ற வார்த்தை இருக்கிறது. இது எதை குறிக்கிறது என்றால் நாம் ஒவ்வொருநாளும் பயப்படாமல் இருக்கும்படி நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. நாமும் இந்த வார்த்தையை பயன்படுத்தி ஜெபம் செய்து தைரியம் உள்ளவர்களாக மாறுவோம் நானும் எதற்க்கெடுத்தாலும் பயந்த சுபாவத்துடன் இருந்தேன். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை தினமும் வாசித்து தியானிக்கும் பொழுது என் பயம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன், கலங்காதே, நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன். என் நீதியின் வலது கரத்தால் உன்னை தாங்குவேன். எசாயா 41:10 ல் வாசிக்கலாம். நம்மை உண்டாக்கியவரும், நம் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கியவரும் நமக்கு உதவி செய்பவரும் அவரே. நான் தேர்ந்துக்கொண்ட எசுரூன் பயப்படாதே நீ அவமானதுக்குள்ளாக மாட்டாய்: வெட்கி நாணாதே. இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய் உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன்...

தொண்டு ஆற்றவும்,தம் உயிரைக்கொடுக்கவும் வந்தவர் நம் இயேசு கிறிஸ்து. மத்தேயு 20:28.

இயேசுகிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்ஆண்டவரின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! நம்முடைய கடவுள் 2000 வருஷங்களுக்கு முன் இந்த உலகத்தில் வந்து நமக்கு தொண்டு ஆற்றவும், அவருடைய இரத்தத்தை கொடுத்து நமக்கு மீட்பு அளிக்கவும், தமது உயிரையே கொடுத்தார். மத்தேயு 20:28. கடவுளாகிய அவரே தொண்டு ஏற்பதற்கு வராமல் தொண்டு ஆற்றுவதற்காகவே வந்திருக்கிறார். அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட நாமும் அவர் காட்டிய பாதையில் நடந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்ற இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நல்லதொரு முடிவு எடுத்து மற்றவர்களுக்கு நம்மால் முடிந்தஉதவிகளை செய்ய மனவுருதிக்கொள்வோம். மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வர்: அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர். நீதிமொழிகள் 19:3. இதில் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள்? முடிவு உங்களின் கையில் தான் இருக்கிறது.எது நல்லது, எது கேட்டது என்று சிந்தித்து செயல்படும் அறிவை ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். அவருக்கு பயந்து, கீழ்படிந்து நடப்போமானால் நாம் ஒன்றுக்கும் கவலைப்பட தேவையில்லை. எப்பேர்பட்ட கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்ற அவர் வல்லவர்,...

ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கத்தை தருபவர் நம் கடவுள். இணைச்சட்டம் 7:9.

கடவுளுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இதோ!இந்த நாளிலும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு காட்டிய பாதையில் நம் வாழ்க்கை பயணம் செல்லுமேயானால்,நம்முடைய வாழ்க்கை மட்டும் அல்லாது நமக்கு பின் வரும் நமது சந்ததியும் ஆசீர்வாதத்தை பெற்று வாழும் என்பதில்சிறிதேனும் சந்தேகம் இல்லை. நம் முன்னோர்களாகிய ஆபிரகாம்,ஈசாக்கு,என்பவர்களுக்கு நம் கடவுள் வாக்குத்தத்தம் செய்தபடியே,அவர்களின் பின்வந்த சந்ததி எத்தனையோ பாவங்களை செய்து ஆண்டவரின் நாமத்தை அலட்சியப்படுத்தினாலும் வாக்கு மாறாத நம் கடவுள் அவர்களுக்கு ஆணையிட்டப்படியே  அவர்கள் சந்ததியாரும் ஆசீர்வதிக்கப்பட அவர்கள்மேல் இரக்கம் பாராட்டுவதை திருச்சட்டத்தில் காணலாம். ஆகையால் நாம் கடவுளிடம் கேட்கும் காரியத்தை பெற்றுக்கொள்ள அவர் காட்டிய வழியில் நடந்து அவருடைய சினம் நமக்கு எதிராக செயல்பட்டு நம்முடைய ஆசீரை அழிக்காதபடிக்கு காத்துக்கொள்வோம். ஏனெனில் நம்முடைய கடவுளாகிய ஆண்டவரின் தூயமக்கள் நாம். அதுமட்டுமல்லாது இந்த பூமியில் உள்ள மக்களினங்களில் நம்மையே தம் சொந்த மக்களாக தெரிந்துக்கொண்டார். நாம் மிகவும் நல்லவர்கள் என்ற காரணத்தினால் அல்ல. நம்மீது அவர் காட்டிய அளவுக்கதிகமான அன்பினாலும், நம் முன்னோர் களுக்கு...

கடவுள் நமக்கு விதித்த வழிகளில் நடப்போம். இணைச்சட்டம் 5:33.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம் ஆண்டவராகிய கடவுள் நமக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்தவும்,செப்புக்கதவுகளை,உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை தகர்த்து இருளில்  மறைத்து வைத்த கருவூலங்களை யும்,புதையல்களையும்,தர காத்திருக்கிறார்.ஏனெனில் நம்மை பெயர் சொல்லி அழைத்த ஆண்டவர் அவரே என்று நாம் அறியும்படிக்கு இதை செய்கிறார். எசாயா 45:2,3. ஆகையால் நாம் அதை பெற்றுக்கொள்ள நம்மை தகுதிப்படுத்த வேண்டுமாய் விரும்புகிறார். நாம் அவர் விதித்த வழிகளில் நடந்தால் நிச்சயம் அவைகளை எல்லாம் பெற்றுக்கொள்வோம் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. ஒளியை உண்டாக்கி, இருளை படைத்து நல்வாழ்வை அமைத்து கொடுப்பவர் அவரே. உலகை உருவாக்கி அதின்மேல் மனிதரை படைத்து, வானத்தை விரித்தவரும் அவரே.அவரின்றி கடவுள் இல்லை. நீதியுள்ளவரும்,மீட்பு அளிப்பவரும் அவரே, முழங்கால் அனைத்தும் அவர்முன் மண்டியிட செய்கிறவரும் அவரே. இத்தனை வல்லமை உள்ள தேவனின் திருவுளத்தை அறிந்து அவருக்கு பிரியமாய் நடந்து இந்த தவக்காலத்திலும் அவரின் பிள்ளைகள் என்ற நற்பெயரை பெற்றுக்கொள்வோம்.அப்பொழுது நாம் நினைப்பதற்கு மேலான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம். அவர் நமக்கு...