Tagged: இன்றைய வசனம் தமிழில்
கடவுளுக்குள் அன்பான சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். பெண்ணாய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்று நாம் படித்திருக்கிறோம். அதே சமயத்தில் ஒரு பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வதையும் படித்திருக்கிறோம். வானத்தையும், பூமியையும் படைத்த கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத,மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். தொடக்க நூல் 2:7. அதுபோல் ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உருவாக்கி அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. தொடக்கநூல் 2:19. ஆனால் பெண்ணை கடவுள் மண்ணினால் உருவாக்கவில்லை. மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல என்று நினைத்து அவனுக்கு ஒரு துணையை ஏற்படுத்த நினைத்து அவனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்து அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்து அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி அந்த மனிதனுக்கு கொடுத்தார் என்று அதே அதிகாரம் 2:21,22ல் வாசிக்கலாம். இதிலிருந்து...
Like this:
Like Loading...
அன்பும், பாசமும் நிறைந்த அன்பின் நெஞ்சங்களுக்கு நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நம்முடைய இதயங்களை சோதித்து பார்ப்போம். இதயம் என்ற நிலத்தில் விதைக்கப்பட்ட வசனத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? மேலோட்டமாக வாசித்து விட்டுவிடுகிறோமா? அல்லது வாசித்து, தியானித்து அதன்படியே வாழ்ந்து நமது வாழ்க்கையில் உண்மையோடும், தூய்மையொடும் இருந்து அந்த வசனம் முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பலன்தரும்படி செயல் படுகிறோமா?என்று யோசித்து பார்ப்போம். மத்தேயு 13:8,23 , மாற்கு 4:20 , மற்றும் லூக்கா 8:8. இறைவார்த்தைகளை ஒவ்வொருநாளும் கேட்டு அதை உறுதியாக பற்றிக்கொண்டு சோதனை காலங்களிலும் சோர்ந்து போகாமல் கடவுள்மேல் முழு நம்பிக்கையை வைத்து அவரையே நோக்கி பார்த்து நம் தேவைகளை தந்தருள வேண்டுமாய் அவரின் பாதத்தை பற்றிக்கொள்வோம். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது நாம் எப்படி வாழவேண்டும் என்று பல உவமைகள் மூலம் நமக்கு விளக்கி காட்டியுள்ளார். வழியோரம் விதைக்கப்பட்டவர்கள் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தைகளை கேட்டு புரிந்து கொள்ள மாட்டார்கள். பாறைப்பகுதியில் விதைக்கப்பட்டவர்கள் இறைவார்த்தையை கேட்டவுடன் மகிழ்ச்சியோடு...
Like this:
Like Loading...
அன்பும்,பாசமும்,நிறைந்த இணையதள நெஞ்சங்களுக்கு,நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் வாழும் ஒருவரிலாவது பாவமே செய்யாத மனுஷர் கிடையாது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக பாவம் செய்கிறோம். அதனால் தான் கடவுள் மனுவுறுக்கொண்டு இந்த பூமியில் இறங்கி வந்தார். பூமிக்கு வந்தது மட்டுமல்லாமல் தமது உயிரையே கொடுத்தார். அதுவும் நாம் நேர்மையாளர் என்ற காரணத்துக்காக அல்ல. ஒருவேளை ஒரு நேர்மையாளருக்காக ஒருவர் தனது உயிரை கொடுக்கலாம். அதுவே அரிதான செயலாக இருக்கும் பொழுது நாம் பாவிகளாய் இருந்தபொழுது கிறிஸ்து நமக்காக தமது உயிரைக்கொடுத்தார். உயிரையே கொடுத்து தமது அன்பை வெளிப்படுத்தி நம்மை மீட்டுக்கொண்டார். ரோமர் 5:8. மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என இயேசுவே லூக்கா 15:10ல் கூறுகிறார். ஏனெனில் அவர் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறவர். அதனால்தான் அவர் நேர்மையாளரை அழைக்க வராமல் பாவிகளையே அழைக்க வந்தார். மத்தேயு 9:13. நோயுற்ற ஒருவருக்கு ஒரு குணமாக்கும் மருத்துவர் எவ்வளவு அவசியமோ,...
Like this:
Like Loading...
அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இன்றும் கண்ணீரோடு, கவலையோடு எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையே, என்னை நேசித்து என்மேல் அன்பு காட்ட ஒருவரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கிறீர்களா? நீங்கள் விடும் பெரும் மூச்சை ஆண்டவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார் . உங்களுக்கு நேரிட்ட தீங்கை நினைத்து மனம் இரங்கி உங்கள் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற உங்களுக்காக காத்திருக்கிறார். இரவும்,பகலும் வெள்ளமென கண்ணீர் விடும் உங்கள் விண்ணப்பத்தையும், ஜெபத்தையும் கேட்கிறார். அதற்கு நாம் முதற்சாமத்தில் எழுந்து நம் உள்ளத்தில் உள்ளதை அவர்முன் நம் விண்ணப்பத்தை தண்ணீரைப்போல் ஊற்றும்படி கூறுகிறார். தாம் தேர்ந்துக்கொண்டவர்கள் அல்லும், பகலும் தம்மை நோக்கி கூக்குரல் இடும்பொழுது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ? அவர்களுக்கு துணை செய்ய காலம் தாழ்த்துவாரோ? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று இயேசு நமக்கு வாக்கு அளிக்கிறார். லூக்கா 18:7. நாம் ஞானமுள்ளவர்களாய் நடந்து நேர்மையானவற்றை பேசினால் கடவுளின் உள்ளம் மகிழ்ந்து நம் விண்ணப்பத்தைக் கேட்கும். வளமுடன் இருக்கும்...
Like this:
Like Loading...
அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம் கடவுள் நம்முடைய வேண்டுதல்களை கேட்டு நம் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய ஆவல் உள்ளவராய் நமது அருகில் இருந்து பார்த்துக்கொண்டு என் மகனே,என் மகளே,உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்பதை தர ஆவலாய் இருக்கிறேன் நீ என் சித்தப்படி கேட்டால் அதை உனக்கு நிச்சயம் தருவேன்,என்று சொல்கிறார்.ஆகையால் நாம் அவர் நமக்கு அருளிய வாக்கின் படியே கேட்டு அவரிடத்தில் இருந்து நமக்கு தேவையான ஆசீர் வாதங்களை எல்லாம் கேட்டு பெற்றுக்கொள்வோமாக! ஆண்டவர் நம்மை எந்த அளவு நேசிக்கிறாரோ அந்த அளவு நம்மை சோதித்து பார்ப்பார். நாம் அதை அறிந்து எந்த சோதனையிலும் மனம் சோர்ந்து போகாமல் அவரின் பாதமே தஞ்சம் என்று அவரையே பற்றிக்கொண்டால் நமக்கு மனம் இரங்கி,நம் மேல் மனதுருகி நம் வேண்டுதலை நமக்கு அருளிச் செய்வார்.ஒரு சிறு குழந்தையை ஒரு தாய் குழந்தையின்...
Like this:
Like Loading...