Tagged: இன்றைய வசனம் தமிழில்
கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இதோ இந்த நாளிலும் நான் நினைத்த காரியம் எனக்கு கிடைக்கவில்லையே என்று தவிக்கும் உங்களைப் பார்த்து ஆண்டவர் என் மகனே, என் மகளே நீங்கள் கலங்க வேண்டாம், இதோ உங்களுக்கு நன்மை கிடைக்கும்படி நான் உங்களோடு இருக்கிறேன் என்று வாக்கு அருளுகிறார். நான் உங்கள் மேல் வைத்திருக்கும் நினைவுகள் தீமைக்கானவைகளல்ல. அதை நன்மையாக மாற்றி உங்கள் தேவைகள் யாவையும் ஏற்ற நேரத்தில் செய்து கொடுப்பேன். அதற்காகவே நான் எப்பொழுதும் உங்கள் கூடவெ இருக்கிறேன் என்கிறார். நாம் எல்லோரும் விரும்பும் ஒரு காரியம் நாம் நினைத்ததை உடனே செய்யவேண்டும், அந்த காரியம் உடனே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் கடவுள் எல்லாவற்றிக்கும் ஒரு கால நேரத்தை குறித்து வைத்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறக்க ஒரு காலம், இறக்க ஒரு காலம், நட ஒரு காலம், நட்டதை அறுவடை செய்ய ஒரு காலம்,...
Like this:
Like Loading...
அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்பிக்கையோடு காத்திருக்கும் நம்மை பார்த்து நம் ஆண்டவர், நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக்கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்:இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன், என்று செக்கரியா 9: 12ல் கூறுகிறார். நாம் பல நேரங்களில் பலப்பல பாவங்களை செய்துவிடுகிறோம். நம்முடைய அவசர புத்தியினாலும், கோபத்தினாலும், சுயநலத்தினாலும், தற்புகழ்ச்சியின் காரணத்தினாலும் அவ்வாறு செய்துவிடுகிறோம். ஆனால் அன்பே உருவான நம்முடைய தேவன் நம் பாவங்களை மன்னித்து நம்முடைய குற்றம் குறைகளை நம்மிடத்தில் இருந்து நீக்கி நமக்காக சிலுவை சுமந்து, அடிக்கப்பட்டு தமது இரத்தத்தை கொண்டு நம்மை சுத்திகரித்த வண்ணமாய் தமது ஜீவனையே கொடுத்து நம்மை மீட்டு என் பிள்ளைகளே இன்றே நீங்கள் அரணுக்குத் திரும்புங்கள் என்று சொல்கிறார். நம்மில் எத்தனை பேர் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அவருக்கு பயந்து நடக்கிறோம்,என்று நாம் ஒவ்வொருவரும் நமது இருதயத்தை ஆராய்ந்துப் பார்ப்போம். ஏனெனில் நம்முடைய இருதயத்தில் தங்கியிருக்கும் தூய ஆவியானவர் நாம் செய்யும் செயல்களுக்கு...
Like this:
Like Loading...
இறைஇயேசுவில் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு தவக்கால வாழ்த்துக்களை சொல்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். நம்மை இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு அழைத்து வந்த நம் இயேசுவின் குணங்களை நாமும் பெற்று அவரின் திருவுளச் சித்தத்தை நிறைவேற்ற அவர் பாதம் பணிந்திடுவோம். அவர் சிலுவை சுமப்பதற்கு முன் நமக்கு கற்றுக்கொடுத்த அறிவுரைகளை நாமும் அப்படியே கடைப்பிடிப்போம். கடவுளின் மைந்தனாய் வந்த அவரே, அவரின் தந்தைக்கு எவ்வளவாய் கீழ்படிந்து நடந்தார் என்றால் நாம் இன்னும் எவ்வளவு கீழ்படிய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவோம். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம் என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது” என்றார். மத்தேயு 11 :29 , 30. இந்த நாளிலும் நாம் ஆண்டவரைப்போல் நம்மை மாற்றி ஒரே மனத்தவராய் இருக்கவும், உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகவும்,...
Like this:
Like Loading...
அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம் ஆண்டவராகிய கடவுள் நமக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்தவும்,செப்புக்கதவுகளை,உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை தகர்த்து இருளில் மறைத்து வைத்த கருவூலங்களை யும்,புதையல்களையும்,தர காத்திருக்கிறார்.ஏனெனில் நம்மை பெயர் சொல்லி அழைத்த ஆண்டவர் அவரே என்று நாம் அறியும்படிக்கு இதை செய்கிறார். எசாயா 45:2,3. ஆகையால் நாம் அதை பெற்றுக்கொள்ள நம்மை தகுதிப்படுத்த வேண்டுமாய் விரும்புகிறார். நாம் அவர் விதித்த வழிகளில் நடந்தால் நிச்சயம் அவைகளை எல்லாம் பெற்றுக்கொள்வோம் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. ஒளியை உண்டாக்கி, இருளை படைத்து நல்வாழ்வை அமைத்து கொடுப்பவர் அவரே. உலகை உருவாக்கி அதின்மேல் மனிதரை படைத்து, வானத்தை விரித்தவரும் அவரே.அவரின்றி கடவுள் இல்லை. நீதியுள்ளவரும்,மீட்பு அளிப்பவரும் அவரே, முழங்கால் அனைத்தும் அவர்முன் மண்டியிட செய்கிறவரும் அவரே. இத்தனை வல்லமை உள்ள தேவனின் திருவுளத்தை அறிந்து அவருக்கு பிரியமாய் நடந்து இந்த தவக்காலத்திலும் அவரின்...
Like this:
Like Loading...
கடவுளுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இதோ!இந்த நாளிலும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு காட்டிய பாதையில் நம் வாழ்க்கை பயணம் செல்லுமேயானால்,நம்முடைய வாழ்க்கை மட்டும் அல்லாது நமக்கு பின் வரும் நமது சந்ததியும் ஆசீர்வாதத்தை பெற்று வாழும் என்பதில்சிறிதேனும் சந்தேகம் இல்லை. நம் முன்னோர்களாகிய ஆபிரகாம்,ஈசாக்கு,என்பவர்களுக்கு நம் கடவுள் வாக்குத்தத்தம் செய்தபடியே,அவர்களின் பின்வந்த சந்ததி எத்தனையோ பாவங்களை செய்து ஆண்டவரின் நாமத்தை அலட்சியப்படுத்தினாலும் வாக்கு மாறாத நம் கடவுள் அவர்களுக்கு ஆணையிட்டப்படியே அவர்கள் சந்ததியாரும் ஆசீர்வதிக்கப்பட அவர்கள்மேல் இரக்கம் பாராட்டுவதை திருச்சட்டத்தில் காணலாம். ஆகையால் நாம் கடவுளிடம் கேட்கும் காரியத்தை பெற்றுக்கொள்ள அவர் காட்டிய வழியில் நடந்து அவருடைய சினம் நமக்கு எதிராக செயல்பட்டு நம்முடைய ஆசீரை அழிக்காதபடிக்கு காத்துக்கொள்வோம். ஏனெனில் நம்முடைய கடவுளாகிய ஆண்டவரின் தூயமக்கள் நாம். அதுமட்டுமல்லாது இந்த பூமியில் உள்ள மக்களினங்களில் நம்மையே தம் சொந்த மக்களாக தெரிந்துக்கொண்டார். நாம் மிகவும் நல்லவர்கள்...
Like this:
Like Loading...